Youtube Down WHY? | Youtube சேவை நிறுத்தம், ஏன்?
உலகின் பெரும்பகுதி மக்கள் வீடியோ பார்ப்பதற்கு பயன்படுத்துகின்ற கூகுளின் Youtube தற்போது இயங்கவில்லை . உலகம் முழுமைக்கும் உள்ள பயனாளர்களிடமிருந்து Youtube Down என்ற செய்தி கிடைப்பதனால் உலகம் முழுமைக்கும் youtube இயங்கவில்லை என தெரிகின்றது .
இந்தியாவில் 8.10 AM முதல் youtube இயங்க ஆரம்பித்து இருக்கின்றது .
Youtube Down, Why?
Youtube இணையதளம் பாதிக்கப்பட்டுள்ளது என பயனாளர்கள் தெரிவித்தவுடன் அதுகுறித்து Youtube ட்விட்டரில் பகிர்ந்துகொடுள்ள செய்தியில் “உங்களது புகாரை அளித்தமைக்கு நன்றி , தற்போது வேலை செய்து வருகின்றோம் . தொந்தரவுக்கு வருந்துகின்றோம் ” என தெரிவித்துள்ளது.
Thanks for your reports about YouTube, YouTube TV and YouTube Music access issues. We’re working on resolving this and will let you know once fixed. We apologize for any inconvenience this may cause and will keep you updated.
— Team YouTube (@TeamYouTube) October 17, 2018
ஆனால் தற்போது Youtube Down ஆனதற்கான காரணத்தை Youtube இதுவரை தெரிவிக்கவில்லை . ஆனால் இந்த பிரச்சனையை தீர்க்க வேலை செய்து வருவதாக உறுதியளித்துள்ளது .
Never Seen Before
Youtube இந்தியாவை பொறுத்தவரையில் அதிகாலை 6.30 AM முதல் பிரச்சினையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது . இதற்கு முன்பு சில சமயங்களில் இதனைப்போன்று பிரச்சனைகளை Youtube சந்தித்து இருந்தாலும் பிரச்சனை இவ்வளவு நேரத்திற்கு நீடித்து இருப்பது இதுவே முதல் முறை .
Youtube , Down ஆனதற்கான காரணத்தை சரியாக சொல்லாமல் இருப்பது கவனிக்கவேண்டிய விசயமாக பார்க்கப்படுகின்றது .
Youtube ஒரு மிகப்பெரிய தளம் . அங்கு நாளொன்றுக்கு எண்ணிலடங்கா வீடியோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன .
இணையத்தளத்தினை அப்டேட் செய்திடும்போது இதுபோன்றதொரு பிரச்சனை ஏற்படலாம் . ஆனால் Youtube அதனை வெளிப்படையாக சொல்லாமல் இருந்ததினால் கவலை அடைந்திருந்தனர் வலைதளவாசிகள் .
Youtube is now Working
இந்தியாவில் 8.10 AM முதல் youtube இயங்க ஆரம்பித்து இருக்கின்றது . உலகம் முழுமைக்கும் இயங்குகின்றதா என தெரியவில்லை . Youtube இன் அதிகாரபூர்வ ட்விட்டரில் இன்னும் இதற்கான காரணம் அப்டேட் எதுவும் கூறப்படவில்லை .
எண்ணற்ற நபர்கள் youtube மூலமாக சம்பாதித்து வருகின்ற சூழலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு வீடியோக்கள் delete ஆனால் ? மிகப்பெரிய கவலை அளிக்கும் கேள்வியாக இது இருக்கின்றது .