Why India decided to ban What’sApp? வாட்ஸ்ஆப் இந்தியாவில் தடை செய்யப்படுமா ?

உலகம் முழுவதும் பெரும் வாடிக்கையாளர்களை கொண்டிருக்க கூடிய மிகப்பெரிய சாட் ஆப் வாட்ஸ்ஆப்பினை சில எல்லையோர மாநிலங்களில் தடை செய்யலாம் என்கிற முடிவிற்கு இந்திய அரசு வந்துள்ளதாக தெரிகின்றது .

 

 

வாட்ஸ்ஆப்பினை பெரும்பாலானவர்கள் பயன்படுத்திட முக்கிய காரணமே அதனுடைய End to End Encryption சிறப்பம்சம் தான் . இந்த தொழில்நுட்பம் வாட்சாப்பில் பயன்படுத்தப்படுவதால் பயனாளர்கள் தங்களுக்குள் அனுப்பிக்கொள்ளும் உரையாடல்களை பாதுகாப்பு ஏஜென்சிகளால் கூட இடைமறித்து கேட்க முடிவது  இல்லை .

 

————————————————

 

நாம் அனுப்பும் அத்தனை செய்தியும்,புகைப்படமும்,வீடியோவும் எவராலும் படிக்க முடியாத அளவுக்கு end to  end encrypt முறையில் மாற்றியமைக்கப்பட்டு அனுப்ப படுகின்றது. நாம் ஒவ்வொரு முறை செய்தி அனுப்பும் போதும் அந்த செய்தி 60 ரேண்டம் எண்களால் என்கிரிப்ட் செய்யப்பட்டு மீண்டும் அந்த செய்தி பெறுபவரின் வாட்ஸ் அப் செயலியில் மீண்டும் டிகிரிப்ட் அதாவது அதே 60 இலக்க  எண்களை  கொண்டு மாற்றி அமைக்கப்பட்டு நாம் படிக்கும் படி தெரிகின்றது. அந்த 60 டிஜிட் எண் என்னவென்று தெரியாமல் யாரும் அந்த செய்தியை படிக்க இயலாது. அந்த 60 இலக்க ரேண்டம் எண் செய்தியை அனுப்புபவருக்கும் செய்தியை பெறுபவருக்கு ஏன் வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கூட தெரியாது என்பதே உண்மை. இந்த 60 இலக்க ரேண்டம் எண் நாம் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் மாறுபடும்.

 

———————————–

 

குறிப்பாக வாட்ஸ்ஆப்பில் காலிங் வசதியை கொண்டே பெரும்பலான தீவிரவாத இயக்கங்கள் தங்களுக்குள் உரையாடல்களை மேற்கொள்கின்றன என்பதும் அண்மையில் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களில் தெரிய வந்திருக்கின்றது .

 

 

திங்கள்கிழமை நடந்த பாதுகாப்பு துறை அதிகாரிகளின் சந்திப்பில் , 2016 ஆம் ஆண்டு ராணுவ கேம்பில் நடந்த தீவிரவாத தாக்குதலில் சம்பந்தபட்ட தீவிரவாதிகளை பிடித்து விசாரித்ததில் எல்லைக்கு அப்பால் வாட்ஸ்ஆப் காலிங் மூலமாக தங்களுக்கு உத்தரவு வந்ததாக தெரிவித்து இருக்கின்றனர் . அந்த தாக்குதலில் ஏழு ராணுவ வீரர்கள் பலியாகினர் .

 

மேலும் இந்த கலந்துரையாடலில் இணையத்தில் பரவிடக்கூடிய தவறான தகவல்களை தடுப்பது , பாலியல் வீடியோ போன்றவற்றை அகற்றுவது , விஷம கருத்துக்களை தடுப்பது போன்ற பல விசயங்கள் விவாதிக்கப்பட்டு இருக்கின்றன .

 

WhatsApp தமிழகத்தில் தடை செய்யப்படுமா ?

 

தற்போது வரை எங்குமே வாட்ஸ்ஆப் தடை செய்யப்படவில்லை . தற்போது வாட்ஸ்ஆப் காலிங் சேவையை அதிகமாக பயன்படுத்திட ஆரம்பித்து இருப்பதனால் அதை  தீவிரவாத குழுக்களும் பயன்படுத்திட ஆரம்பித்துள்ளன . இதனை கொண்டு இளைஞர்களை மூளை சலவை செய்வது உள்ளிட்டவையும் சமூகத்தில் வன்முறை சிந்தனைகளை பரப்புவதும் அதிகரித்திருப்பதாக தெரிகின்றது .

இவை அனைத்துமே எல்லையோர மாநிலங்களான ஜம்மு காஸ்மீர் போன்றவற்றில் அதிகமாக நடைபெறுவதனால் அங்கு முதலில் வாட்ஸ்ஆப் காலிங் வசதி நிறுத்தப்படலாம் என தெரிகிறது .

தமிழகத்தில் வாட்ஸ்ஆப்பின் எந்த வசதியும் தடை செய்யப்பட வாய்ப்பில்லை . பின்னாளில் நாடு முழுவதும் கூட தடை செய்யபடலாம் .

 

சிறப்பு தகவல்கள் :

 

 

PAMARAN KARUTHU

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *