இந்தியாவின் அடையாளத்திற்கே ஆபத்து “அமர்த்தியா சென் ” | Amartya Sen Interview

நோபல் பரிசு பெற்ற அறிஞர் திரு அமர்த்தியா சென் இந்தியா டுடே நாளிதழின் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் அவர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ஒளிபரப்பப்பட்டது . இந்த கலந்துரையாடலில் அமர்த்தியா சென் அவர்கள் தற்போது இந்தியா சென்று கொண்டிருக்கும் பாதை சரியானதா ? நாம் எதனை நோக்கி செல்ல வேண்டும் என்பன போன்ற பல விசயங்களை பகிர்ந்து கொண்டார் ….அவற்றின் சுருக்கம் தமிழ் நண்பர்களுக்காக ….

 

 

கேள்வி : 2015 இல் இந்தியாவின் பிரதமராக மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபோது , எனக்கு பிரதமராக மோடி வருவதை விரும்பவில்லை என்று கூறினீர்கள் , இப்போது மீண்டும் தேர்தல் வர இருக்கின்றது உங்களது முடிவில் மாற்றம் வந்திருக்கிறதா ?

அமர்த்தியா சென் : தேர்தல் ஒரு பொருட்டே அல்ல , இந்தியாவின் அடையாளம் தான் பிரதானம் . இந்தியா என்பது என்ன ? என்பதுதான் இங்கு பிரச்சனை .

 

கேள்வி : தற்போது மோடியை தோற்கடிக்க ஒன்று சேர்ந்திருக்கும் எதிர்கட்சிகள் குறித்த உங்களது பார்வை

 

It’s not about election, it’s about Idea of an India

 

அமர்த்தியா சென் : உண்மையில் இந்த எதிர்ப்பு , போட்டி அனைத்தும் மோடிக்கு எதிரானதாக இருப்பதைவிட “இந்திய கலாசாரத்தை ” மீட்டெடுக்க முக்கியதுவம் கொடுப்பதாக இருக்க வேண்டும் . ஒவ்வொருவருக்கும் இன மத அடையாளங்கள்  இன்றி அனைத்து உரிமைகளும் இந்தியன் என்கிற அடிப்படையில் கிடைப்பதனை நோக்கி செல்ல வேண்டும் .

 

அமர்த்தியா சென் அவர்கள் தொடர்ச்சியாக நடந்துவரும் இந்திய பொருளாதார , அரசியல் நகர்வுகளை கவனித்து வருபவர் . அவரது எதிர்ப்பு மோடிக்கு எதிரானதாகவோ அல்லது பாஜகவுக்கு எதிரானதாகவோ இல்லை என்பதும் இந்தியாவின் அடிப்படை அடையாளத்திற்கு ஆபத்து நேருகிறது இதுவரை நாம் சென்றுகொண்டிருந்த நல்ல பாதையிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறோம் என்பதனை நோக்கியதாகவும் மட்டுமே இருக்கின்றது .

 

பல விதங்களில் இந்தியா பன்முகப்பட்ட நாடாக இருக்கின்ற பட்சத்தில் இந்துத்துவாவை மட்டுமே பிரதானமாக ஒரு அரசே முன்னெடுப்பதன் ஆபத்துக்களை அமர்த்தியா சென் அவர்களின் பேச்சுக்களில் காண முடிகின்றது .

 

 அவர் மிகதெளிவாக இருக்கிறார் , எதிர்கட்சிகள் மோடிக்கு எதிராக களம் காணுவதைவிட அழிந்துவருகின்ற இந்தியாவின் அடையாளத்தை மீட்டு எடுக்கின்ற கொள்கைகளுடன் எதிர்கட்சிகள் இருக்க வேண்டும் .

 

இந்தியர்கள் ஒன்றினை மட்டும் நினைவில் எப்போதும் கொண்டிருக்க வேண்டும் ” இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை வாய்ந்த நாடு , அதுவே நம் அடையாளம் , நாம் இந்தியர்கள் ” . இதனை பாதுகாக்கும் கட்சிகளை தேர்தெடுத்து அவர்கள் கைகளில் ஆட்சியை கொடுப்பது அவசியமான ஒன்று .

 

மக்களாகிய நீங்கள் உணருவீர்களா ?

 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *