Now you can browse even you are in OFFLINE | Chrome Canary Update | இனி இண்டெர்நெட் இல்லாமலும் பிரவுஸ் செய்யலாம்

உங்களது மொபைலில் கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரில் (Chrome Browser) நீங்கள் இண்டெர்நெட் இல்லாமல் கூட பிரவுஸ் செய்ய முடியும் . தற்போது கூகுள் நிறுவனம் இந்த வசதியினை கொண்டுவந்துள்ளது . சோதனைக்காக ஆப்பும்  (Chrome Canary (Unstable) வெளியிடப்பட்டுள்ளது .

 

 

 

இணைய உலகில் தினந்தோரும் பல மாற்றங்கள் நடந்துகொண்டே இருகின்றன . முன்னனி நிறுவனமான கூகுள் (Google) தற்போது மற்ற பிரவுசர்களுக்கு போட்டியாக இந்த அப்டேட்டை கொண்டுவந்துள்ளது . இதற்கு முன்னதாக இண்டெர்நெட் (Internet) இல்லாமல் இருந்தால் உங்களால் பிரவுஸ் (Browse) செய்திட முடியாது .

 
இதனால் நீங்கள் செல்லும் இடங்களில் இண்டெர்நெட் வேகம் குறைவாக (Low speed internet) இருந்தாலோ அல்லது இன்டர்நெட் வசதி  இல்லாமல் போனாலோ (No Internet) உங்களால் பிரவுஸ் செய்திட முடியாது . அந்த தருணத்தில் உங்களுக்கு தேவையான விவரங்களை  நீங்கள் இணையவசதி இல்லாமலே பெற்றால் ? அதுதான் கூகுளின் யோசனை . 

Chrome Canary எப்படி வேலை செய்கின்றது ?

 
 

கூகுள் நிறுவனம் தற்போது test version ஆக Chrome Canary (Unstable) என்னும் பிரவுசரினை பிளேஸ்டோரில் வெளியிட்டுள்ளது . இந்தியா உள்ளிட்ட நூறு நாடுகளில் சோதனை முயற்சியாக வெளியிடபட்டுள்ளது .

முற்றிலுமாக இணையமே இல்லாமலே தொடர்ச்சியாக பிரவுஸ் செய்ய முடியுமா ? இனி இண்டெர்நெட் க்கு செலவழிக்க வேண்டாமா ?

 

இந்த கேள்விகள் எழலாம் . ஆனால் அதுவல்ல  உண்மை . இனி கூகுளின் புதிய பிரவுசர் உங்களை கண்காணிக்கும் . நீங்கள் இணையத்தில் செயல்படுவதை வைத்து அடுத்ததாக நீங்க எதை தேடுவீர்கள் என்பதனை முடிவெடுக்கும்  , அதனைபோலவே நீங்க ஏதாவது புதிய இடத்திற்கு சென்றால் அங்கு எதனை குறித்த தகவல்களை தேடுவீர்கள் போன்றவற்றை அதுவே யூகித்துக்கொண்டு இணைய வசதி இருக்கும்போதே (WiFi) உங்களை கேட்காமலே  உங்களுக்காக டவுண்லோடு செய்து வைத்துக்கொள்ளும் .

 

 

நீங்க ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் , அங்கு சென்றவுடன் சுற்றுலா தளங்களைத்தானே இணையத்தில் தேடுவீர்கள் . இதனை முன்கூட்டியே இணையவசதி இருக்கும்போதே நீங்க சொல்லாமலே backend இல் சேமித்துக்கொள்ளும் , தேடும்போது இணையவசதி வேகமாக இல்லையென்றாலோ அல்லது சுத்தமாக இல்லை என்றாலோ கூட தகவல்களை பார்க்க முடியும் .

 

கூகுள் சேமித்த தகவல்களை மட்டும்தான் பார்க்க முடியும் , இணையத்தில் உள்ள அனைத்தையுமே இணையவசதி இன்றி பார்க்க முடியாது .

 

நிச்சயமாக கூகுளின் புதிய முயற்சி அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் . சோதித்த பின்னர் கூகுள் final version னை வெளியிடும் என எதிர்பார்க்கலாம் .

 

Pamaran Karuthu

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *