உங்கள் இறப்பிற்கு பிறகு Gmail என்னாகும்? | What happen to your Gmail after you dead?
திடீரென நாம் இறந்துபோனால் நாம் சேமித்து வைத்த தகவல்கள் என்னாகும் ? இந்த கேள்வி நம் ஒவ்வொருவருக்குமே கண்டிப்பாக எழும் .
- அந்த தகவல்களை குடும்ப உறுப்பினர்களால் பெற முடியுமா ?
- Google நமது தகவல்களை இறப்பிற்கு பிறகு அழித்துவிடுகிறதா ?
இதுபோன்ற கேள்விகளுக்கு தான் பதில்களை இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .
- இறந்தவரின் அக்கவுண்ட் தகவல்களை முழுவதுமாக நீக்க சொல்லலாம் .இறந்தவரின் adsense , wallet களில் இருக்கும் பணத்தினை பெற விண்ணப்பிக்க முடியும் .
- இறந்தவரின் அக்கவுண்டில் இருந்து ஏதேனும் தகவல்களை டவுன்லோடு செய்யவும் விண்ணப்பிக்கலாம் .
Here is the form to request regarding a deceased user’s account
நீங்கள் எதிர்பாராதவிதமாக இறந்துபோனால் குறிபிட்ட தகவல்கள் யாருக்கேனும் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என விரும்பினாலோ அல்லது தன்னுடய தகவல்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என விரும்பினாலும் அதனை உயிரோடு இருக்கும்போதே செய்ய முடியும் .
About Inactive Account Manager
How Google detect activity?
யாரால் தகவல்களை பெற முடியும்?
கூகுள் வேறு ஒருவருடைய password உள்ளிட்டவற்றை எவருடன் பகிர்ந்துகொள்வதில்லை
உங்களுக்கு பிறகு யார் உங்களது தகவல்களை பார்க்கலாம் என விரும்புகிறீர்களோ அவர்களின் தகவல்களை அளித்திடுங்கள் .
உங்களது அக்கவுண்ட் குறிப்பிட்ட கால இடைவெளிவரை பயன்படுத்தப்படாமல் இருந்தால் கூகுள் நீங்கள் குறிப்பிட்ட நபருக்கு notification அனுப்பும் . அந்த notification இல் யாருடைய அக்கவுண்ட் செயல்படாமல் போனதால் notification வருகின்றது போன்ற தகவல்கள் இருக்கும் .
உங்களுடைய அக்கவுண்ட் deactivate ஆன பிறகு எந்ததெந்த தகவல்களை அடுத்தநபர் தெரிந்துகொள்ளலாம் அல்லது டவுன்லோடு செய்யலாம் என விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திட முடியும்
குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தகவல்களை டவுண்லோடு செய்துகொள்ளலாம் .
How to setup Inactive Account Manager ?