WhatsApp Security Alert | Fake version | டவுன்லோடு செய்துவிடாதீர்கள்

எத்தனை சாட் ஆப்கள் வந்தாலும் இன்றுவரை உலகின் பெரும்பகுதி  மக்களால் பயன்படுத்தப்படுவது facebook இன் WhatsApp தான் . தற்போது இணையத்தில்  WhatsApp ஆப்பின் போலியான ஆப் இணையத்தில் கிடைக்கிறது . அதனை மக்கள் டவுன்லோடு செய்து இண்ஸ்டால் செய்வதும் நடக்கிறது . இதனால் மிகப்பெரிய அளவில் டேட்டா திருட்டும் நடைபெறுவதாக MalwareByets தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது .

 

 

WhatsApp Plus என்கிற பெயரில் இணையத்தில் கிடைக்கும் இந்த ஆப்பினை இண்ஸ்டால் செய்யும்போது அது பயன்படுத்துபவர்களின் தகவல்களை திருடி விடுவதாக கூறப்படுகிறது .

 

Google Play Store இல் இந்த ஆப் கிடைப்பது இல்லை . ஆனாலும் Google search செய்திடும்போது apk வடிவில் பல இணையதளங்களில் What’sApp plus கிடைக்கின்றது .

 

 WhatsApp பயன்படுத்த நினைப்பவர்கள் இணையத்தில் தேடும் போது plus என்பதனால் கூடுதல் வசதிகள் இந்த ஆப்பில் இருப்பதாக நினைத்துக்கொண்டும் இண்ஸ்டால் செய்துவிடுகின்றனர் . பலர் எது ஒரிஜினல் ஆப் என்பது தெரியாமலும் டவுண்லோடு செய்கின்றனர் .

 

WhatsApp Plus தவறான பாதுகாப்பற்ற ஆப்பாக தெரிவிக்கபட்டுள்ளது . இதனுடைய domain முகவரி Android/PUP.Riskware.Wtaspin.GB

 

இந்த ஆப்பினை இண்ஸ்டால் செய்திடும்போது தங்கநிற வாட்ஸ் ஆப் லோகோவுடன் படத்தில் காட்டியுள்ளபடி இருக்கும் . அதில் இருக்கின்ற Accept and Continue பட்டனை அழுத்தியவுடன் WhatsApp update என வரும் , கீழே download ஆப்சனும் இருக்கும் .

 

 

Download பட்டனை அழுத்தியவுடன் அரபிக்  மொழியில் இருக்கக்கூடிய இணையதளத்திற்கு உங்களை கொண்டு செல்லும் . அங்கு புதிய பெயரில் Watts plus plus WhatsApp ஒரு ஆப் இருக்கும் .

 

இந்த ஆப் சில கூடுதல் வசதிகளை பெற்று இருந்தாலும் இந்த fake ஆப் எப்படி இயங்குகிறது , தகவல்களை பெறுகிறது என்பதனை கண்டறிய இயலவில்லை . ஆனால் இந்த ஆப் பயனாளர்களின் தகவல்களை திருடும் பாதுகாப்பற்ற ஆப் என MalwareByets தனது ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளது .

 

மொபைல் ஆப்களை Playstore இல் இருந்து மட்டும் டவுன்லோடு செய்திடுங்கள்

Pamaran karuthu

 

Read more teach news here 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *