Lift off! 🚀 https://t.co/MTJTnoGbE0@Nasa has launched the #ParkerSolarProbe on its mission to ‘touch’ the Sun ☀️ pic.twitter.com/wNLEuHIUqt
— BBC News (World) (@BBCWorld) August 12, 2018
பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் முக்கிய சிறப்பம்சங்கள்
இதுவரை மனிதன் உருவாக்கியத்திலேயே மிக அதிக வேகத்தில் பயணிக்கப்போகும் ஒரு பொருள் பார்க்கர் செயற்கைக்கோள் தான் . மணிக்கு 690000 km/hour வேகத்தில் சூரியனை வலம்வர போகிறது .
சூரியனுக்கு மிக அருகில் செல்லப்போகும் முதல் செயற்கைக்கோளும் பார்க்கர் சோலார் புரோப் தான் .
பார்க்கர் சோலார் புரோப் செயற்கைகோள் நோக்கம்
சூரியனை காட்டிலும் அதன் வெளிப்புறமாக கருதப்படும் corona அதிக வெப்பமாக இருக்க காரணமென்ன என்பது குறித்து ஆராயப்படும் .எப்படி சூரியனின் வெப்பம் corona வை அடைகிறது எண்பதனையும் solar wind acceleration குறித்தும் அறிவது .
மற்ற கோள்களில் இறங்கி ஆய்வு செய்வதைவிட பலமடங்கு சவால்கள் நிறைந்தது சூரியனை நோக்கி செயற்கைகோளை ஏவுவது .
ஆம் சூரியனை நோக்கி ஏவிடும்போது மிக அதிக அளவிலான வெப்ப ஆற்றலை தாங்கிடும் பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக செயற்கைகோளை வடிமைப்பது சவாலானது , அதனை செய்துமுடித்த நாசா விஞ்ஞானிகள் பாரட்டுதலுக்கு உரியவர்கள் .
சூரியன் நமது அடிப்படை சக்தியாக விளங்குவதினால் அதனைப்பற்றிய ஆராய்ச்சி பல புதிரான கேள்விகளுக்கு பதிலாக விடைகளை தருமென்பதில் சந்தேகமில்லை .