சூரியனை தொடப்போகும் பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் | Tamil | 2018 Parker Solar Probe

மனித வரலாற்றின் அறிய படைப்பாகவும் சாதனையாகவும் விளங்கப்போகிறது பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் (Parker Solar Probe). ஆம் இதுவரை இல்லாத அளவிற்கு சூரியனுக்கு மிக அருகில் சென்று பல அவிழப்படாத அறிவியல் முடுச்சுகளுக்கு விடைதேட ஆகஸ்டு 12 2018 அன்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா  இந்த செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது .

பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் முக்கிய சிறப்பம்சங்கள்

உயிரோடு இருக்கும் ஒரு மனிதரின் பெயரால் அனுப்பப்டும் முதல் செயற்கைகோள் என்ற பெருமையை பெறுகிறது
ராக்கெட் ஏவுவதை ஏவுவதை பார்க்கும் பார்கர்
ராக்கெட் ஏவுவதை பார்க்கும் பார்கர்
தற்போது 91 வயதாகும் பார்க்கர் (astrophysicist Eugene Parker) 1958 ஆம் ஆண்டு solar wind குறித்து விளக்கியவர் .

இதுவரை மனிதன் உருவாக்கியத்திலேயே மிக அதிக வேகத்தில் பயணிக்கப்போகும் ஒரு பொருள் பார்க்கர் செயற்கைக்கோள் தான் . மணிக்கு  690000 km/hour வேகத்தில் சூரியனை வலம்வர போகிறது .

சூரியனுக்கு மிக அருகில் செல்லப்போகும் முதல் செயற்கைக்கோளும் பார்க்கர் சோலார் புரோப் தான் .

Parker Solar probe
Parker Solar probe

 

6.12 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் . இதற்கு முன்பு 1976 இல் ஏவப்பட்ட ஹீலியோஸ் 2 , 43 மில்லியன் தொலைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சூரியன் மிக அதிக வெப்ப ஆற்றலை உமிழும் என்பதனால் 1300 செல்ஸியஸ் வெப்பநிலையை தாங்கிடும் அளவிற்கு பார்க்கர் செயற்கைகோள் பாதுகாப்பு தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன .

பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் நோக்கம்

சூரியனை காட்டிலும் அதன் வெளிப்புறமாக கருதப்படும் corona அதிக வெப்பமாக இருக்க காரணமென்ன என்பது குறித்து ஆராயப்படும் .எப்படி சூரியனின் வெப்பம் corona வை அடைகிறது எண்பதனையும் solar wind acceleration குறித்தும் அறிவது .

ஆற்றல் துகள்கள் முடுக்கிவிடப்பட்டு பரவுவதில் இருக்கின்ற இயக்கத்தை அறிந்துகொள்வது .

மற்ற கோள்களில் இறங்கி ஆய்வு செய்வதைவிட பலமடங்கு சவால்கள் நிறைந்தது சூரியனை நோக்கி செயற்கைகோளை ஏவுவது .

ஆம் சூரியனை நோக்கி ஏவிடும்போது மிக அதிக அளவிலான வெப்ப ஆற்றலை தாங்கிடும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக செயற்கைகோளை வடிமைப்பது சவாலானது , அதனை செய்துமுடித்த நாசா விஞ்ஞானிகள் பாரட்டுதலுக்கு உரியவர்கள் .

சூரியன் நமது அடிப்படை சக்தியாக விளங்குவதினால் அதனைப்பற்றிய ஆராய்ச்சி பல புதிரான கேள்விகளுக்கு பதிலாக விடைகளை தருமென்பதில் சந்தேகமில்லை .

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *