எதிர்கால CCTV Camera எப்படி வேலை செய்யும் தெரியுமா ? | How Artificial Intelligence enabled CCTV camera improve safety?
கேமெராவில் பதிவாகும் நமது நடத்தையை உடனுக்குடன் கண்காணித்து நாம் செய்வது குற்றமா என்பதை ஆராய்ந்து (மனிதர்கள் பார்ப்பதைப்போல) மாட்டிக்கொடுக்கப்போகும் CCTV Camera வந்துவிட்டது.
இந்த கண்டுபிடிப்பு வெற்றிகரமாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் watchman , சூப்பர்வைசர் (Supervisor) போன்ற பணிகளுக்கு மனிதர்களின் தேவை இருக்காது .
Before CCTV Camera
சில ஆண்டுகளுக்கு முன்புவரை குற்றம் நடந்த இடத்திற்கு வந்தவுடன் போலீசாரின் முதல் கேள்வியாக “யார் குற்றம் நடைபெற்றதை பார்த்தது ? ” என்பதாகத்தான் இருக்கும் . பிறகு விசாரித்து குற்றத்தை நிரூபித்து தண்டணை வாங்கிக்கொடுப்பதற்குள் தலையே வெடித்துவிடும் .
After CCTV Camera
தற்போதெல்லாம் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு வந்தவுடன் போலீசாரின் முதல் தேடல் எங்கேயாவது CCTV camera இருக்கிறதா என்றுதான் . அப்படி இருந்துவிட்டால் குற்றம் செய்தது யார் ? எப்படி நடந்தது என பல விவரங்களை எளிமையாக கண்டறிந்துவிடலாம் . CCTV camera இருந்தால் பல குற்றவாளிகள் கைவரிசையை காட்டிட தயங்குவார்கள் .
இந்த இரண்டு முறைகளிலுமே குற்றம் நடந்தவுடன் நடைபெறுகின்ற விசாரனைக்கு மட்டுமே CCTV கேமராக்கள் பயன்படுகின்றன .
குற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது அதனை தடுக்க தற்போது CCTV Camera பயன்படுவதில்லை
அந்தக்குறையை தான் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் CCTV கேமரா உடன் இணைந்து போக்க இருக்கின்றது .
Now CCTV cameras recording the video , when police or some one need to see the footage, can watch it from Tape.
CCTV Camera with Artificial Intelligence
ஆம் தற்போது இருக்கக்கூடிய CCTV Camera அனைத்தும் நடைபெறுவதை save செய்து மட்டுமே வைத்துக்கொள்கின்றன . ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் மூலமாக பதிவு செய்யப்படும் வீடியோ உடனடியாக ஏற்கனவே பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும் reference வீடியோக்களுடன் அல்லது போட்டோக்களுடன் ஒப்பீடு உடனடியாக செய்யப்பட்டு கேமராவின் பார்வையில் இருப்பவர் செய்வது குற்றமா இல்லையா என முடிவெடுக்கும் , குற்றம் செய்கிறார் என தெரிந்தால் அலர்ட் செய்யும் .
உதாரணத்திற்கு ஒரு கடையில் திருட நினைப்பவர் எவ்வாறெல்லாம் நடந்துகொள்வாரோ அவை அனைத்தும் இன்னொரு நபரால் நடித்துக்காட்டப்பட்டு அவை சேமித்து வைக்கப்பட்டு இருக்கும் . CCTV கேமராவில் பதிவாகும் வீடியோவில் தெரிகின்ற ஒவ்வொரு நபர்களின் செயல்பாடுகளும் அப்போதே விரைவாக ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நபரின் செயல்பாடுகளோடு ஒப்பிட்டு பார்க்கப்படும் . இரண்டிற்கும் ஒற்றுமை இருப்பின் உடனடியான சம்பந்தப்பட்டவருக்கு கடைக்காரரோ அல்லது காவல்துறையினருக்கோ அலர்ட் அனுப்பப்படும் .
ஜப்பானை சேர்ந்த NTT East என்னும் நிறுவனமும் Earth Eyes என்னும் Start-up நிறுவனமும் இணைந்து மக்கள் நடந்துகொள்ளும் விதத்தை கண்காணித்து அவர்கள் குற்றம் செய்யும்போது அலர்ட் செய்யும் CCTV Camera (with Artificial Intelligence) தொழில்நுட்பத்தை செய்துகாட்டியிருக்கிறார்கள் .
ஏற்கனவே வீடுகளில் அமைக்கும் கேமெராக்களில் face regoginition ஐ பயன்படுத்தியிருந்தது அமேசான் நிறுவனம் . பல அமெரிக்க மற்றும் சீனா நிறுவனங்கள் கூட இதுபோன்ற முயற்சிகளை நிகழ்த்தியிருக்கின்றன .
சென்னை திநகரில் திருவிழாக்காலங்களில் கூட facial கேமெராக்கள் பயன்படுத்தப்பட்டன இவை கேமராவில் பதிவாகும் முகங்களை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் குற்றவாளிகளின் முகங்களோடு ஒப்பிட்டு குற்றவாளிகளின் நடமாட்டத்தை அறிய உதவும் .
Artificial intelligence மூலமாக நடத்தையை கண்காணித்து அவர் செய்வது குற்றமா இல்லையா என்பதனை CCTV கேமெரா முடிவு செய்வது மிகவும் சிறப்பான ஒன்று . இதுபோன்ற CCTV கேமராக்கள் பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டால் நிச்சயமாக குற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே காவல்துறையினரையோ வீட்டு உறுப்பினரையோ அலர்ட் செய்யும் .
அறிவியல் அறிவோம்!
பாமரன் கருத்து