UAE 700 கோடியை இந்தியா வாங்க மறுக்க காரணமென்ன? – K Vinoth | Will India accept UAE 700 crore?

 

கேரளாவிற்கு தேவையான நிவாரணத்தொகை

 

முதியவயது பெண்ணை சுமந்துசெல்லும் நபர்
முதியவயது பெண்ணை சுமந்துசெல்லும் நபர்

 

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பினால், சுமார் 2600 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனை சீர்செய்ய நிவாரண உதவிகள் தேவைப்படுவதாகவும், கேரளா முதல்வர் பிரனாயி விஜயன் அறிவித்தார். எனவே, பல்வேறு  மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஐ.டி. ஊழியர்கள் , திரையுலகினர் மற்றும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நிவாரண பொருட்களும், நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

 

[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் 700 கோடி

 

 

தற்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “ஐக்கிய அரபு அமீரகத்தின் வளா்ச்சியில் கேரளா மக்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படிப்பட்ட கேரளா தற்போது மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் அவா்களுக்கு உதவ கடமைப்பட்டுள்ளோம். வரலாறு காணாத இழப்பை சந்தித்துள்ள கேரளாவிற்கு அந்நாட்டு மக்களும் உதவவேண்டும்” என்றும், “தங்களது சார்பில் 700 கோடி மதிப்பிலான நிவாரணம் வழங்கப்படும்” என்றும் பதிவிட்டிருந்தார்.  ஆனால், இந்தியஅரசு இந்த உதவித்தொகையை ஏற்குமா என்பதில் சந்தேகம் உள்ளது.

 

நிவாரணத்தொகையை மறுத்த இந்தியா:

 

கடந்த, 2004-ல் ஏற்பட்ட சுனாமி பாதிப்பிற்கு பல்வேறு நாடுகளும் (அமெரிக்கா , ஜப்பான்,ரஷ்யா உட்பட) நிவாரணங்கள் அளிப்பதாக அறிவித்தனர். ஆனால், அன்றைய பிரதமர் திரு. மன்மோகன்சிங் அவர்கள், “இயற்கை பேரிடர்கள் மற்றும் அதன் பாதிப்புகளை சீர்செய்ய, போதுமான வசதிகள்தங்களிடமே உள்ளது ” என்றுகூறி நிவாரணத்தொகையை நிராகரித்தார். மேலும், அதன்பிறகு ஏற்பட்ட எந்தவொரு  பேரிடருக்கும் வெளிநாடுகளிலிருந்து நிவாரணத்தொகை வாங்கவில்லை (காஷ்மீர் நிலஅதிர்வு மற்றும் வெள்ளப்பெருக்கு, உத்தரகண்ட் பேரிடர் – 2013, சென்னை வெள்ளம் (2014) உட்பட)

 

மோடி நிவாரணத்தொகையை ஏற்பாரா?

 

இன்றைய பிரதமர் திரு. மோடி அவர்கள், பல்வேறு நாடுகளுக்கு சென்று அவர்களுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். மேலும், இந்தியா சார்பில் பல்வேறு நாடுகளுக்கு உதவிகளும் அளித்து வருகிறார். இந்த சூழலில், அவர்கள் கொடுக்கும் நிவாரண தொகையை மறுத்தால் அவர்களை அவமதிக்கும் செயலாக இருக்கும். மேலும், இருநாடுகளுக்கிடையே உள்ள நட்பில் விரிசல் உருவாகலாம்.

 

வாங்கும் நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மாறிய இந்தியா
வாங்கும் நிலையிலிருந்து கொடுக்கும் நிலைக்கு மாறிய இந்தியா

 

ஆனால், உலகிலேயே இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியா, பேரிடருக்கு மற்ற நாடுகளிடம் உதவியை எதிர்பார்ப்பது சரியாக இருக்குமா என்றால் இல்லை.

 

மோடி இதை எவ்வாறு கையாள்வர். பொறுத்திருந்து பார்ப்போம்… மோடி நிவாரணத்தொகையை ஏற்பாரா அல்லது நிராகரிப்பாரா என்று.

 

நன்றி ,
க. வினோத்குமார்

 

பொறுப்பு துறப்பு : வாசகர் கட்டுரைகளில் வழங்கப்படும் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக்கருத்துக்கள் . அதற்கு பாமரன் கருத்து பொறுப்பேற்காது .

 

உங்களுடைய கட்டுரைகள் இடம்பெற வேண்டுமா எழுதி அனுப்புங்கள்

Email :

admin@pamarankaruthu.com

pamarankaruthu@gmail.com

 

————————————

 

Are India accept or neglect 700 Crores from UAE ? – பாமரன் கருத்து

மிகவும் அவசியமான பதிவு . நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி .

இந்திய அரசு கொள்கை அளவில் வெளிநாடுகளில் இருந்து நிவாரண செலவுகளுக்காக வழங்கப்படும் அன்பளிப்புகளை ஏற்பதில்லை என வகுத்துக்கொண்டுள்ளது . மேலே குறிப்பிட்ட உதாரணங்களை அதற்கு எடுத்துக்கொள்ளலாம் .

அதேநேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தனிநபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நேரடியாக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பிட முடியும் , வரிவிலக்கும் உண்டு . அதற்கு தடை ஏதும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

அடுத்ததாக ஐக்கிய அரபு நாடு வழங்கிடும் உதவித்தொகையினை கேரளாவிற்கு வழங்கிட மத்திய அரசு ஒப்புக்கொண்டால் வரி விதிக்கப்படுமா என்கிற அடுத்த கேள்வியும் எழுந்தது .

அதற்கு அதிகாரிகளின் விளக்கம் இதுதான் “வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்படும்போது அந்த தொண்டு நிறுவனம் Foregin Contribution (Regulation) Act (FACTS) இன் படி பதிவிடப்பட்ட தொண்டுநிறுவனமாக இருக்கின்றபட்சத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் . பதிவிடப்படாத தொண்டுநிறுவனத்திற்கு வருகின்ற பணம் வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் .

ஒப்புக்கொள்ளப்பட்டு கேரளாவிற்கு பணம் கொடுக்கப்பட்டாலும் அந்த பணம் நேரடியாக கேரள அரசாங்கத்தின் வங்கி கணக்கிற்கு போவதால் அதற்க்கு வரி விதிக்கப்படவே அதிக வாய்ப்பிருக்கிறது. வரிவிலக்கு அளிக்கப்பட விதிகள் இதுவரை இல்லை என கூறுகிறார்கள் .

அத்தனையும் அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கின்றது . வினோத் கூறுவதைப்போல பொறுத்திருந்து பார்ப்போம் .

பாமரன் கருத்து

பாமரன் கருத்து

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *