விமான போக்குவரத்து சகஜமாகிவிட்ட சூழ்நிலையில் விமான விபத்துக்களும் அடிக்கடி நடப்பதை காண முடிகின்றது . ஒவ்வொரு முறை விமான விபத்து நடைபெறும் போதும் “கருப்புப் பெட்டியை தேடுகிறார்கள் அல்லது கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு ” என்கிற செய்தியும் உடன் வரும் .
அந்த கறுப்பு பெட்டி (Black Box) ஏன் இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்தது , அதன் வேலை தான் என்ன ? போன்ற கேள்விகளுக்கு விடை காணலாம் வாருங்கள் .
கருப்புப் பெட்டி (Black Box) என அழைக்கப்படுவது ஏன் ?
// WHY IT IS CALLED AS BLACK BOX?
கறுப்பு பெட்டி கறுப்பானதாக இருக்குமோ என எண்ணலாம் . ஆனால் உண்மையில் கறுப்புப்பெட்டி கறுப்பு நிறத்தில் இருப்பது இல்லை . திக்கான ஆரஞ்சு நிறத்தில் தான் கறுப்பு பெட்டி இருக்கும் .
பிறகு எதற்காக கறுப்பு பெட்டி என அழைக்கிறார்கள் ? யாருக்கும் தெரியாத மறைந்திருக்கும் உண்மைகளை அறிய உதவுகின்ற செய்திகளை தன்னுள்ளே கொண்டிருப்பதனால் அதனை கறுப்பு பெட்டி என அழைக்கலாம் என எண்ணுகின்றேன் .
இதன் உண்மையான பெயர் Flight Recorder
கருப்புப் பெட்டி (Black Box) உருவான வரலாறு ?
// HISTORY BEHIND BLACK BOX?
டேவிட் வாரன் (David Warran) என்பவருடைய அப்பா 1934 இல் ஒரு விமான விபத்தில் (Flight Crash) இறந்துவிடுகிறார் , அப்போது டேவிட் க்கு 9 வயது . 1950 ஆம் ஆண்டுவாக்கில் அவருக்கு ஒரு யோசனை தோன்றுகிறது . அதன்படி விமானம் (Flight) செயல்படும் போது அதன் விவரங்கள் மற்றும் கார்பெட் (Carpet) அதாவதுவிமானிகளின் அறையில் நடக்கின்ற உரையாடல்கள் மற்றும் விமானிகள் தகவல் கட்டுப்பாட்டு அறையுடன் பேசும் விவரங்கள் அனைத்தையுமே சேமித்து வைக்க ஒரு கருவி இருந்தால் விமான விபத்து எப்படி ஏற்பட்டது என்பதனை அறிய முடியுமே என்பதுதான் அந்த யோசனை .
அதனை மெல்போர்ன் நகரில் இருக்கக்கூடிய விமான ஆராய்ச்சி கழகத்திற்கு எழுதியும் அனுப்பினார் .இவரே பிறகு ARL Flight Memory Unit என்ற கருவியை வடிவமைத்தார் . ஆனால் அவரது கண்டுபிடிப்பு கவனிக்கப்படவில்லை . அதன் பிறகு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இந்த கருவி வடிவமைக்கபட்டது .
கருப்புப் பெட்டி எவ்வாறு வேலை செய்யும் ?
//How Black Box does work?
தற்போது இருக்கக்கூடிய கறுப்பு பெட்டியில் 25 மணி நேரத்திற்கான விமான தகவல்களும் 2 மணிநேர விமானிகளின் உரையாடல்களும் பதிவு செய்யப்படுகின்றது . இவை தானாகவே அழிந்து புதிய தகவல்களை சேமிக்கின்றன .
விமான தகவல்கள் என்பன எந்த உயரத்தில் எந்த வேகத்தில் பயணிக்கிறது . எவ்வளவு எரிபொருள் இருக்கின்றது என விமானத்தின் அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் .
2 மணிநேர விமானிகளின் உரையாடலில் , விமானிகள் பேசிக்கொள்வது , விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிக்கொள்வது , விமானத்தின் Noise அதாவது சத்தம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் .
கருப்புப் பெட்டி கண்டறிவது எப்படி ?
பொதுவாக கறுப்பு பெட்டி விமானத்தின் வால்பகுதியில் தான் பொருத்தப்பட்டிருக்கும் . கறுப்பு பெட்டியில் ஒரு சென்சார் ஒன்று இணைக்கப்பட்டு இருக்கும் . தண்ணீரில் படும்போது அது செயல்பட துவங்கும் . அது அனுப்பிடும் சிக்னலை வைத்து எளிமையாக தேடி கறுப்பு பெட்டியை கண்டறிந்து விடலாம் . சில சமயம் கண்டுபிடிக்கப்படாமல் போன நிகழ்வுகளும் நடந்திருக்கின்றது .
PAMARAN KARUTHU
Share with your friends !