கடவுள் இருப்பது உண்மையா? ஏன் நம்புகிறான் மனிதன்?

 


 

இதுவரை அறிவியல் பூர்வமாக கடவுள் இருப்பது நிரூபிக்கப்படவில்லை . இதுவரை எவரும் கடவுளை கண்களால் கண்டதில்லை . இருந்தும் அறிவியல் அறிஞர்கள் , படித்தவர்கள் உட்பட பலரும் கடவுளை நம்புகின்றார்கள் .



மற்ற அனைத்திலும் அறிவியல்பூர்வமாக  நிரூபிக்கப்பட்டால்தான் ஒப்புக்கொள்வோம் என சொல்கின்ற மனிதன் , கடவுள் விசயத்தில் மட்டும் அறிவியலை நம்புவதில்லை .

 

கடவுள் மீது அவ்வளவு பற்றா என ஆச்சர்யப்பட்டவர்களில்  நானும் ஒருவன்

 

 

நம்மை மீறிய சக்தி ஒன்றுதான் நம்மையெல்லாம் படைத்து இயக்கிக்கொண்டு இருக்கிறார் , நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அவரே காரணமென்று சொல்வது வழக்கமான ஒன்று .


ஆனால் உலகம் உருவானதற்கும் நிகழ்வுகள் நடப்பதற்கும் கடவுள் போன்ற மூன்றாம் நபரின் சக்தி காரணமல்ல என்பது புகழ்பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்  அவர்களின் கருத்து .



இதற்கு உதாரணமாக அவர் இவ்வாறு கேள்வியெழுப்புகிறார் ,

ஒரு பந்தை டென்னிஸ் மட்டையால் அடிக்கும்போது பந்து முன்னோக்கி சென்று விழுவது இயற்கையான ஒன்று . பந்து விழுவதற்கு காரணம் அதன் மீது கொடுக்கப்படுகின்ற ஆற்றல் மற்றும் புவி ஈர்ப்பு விசை . இந்த இரண்டுமே இயற்கையாக அமைந்த ஒன்று .

 

ஆனால் அதே பந்து இயற்கைக்கு முரணாக பின்னோக்கி சென்று விழுமாயின் அங்கு மூன்றாம் நபரின் (கடவுள்) சக்தி செயல்பட்டிருக்கிறது எனலாம். ஆனால் அப்படியொன்று நடக்குமா? இது ஓர் உதாரணம் தான் . இதனைபோலவே தான் நடக்கின்ற அனைத்திற்கும் காரணமென்று ஒன்று இருந்தே தீருகிறது . 


பிறகு எதற்கு மனிதன் கடவுளை நம்புகிறான் , சோதனைக்கு உட்படுத்த மறுக்கிறான் , யாரேனும் கடவுள் இல்லையென்று சொன்னாலும் ஒப்புக்கொள்ள மறுக்கிறான் ?

 

இத்தனை கேள்விகளுக்கும் ஒரே ஒரு பதில்தான் “நடப்பவைக்கு தான் தான் காரணமென்று ஒப்புக்கொள்வதற்கு பயப்படும் மனிதன் , கடவுளை காரணகர்த்தாவாக்கிவிட்டு தப்பித்து கொள்கிறான் . தனது சுமைகளை கடவுளிடம் ஒப்புவித்துவிட்டு தனக்கு சம்பந்தம் இல்லாதவனை போல நடந்துகொள்வது மனிதனுக்கு சுலபமாயிருக்கிறது , நிம்மதியளிக்கிறது “

 

இந்த பதிவு ஆரோக்கியமான விவாதத்திற்கு மட்டுமேயானது.

 

தொடர்ந்து பேசுவோம்


பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “கடவுள் இருப்பது உண்மையா? ஏன் நம்புகிறான் மனிதன்?

  • February 15, 2020 at 6:47 am
    Permalink

    வணக்கம் ஐயா!
    நான், கடவுளை காண்பதற்காக சத்யலோகம் சென்ற என் பயண அனுபவத்தை, ஒரு கட்டுரை
    வடிவில் எழுதியிருக்கிறேன். இதை நீங்கள் ஒரு முறையேனும் படிக்க வேண்டுகிறேன்!
    நன்றி ஐயா!
    http://www.eppoluthu.blogspot.in

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *