WhatsApp-க்கு வருமானம் எங்கிருந்து வருகிறது? | How WhatsApp make money in Tamil?
அனைவரும் பயன்படுத்துகின்ற WhatsApp இல் விளம்பரங்கள் காண்பிக்கப்படுவதில்லை , Subscrption க்காக பணம் வசூலிக்கப்படுவதும் இல்லை . பிறகு எப்படி WhatsApp வருமானம் ஈட்டுகின்றது ? facebook $19 பில்லியன் டாலருக்கு வாங்க அவசியம் என்ன ? பார்க்கலாம் வாருங்கள்
WhatsApp in Tamil
உலகின் முன்னனி Chat Application ஆக இருப்பது WhatsApp. இதில் சாதாரண message முதல் ஆடியோ அழைப்பு மற்றும் வீடியோ அழைப்புகள் வரை அத்தனையையும் இலவசமாக மேற்கொள்ள முடியும். அதோடு போட்டோ ,ஆடியோ மற்றும் வீடியோக்களை அனுப்பிட முடியும். இதற்க்கு இணைய வசதி இருக்க வேண்டும். அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இருவரும் WhatsApp வைத்திருக்க வேண்டும்.
Brian Acton and Jan Koum என்கிற இரண்டு நபர்களால் உருவாக்கப்பட்டது தான் WhatsApp. இவர்கள் இருவரும் அதற்க்கு முன்பாக யாஹூ நிறுவனத்தில் பணியாற்றினார்கள். இவர்களின் முயற்சியால் 2009 இல் WhatsApp வெளியிடப்பட்டது. பிறகு இந்நிறுவனத்தை 2014 ஆம் ஆண்டில் facebook 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியுள்ளது.
Download What’sApp
ஆப் (App) களுக்கு வருமானம் எங்கிருந்து வரும் ?
Subscription Fee : சில வருடங்களுக்கு முன்பாக WhatsApp நிறுவனம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது . அதன்படி முதல் வருடம் WhatsApp ஐ இலவசமாக பயண்படுத்திக்கொள்ளலாம் என்றும் அதற்கு அடுத்து சந்தா தொகையாக $0.99 (Rs 50 ) செலுத்திட வேண்டும் எனவும் கூறியது.
ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை , குறிப்பிட்ட காலக்கெடு முடியும் தருவாயில் அதுவாகவே தேதியினை பணம் செலுத்தாமலே புதுப்பித்துக்கொண்டது . எனவே இந்த முறைப்படி WhatsApp நிறுவனம் வருமானம் ஈட்டுவதில்லை என்பது தெளிவாகிறது .
Advertising : WhatsApp தன்னுடைய ஆப்பில் விளம்பரங்களை அனுமதிக்கப்போவது இல்லை . விளம்பரங்கள் நிச்சயமாக பயன்படுத்துகிறவர்களுக்கு தொந்தரவுகளை கொடுக்கும். WhatsApp இன் தனித்துவமே இடையூறு இல்லாமல் பயனாளர்களுக்கு chat செய்வதற்கான வசதியினை வழங்குவது தான் . அதனால் தான் WhatsApp மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது .
இணையத்தில் செயல்படக்கூடிய Mobile Application , Website என எதுவாக இருந்தாலும் அதன் முக்கிய வருவாய் Subscription Cost அல்லது Advertising இந்த இரண்டில் ஏதாவது ஒன்றின் மூலமாகத்தான் இருக்கும் .
ஆனால் WhatsApp க்கு வருவாய் இந்த இரண்டில் இருந்தும் வருவது இல்லை
அப்படியானால் WhatsApp எப்படி வருவாய் ஈட்டுகிறது ?
இங்கு தான் இணைய யுகத்தின் புத்திசாலித்தனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் , நீங்களும் அதனை அறிந்துகொள்ளுங்கள் .
தகவல் தொழில்நுட்பத்துறையில் Data விற்கு தான் பணம்
- தற்போது இருக்கக்கூடிய Mobile Application களில் அதிகப்படியான பயனாளர்களை கொண்டிருப்பது WhatsApp தான்
- தற்போதைய பயனாளர்களின் எண்ணிக்கை 1.5 பில்லியன் (கூடியிருக்கலாம் )
- நாள் ஒன்றுக்கு அனுப்பப்படுகிற மெசேஜ்களின் எண்ணிக்கை 60 பில்லியன்
- சராசரியாக 1.3 பில்லியன் பயனாளர்கள் தவறாமல் பயன்படுத்துகின்றனர்
இப்படி அதிகப்படியான பயனாளர்களை கொண்டிருப்பதனால் தான் facebook $19 பில்லியன் டாலர்களுக்கு முதன்மையான வருவாய் (Subscription, Advertising) ஏதுமில்லாத WhatsApp ஐ facebook வாங்குவதற்கான காரணம் .
அதற்காக WhatsApp மூலமாக Facebook க்கு வருமானம் இல்லையா ?
முட்டாள் அல்ல Facebook
இவ்வளவு அதிக தொகைக்கு WhatsApp ஐ லாபம் எதுவுமின்றி வாங்குமா Facebook ? நிச்சயமாக இருக்காதல்லவா . ஆம் உண்மைதான் . WhatApp மூலமாக Facebook மறைமுக வழியில் சம்பாதிக்க முடியும் என்ற நோக்கத்தில்தான் இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறது .
தினந்தோரும் WhatsApp இல் 1.3 பில்லியன் மக்களால் 60 பில்லியன் மெசேஜ் பகிரப்படுகிறது . அவை அனைத்துமே WhatsApp சர்வரில் சேமித்து வைக்கப்படுகிறது .
இந்த தகவல்களுக்காகத்தான் facebook இவ்வளவு அதிக தொகைக்கு WhatsApp ஐ வாங்கியது .
WhatsApp, பயனாளர்கள் அனுப்பக்கூடிய தகவல்களை படிக்கிறது . படிப்பது என்றால் யாரோ நாம் அனுப்பிய மெசேஜ்களை திறந்து படிப்பது கிடையாது . ஒருநாளைக்கு அனுப்பக்கூடிய 60 பில்லியன் தகவல்களை படிப்பது நடக்க முடியாத ஒன்று .
தகவல் தொழில்நுட்ப துறையில் தகவல்களை படிப்பது என்பது analysing/ processing செய்வது என்று பொருள்படும் . தனித்துவமாக உருவாக்கப்பட்ட Crawler மூலமாக ஒவ்வொருவர் அனுப்பிய மெசேஜ்களும் படிக்கப்பட்டு அவர்கள் பிரிக்கப்படுவார்கள் .
கூகுள் நிறுவனத்தின் Crawler நாம் அனுப்பக்கூடிய மின்னஞ்சலை (Gmail) கூட படிப்பதாக கூறப்படுகிறது
நாம் அனுப்பக்கூடிய ஒவ்வொரு மெசேஜ்களையும் படிப்பதன் மூலமாக பயனாளர்களின் விருப்பம் குறித்த (Behavioural ) தகவல்களை பெற முடிகின்றது . அதன் மூலமாக பயனாளர்களை வகைப்படுத்திட (Segment ) முடிகின்றது .
உதாரணத்திற்கு Shopping குறித்து விருப்பமுள்ளவர்களை அவர்கள் அனுப்பக்கூடிய மெசேஜ்களை படித்து வகைபடுத்திட முடியுமல்லவா , விளையாட்டு சம்பந்தமாக பேசுபவர்களை தனியாக வகைபடுத்திட முடியுமல்லவா .
WhatsApp தான் சேகரிக்க கூடிய தகவல்களை facebook நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்வதாக கூறியுள்ளது . facebook விளம்பரங்களின் மூலமாக சம்பாதிக்கவும் செய்கின்றது . ஆகவே தான் ஆசியா போன்ற நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் WhatsApp ஐ இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு காரணம் .
WhatsApp மூலமாக சேகரிக்கப்படும் தகவல்கள் (Only Insight not Messages) நம்பிக்கையான நிறுவனங்களுக்கும் விற்கப்படும் . அதன் மூலமாக மிகப்பெரிய அளவில் லாபம் ஈட்ட முடியும் .
மொபைலில் இணையத்தின் உதவியால் இயங்கக்கூடிய பெரும்பாலான ஆப்கள் பயணாளர்களின் தகவல்களை சேகரிக்கவே செய்கின்றன . அவற்றினை கொண்டு வருமானமும் ஈட்டுகின்றன .
இந்த பதிவு உங்களுக்கு WhatsApp குறித்த சில புரிதல்களை ஏற்படுத்தியிருக்கும் என நம்புகின்றேன் .
சந்தேகமிருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள் ….நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள் .
பாமரன் கருத்து