ரூபாய் வீழ்ச்சி அடைய காரணம் என்ன? | வீழ்ச்சியடைவதை தடுக்க வழியென்ன?
நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இதனால் செப்டம்பர் 03 அன்று ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் 71.16 என்கிற புதிய உச்சத்தை தொட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என ஆரம்பித்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலையிலும் தொடர்ச்சியாக உயர்வு ஏற்படுகின்றது.
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
டாலர் மதிப்பு உயர காரணம் என்ன?
சந்தையில் எந்த பொருளை மக்கள் வாங்க விரும்புகிறார்களோ அந்த பொருளின் விலை உயரத்தானே செய்யும் . அதனைபோலவே தான் உலக வர்த்தகத்தில் பல்வேறு காரணங்களால் பலர் டாலரை வாங்க முற்படும்போது அதனுடைய மதிப்பு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மற்ற நாணயங்களின் மதிப்பையும் சரிவடைய செய்கின்றது , நம் ரூபாய் மதிப்பினை போல .
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெயை வாங்க வேண்டுமெனில் டாலரில் தான் வாங்க வேண்டும் . பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் விலையும் 50 சதவிகிதத்திற்கும் மேல் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது . இந்தியா தன்னுடைய 80 சதவிகித எரிபொருளினை இறக்குமதியே செய்துவருகின்றது . ஆகையால் இந்தியா தன்னிடமுள்ள அந்நியச்செலாவணியை அதிகமாக பயன்படுத்திடவேண்டிய சூழ்நிலையும் வரும் . நாமும் டாலரை வாங்க வேண்டிய தேவை ஏற்படும் .
மேலும் இந்த நவம்பர் முதல் ஈரானிடம் காச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா பல நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது . இதுபோன்ற காரணிகள் அனைத்துமே இந்தியாவிற்கு கெட்ட செய்திதான் .
பொருளாதார மோதல்
அமெரிக்கா தற்போது பல்வேறு நாடுகளுடன் பொருளாதார மோதலில் ஈடுபட்டு வருகின்றது . குறிப்பாக சீனாவுடனும் ஐரோப்பிய யூனியனுடனும் மோதலை கடைபிடித்து வருகின்றது . இந்தியாவை ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தச்சொல்கிறது .
இதுபோன்ற காரணங்கள் இந்திய கரன்சிகளின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல உலக அளவிலான பல கரன்சிகளின் நம்பிக்கையையும் குலைத்துள்ளது . இதன் காரணமாகதான் உலகின் பல்வேறு கரன்சிகளின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகின்றது .
இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க வழியென்ன?
உலக அளவில் வர்த்தகம் செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்ட கரன்சியாக டாலர் இருக்கின்றது . ஆகையால் தான் அதனை வாங்கிக்குவிக்க பல நாடுகளும் முதலாளிகளும் நினைக்கின்றனர் . அப்படி நினைக்கும்போது டாலரின் மதிப்பு உயருகிறது.
இந்தியா அரசோ , இந்திய கம்பெனிகளோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டுமெனில் டாலர் தேவை . அதிகப்படியாக இறக்குமதி செய்ய அதிகபடியான டாலர் தேவை , அதிகமாக வாங்கும்போது டாலருக்கு தேவை அதிகரிக்கும் , மதிப்பும் அதிகரிக்கும் .
இதனை சமாளிக்க எளியவழி உள்நாட்டு உற்பத்தி , ஆம் இந்தியா இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரித்தால் நமக்கு டாலருக்கான தேவை இருக்காது . நம்முடைய பொருள்களை பிறர் வாங்கும் போது டாலரில் வாங்குவதனால் நமக்கு தேவையான டாலர் கிடைத்துவிடும்.
சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல்
இந்தியாவில் அதிக அளவிலான சுற்றுலாத்தலங்களும் கோவில்களும் இருக்கின்றன . அவற்றினை காண ஆண்டுதோறும் அதிகப்படியான வெளிநாட்டு மக்கள் வந்துசெல்கின்றனர் . அவற்றினை முறையாக பராமரித்து வைத்துக்கொண்டால் அதன் மூலமாக நம்முடைய அந்நிய செலாவணியை உயர்த்திக்கொள்ள முடியும் .
இதுதவிர வட்டி விகிதங்களில் , தொழில்முனைவோருக்கான லோன் விசயங்களில் ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முடிவுகளும் முக்கிய பங்காற்றும் .
உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவோம்உண்மையான விடுதலையை பெறுவோம்
பாமரன் கருத்து