ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட 100% வாய்ப்பு | தமிழக அரசு விழித்துக்கொள்ளுமா?

 


 

போராட்டத்தை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசால் மூடப்பட்டவுடன் பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது வேதாந்தா குழுமம் . விசாரித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் அவர்களை நியமித்தது தீர்ப்பாயம் . அவர்  ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சட்டவிரோதமானது , ஆலையை திறக்க உத்தரவிடலாம் என பரிந்துரைத்துள்ளார் .

 


 

அரசின் சார்பாக கருத்து தெரிவித்துள்ள கடம்பூர் ராஜு ஸ்டெர்லைட் ஆலை குறித்து தனிநபர் அறிக்கை எப்படி இருந்தாலும் தமிழக அரசின் முடிவே இறுதியானது என தெரிவித்தார்.

 

 

இது உண்மையா ? தமிழக அரசால் மட்டுமே இறுதி முடிவு எடுக்க முடியுமா ? வாங்க பார்க்கலாம் .

 


தமிழக அரசு எடுப்பதே இறுதி முடிவாக இருக்க முடியாது . கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கலாம் ஆனால் ஏற்கனவே அனுமதியளித்து இயங்கிக்கொண்டு இருக்கக்கூடிய நிறுவனத்தை மூட அந்த அதிகாரத்தை பயன்படுத்திட இயலாது .

 



நீதிபதியின் அறிக்கையின்படி   , போராட்டம் நடந்து 13 பேர் இறந்தவுடன் எதிர்தரப்பினை கேட்காமலே நிறுவனத்தை மூட தமிழக அரசு உத்தரவிட்டது தவறு .

 



வேதாந்தா குழுமத்தை விட்டுவிடுங்கள் , எந்தவொரு நிறுவனத்தையும் மூடுவதற்கு முன்பாக நோட்டீஸ் அளிக்க வேண்டுமல்லவா , அதனை கூட தமிழக அரசு செய்யாமல் விட்டுவிட்டது .


ஸ்டெர்லைட் ஆலையின் மீதான முக்கிய குற்றச்சாட்டே “மாசுபாடு” தான் . இதற்கு முன்பு எடுக்கபட்ட காற்று மற்றும் நிலத்தடிநீர் சோதனைகள் என்ன சொல்கின்றன என்பது மிக முக்கியமான விசயம் .


முன்பெல்லாம் காசை வாங்கிகொண்டு மாசெல்லாம் ஏற்படவில்லை என அறிக்கையளித்திலிருந்தால் இப்போது “மாசு ஏற்பட்டுள்ளது” என உண்மையை கூறினாலும் அது நீதிமன்றத்தில் எடுபடாது என்பதே உண்மை .

 


 


தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் ?


தமிழக அரசு இனியாவது வலுவான ஆதாரங்களை பசுமை தீர்ப்பாயத்தில் எடுத்து வைக்க வேண்டும் . அதைவிட்டுவிட்டு வெறுமனே எங்களின் கொள்கை முடிவு , மக்கள் எதிர்க்கிறார்கள் , வன்முறை வந்துவிடும் என்பது போன்ற காரணங்களை கூறிக்கொண்டு இருந்தால் ஸ்டெர்லைட் ஆலையை திறந்து தமிழக அரசையே பாதுகாப்பும் கொடுக்க சொல்வார்கள் .

 


இதனை முன்னுதாரணமாக கொண்டு அனைத்து ஆலைகளையும் குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனையிடுங்கள் , நோட்டிஸ் அளித்திடுங்கள் , மூடிவிடுங்கள் . அரசு முறையாக தன்கடமையை  செய்தால் மக்களின் போராட்டமே நடக்காது .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *