IPC 497 நீக்கத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும்? | How need to we understand IPC 497 Cancellation?

 


அடுத்தவரின் மனைவியோடு அல்லது கணவரோடு அவரது விருப்பத்தின்பேரிலேயும் உடலுறவு வைத்துக்கொள்வது இதுவரை IPC 497 இன் படி கிரிமினல் தண்டணைக்குரிய குற்றமாக கருதப்பட்டது . தற்போது உச்சநீதிமன்றத்தால் IPC 497 கிரிமினல் குற்றமல்ல எனக்கூறி நீக்கப்பட்டுள்ளது .


 

IPC 497

 

இந்திய அரசியலமைப்புச்சட்டம் IPC 497 இன் படி அடுத்தவரின் மனைவியோடு உடலுறவு கொள்வது குற்றம் . திருமணமான பெண்ணிண் சம்மதத்தோடு உடலுறவு வைத்துக்கொண்டாலும் குற்றமாக கருதப்பட்டு அதில் ஈடுபடும் ஆண்களுக்கு 5 வருடம் அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்பட்டு வந்தது.

 


 

IPC 497 க்கு எதிராக வழக்கு

தகாத உறவில் ஆண் பெண் இருவருமே முழு சம்மதத்தோடு ஈடுபட்டாலும் குற்றவாளியாக ஆண் மட்டுமே கருதப்பட்டு IPC 497 இன் படி தண்டணை வழங்கப்பட்டுவந்தது .

 

 



அரசியல்சாசன சட்டப்படி ஆணும் பெண்ணும் சமம் எனும்போது தண்டணை ஆணுக்கு மட்டும் வழங்கப்படுவது சரியானது அல்ல ? ஆகையால் இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது . வழக்கினை விசாரணைக்கும் ஏற்றது நீதிமன்றம் .

 


 

IPC 497 நீக்கம்



உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள்  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா , நீதிபதி நாரிமன்  , நீதிபதி சந்திரசூட் , நீதிபதி கான்வில்கர் , நீதிபதி இந்து மல்ஹோத்ரா  அடங்கிய அமர்வு 150 ஆண்டுகள் பழமையான IPC 497 இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கின்றது எனக்கூறி அதனை ரத்து செய்திருக்கின்றது .

 

 


இதற்காக வழங்கபட்டுள்ள தீர்ப்பில் நீதிபதிகள் பின்வரும் கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள்  .

 

Credit : Times of india



உடலுறவு தனிபட்ட நபரின் விருப்பம் சார்ந்தது . அதனை கிரிமினல் குற்றமாக கருத முடியாது . மனைவி என்பவள் கணவனின் சொத்து அல்ல , கணவர் எஜமானாரும் அல்ல . பெண்கள் ஆணுக்கு நிகராக நடத்தப்படுவது கட்டாயம் . இருவரின் சம்மதத்தோடு நடைபெறுவதனை கிரிமினல் குற்றமாக கருத முடியாது . சிவில் பிரச்சனையாக கருதிடலாம் .

– தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

 


 

வழக்கப்படி பார்த்தால் தகாத உறவு என்பது கணவன் மனைவி பந்தத்திற்குள்ளும் குடும்பத்திற்குள்ளும் பிரச்சனையை உண்டுபண்ணக்கூடியதுதான் . ஆனால் அது கிரிமினல் குற்றமா என்பதுதான் கேள்வி ? மேலும் தகாத உறவை கிரிமினல் குற்றமாக கருதிடும் IPC 497 தொடர்வதற்கான முகாந்திரம் இல்லை



பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா

 


 

இதேமாதிரியான கருத்துக்களைத்தான் மற்ற நீதிபதிகளும் முன்வைத்தார்கள்.

 


IPC 497 நீக்கத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் ?



இந்த கேள்விக்கு தவறான புரிதல்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக வலைதளங்களிலும் வைக்கப்படுகின்றது . உச்சநீதிமன்றம் தகாத உறவை சரியன்று சொன்னது மாதிரியான விவாதங்கள் நடைபெறுகின்றன . இது தவறு .

பங்கெடுக்கும் இருவருக்குமே பாதிப்பில்லாமல் இருவரின் சம்மதத்தோடு நடைபெறுகின்ற உடலுறவு கிரிமினல் குற்றமல்ல என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு . கிரிமினல் குற்றமல்ல என்றே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது . திருமணம் ஆனவரா ஆகாதவரோ நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமானவர்கள் . நமக்கு என்று தனிபட்ட உரிமைகள் இருக்கின்றன . அப்படிப்பட்ட உரிமையை திருமண பந்தம் தடுக்க முடியாது என்பதுதான் அடுத்த தீர்ப்பு .


மற்றபடி தகாத உறவென்பது சிவில் குற்றம் என்பதிலோ அதனால் விவாகரத்து கோரலாம் என்பதிலோ உச்சநீதிமன்றம் தலையிடவில்லை . காரணம் இது தவறென்பதனை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது . ஆனால் தனிபட்ட உரிமை சார்ந்த செக்ஸ் விசயத்தை கிரிமினல் குற்றமாக கருதக்கூடாது என்பதுதான் நீதிமன்றத்தின் தீர்ப்பு .


இந்த தீர்ப்பை திரித்து புரிந்துகொள்ளாமல் தவறாகப்பேசி  சமூகத்தில் குழப்பங்களை எற்படுத்திக்கொள்ள வேண்டாம் .

 


[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]

 

பாமரன் கருத்து



 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *