Why Vijay stop acting on Smoking Scenes? | புகைப்பிடித்தல் காட்சிகளில் விஜய் ஏன் நடிக்க கூடாது?

தற்போது விஜய் நடித்துக்கொண்டிருக்கும் 62 வது படத்தின் பெயர் வெளியிடபட்டுள்ளது . சர்க்கார் என்னும் தலைப்போடு வெளிவந்துள்ள அந்த போஸ்டில் விஜய் கம்பீரமாக சிகரெட்டை பற்றவைப்பது போன்று இருப்பார் .

விஜய் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது இந்த போஸ்ட் . ஆனாலும் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் விஜய் சிகரெட் குடிப்பது போன்று போஸ்டரில் இருப்பதனை விமர்சனம் செய்தனர் .

அன்புமனி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு கலந்துரையாடலில் நடிகர்கள் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிப்பதனை தவிர்க்க வேண்டும் என விடுத்த வேண்டுகோளினை ஏற்று , இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என உறுதி அளித்திருந்தார் நடிகர் விஜய் . அதற்கு பின்னர் அதனை கடைப்பிடித்தும் இருந்தார் .

விஜய் ரசிகர்களின் வாதம் 

விஜய் ஒரு நடிகர் , கதைக்கு ஏற்ப இயக்குனரின் கட்டளைப்படி அவர் நடித்துக்கொடுக்கிறார் . இதில் என்ன தவறு ?

பல நடிகர்கள் திரைப்படங்களில் புகைப்பிடிக்கிறார்களே விஜய் மட்டும் எதற்காக புகைப்பிடிக்க கூடாது ?

விஜய் ஏன் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது ? எனது பதில்

விஜய் ஒரு சாதாரண நடிகன் அல்ல , அவருக்கென மாபெரும் ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கின்றது . அவர் செய்வதை ரசிக்கவும், செய்து பார்க்கவும் பல இளைஞர்கள் நினைக்கிறார்கள் .

சாதாரண நடிகர்களைவிட விஜய் செய்யும்போது அது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் .ஒரு மறைமுக ஆதரவை அந்த விசயத்திற்கு பெற்றுத்தரும் .

எப்படி ஒரு காலத்தில் ரஜினியின் ஸ்டைலில் மயங்கி பலர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானோர்களோ அதே வாய்ப்பு விஜய் நடிக்கும் போதும் நடக்க வாய்ப்பிருக்கிறது .

தைரியமாக சமூகப்பிரச்னைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் அக்கறைகொண்ட விஜய் அவர்களை நான் மதிக்கிறேன் , அவர் போன்றவர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதென்பது தற்போது இளைஞர்களை சீரழித்துக்கொண்டு இருக்கக்கூடிய புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க செய்யும் வாய்ப்பிருப்பதாக அஞ்சுகிறேன் .

உண்மையில் விஜய்க்கு அது இன்னும் புகழையும் சமூகத்தின் மீதான அக்கறையையும் காட்டிடும் .

விஜய் போன்றவர்கள் நடிகன் என்ற நிலையில் இருந்து ரோல்மாடல் என்னும் நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள் , அதற்கு ஏற்றார்போல நடக்கவேண்டிய பொறுப்பும் கடமையும் விஜய் அவர்களுக்கு இருப்பதாக நான் நினைக்கின்றேன்

விஜய் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டார் என நான் நம்புகின்றேன் .

விஜய் மட்டுமல்ல அனைத்து நடிகர்களுமே புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க கூடாது என்பதே எனது விருப்பம்

பாமாரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *