Falling Down Challenge | இன்னும் என்னவெல்லாம் வர போகுதோ?
#மீடூ போன்ற இயக்கங்கள் வலுப்பெற சமூக வலைத்தளங்கள் பேருதவி புரிந்தாலும் மறுபக்கம் Challenge என்கிற பெயரில் தொடர்ச்சியாக பல வந்து கொண்டே இருக்கின்றன. ஒன்றுக்கும் உதவாத சில Challenge களில் வெறும் லைக் பெறுவதற்காக எண்ணற்ற நபர்கள் தங்களது நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். பல சமயங்களில் ஆபத்திலும் சிக்கிக்கொள்கின்றனர்.
அனைவருக்கும் பரிட்சயமான Internet Challenge ஆக இருந்தது ஐஸ் பக்கெட் சேலன்ச் எனலாம் தற்போது Falling Down Challenge என்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐஸ் பக்கெட் சேலன்ச் | Ice Bucket Challenge
View this post on Instagram
2017 ஆம் ஆண்டுவாக்கில் ஐஸ் பக்கெட் சேலன்ச் என்பது சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆனது. இந்த சேலன்ச் Motor Neurone Disease, or ALS என்ற நோய்க்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் மக்களை உதவிட அழைக்கவும் கொண்டுவரப்பட்டது. இதன்படி ஐஸ் பக்கெட் சேலன்ச் செய்பவர் அந்த வீடீயோவை பதிவேற்றி இன்னொரு நண்பருக்கு ஐஸ் பக்கெட் சேலன்ச் விட வேண்டும். மார்க் முதல் கந்தசாமி வரை அனைவருமே இந்த ஐஸ் பக்கெட் சேலன்ச் ஐ செய்தனர்.
Falling Down Challenge | தலை குப்புற விழுதல்
Falling Down Challenge என்பது தங்களிடம் இருக்கக்கூடிய விலையுயர்ந்த பொருள்களை காட்டிக்கொள்வதற்கான Challenge எனலாம்
தற்போது ட்ரெண்ட் ஆகியுள்ள Falling Down Challenge என்பது எந்தவொரு விழிப்புணர்வுக்கும் கொண்டுவரப்பட்டது அல்ல. இன்னும் சரியாக சொல்லப்போனால் Falling Down Challenge என்பது தங்களிடம் இருக்கக்கூடிய விலையுயர்ந்த பொருள்களை காட்டிக்கொள்வதற்கான Challenge எனலாம். இதனை செய்ய நீங்கள் தடுக்கி விழுந்ததை போன்ற நிலையில் தரையில் படுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அருகில் உங்களிடம் இருக்கும் செல்போன் முதல் ஆபரணங்கள் வரை அருகிலே சிதறி இருக்கும் விதமாக வைத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க வேண்டும்.
View this post on Instagram
ஆரம்பத்தில் பணக்காரர்கள் தங்களிடம் இருப்பவற்றை காட்டிக்கொள்வதற்க்காக, உதாரணத்திற்கு விலை உயர்ந்த செல்போன் , கார் , விமானம், சொகுசு கப்பல், ஆபரணம் போன்றவற்றினை காட்டிக்கொள்வதற்க்காக செய்தனர். ஆனால் தற்போது ஏழை பணக்காரர் என்றில்லாமல் கண்ட இடங்களிலும் விழுந்து விழுந்து புகைப்படம் எடுத்து பகிர ஆரம்பித்து இருக்கின்றனர். இந்தியர்கள் தற்போது ஆர்வமாக இதனை செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
நமக்கு தேவையா?
இணையமும் சமூக வலைத்தளமும் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரின் கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய தளமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது பலருக்கு Likes, Shares மிக முக்கியமானதாக மாறி விட்டது. விளைவு சமூகத்திற்கு எந்தவிதத்திலும் உதவாத பல நிகழ்வுகள் Challenge என்கிற பெயரில் ஆரம்பிக்கப்படுகின்றன. இவைகளே இன்ஸ்டாகிராம் போன்ற ஆப் வைத்திருப்பவர்களே கூட அவர்களின் ஆப்பை பிரபல படுத்திடவும் அதிகமாக பயன்படுத்திட வைக்கவும் செய்திடலாம். அது எதனையும் புரிந்துகொள்ளாமல் நாமும் தலைகுப்பற விழுந்து புகைப்படம் எடுத்துக்கொண்டு இருக்கிறோம்.
இனியாவது விழித்துக்கொள்வோமா?