How UPI is working? | UPI Transaction பாதுகாப்பனதா?

UPI : Unified Payment Interface

 

தற்போது பெரும்பலான பண பரிமாற்றங்கள் அனைத்தும் மொபைல் ஆப் வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . இந்தியா ஏற்கனவே ரொக்கமில்லா வர்த்தக பயன்பாட்டினை நோக்கி சென்றுகொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் UPI மூலமாக தற்போது ரொக்கமில்லா பண பரிமாற்றம் அதிகரித்து வருகின்றது .

 

இந்த வசதியில்  QR code மூலமாக பண பரிமாற்றம் செய்யலாம் , ஆப் மூலமாக பண பரிமாற்றம் செய்யலாம் . இந்தியாவின் பண பரிமாற்ற தொழில்நுட்பத்தில் நடந்திருக்கக்கூடிய மிக பெரிய முன்னேற்றமாக இந்த UPI வசதி பார்க்கப்படுகிறது .

 
 

ஆனாலும் இன்றும் பலருக்கு இந்த முறையில் பணம் அனுப்புவதில் சற்று தயக்கமும் நம்பிக்கையின்மையும் ஏற்படத்தான் செய்கின்றது . அவர்களுக்காக இங்கே சில விளக்கங்கள்

 

What is UPI? | UPI? என்றால் என்ன ?

 
 

எளிமையாக புரிந்துகொள்ளவேண்டும் என்றால் UPI என்பது உங்களது பணத்திற்க்கான மெயில் (Mail ) ID என கூறலாம் . நீங்கள் IMPS முறையில் பண பரிமாற்றம் செய்யும்பொது உங்களது  வங்கி, பணபரிமாற்றத்தினை செய்ய  unique identifier ஐ உருவாக்கி பரிமாற்றத்தை மேற்கொள்ளும் .

இந்த IMPS முறையில் பண பரிமாற்றம் 24 மணிநேரமும்  மேற்கொள்ள முடியும் .

 

எனவே அதே முறையில் பணபரிமாற்றத்தினை debit card மற்றும் credit card இல்லாமலே ஆன்லைன்  மூலமாக மேற்கொள்ள முடியும் .

 

Who is behind UPI?

 

இந்த UPI வசதியினை இந்தியாவில் கொண்டுவர NCPI(National Payments Corporation) முயற்சிகளை மேற்கொண்டு பிறகு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank Of India) மற்றும் இந்தியன் பேங்க் அசோசியேசன் (Indian Bank of association) உதவியுடன் கொண்டுவந்தது .

 

இந்த NCPI ரூபே பண பரிமாற்ற தொழில்நுட்பங்களை (Rupay Payments Infrastructure) பயன்படுத்தி பல வங்கிகளை ஒன்றிணைத்து பண பரிமாற்றம் செய்வதற்கான ஆப்சன்களை வழங்குகின்றன .

 

How does UPI works ?

தற்போது இண்டெர்நெட் பேங்கிங் மூலமாக பண பரிமாற்றம் செய்யவேண்டும் எனில் வங்கி கணக்கு எண் , வங்கி பெயர் மற்றும் IFSC code உள்ளிட்டவற்றை பதிவு செய்ய வேண்டும் . இதையெல்லாம் கஷ்டபட்டு செய்தாலும் நீங்க பதிவு செய்தவருக்கு 12 மணி நேரம் ( நேரம் மாறுபடலாம் ) காத்திருந்த பின்னரே பணம் அனுப்பிட முடியும் .

 

இந்த கடினமான முறையை தவிர்த்து எளிமையாக ஆதார் எண் , மொபைல் எண் அல்லது விர்ச்சுவல் பெமென்ட் அட்ரஸ் மூலமாக வங்கி தகவல்களை  பதிவிடாமலேயே பணம் அனுப்ப அல்லது பெற முடியும் .

UPI வசதிக்குள் இணைவதற்கு 29 வங்கிகளுக்கும் அதிகமான வங்கிகள் ஒப்புக்கொண்டுவிட்டன. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி UPI வசதியை அனுமதித்திருப்பின் உங்களது வங்கியை அணுகி உங்களது கணக்கிற்கு அந்த வசதியை பெற முடியும் .

 

How to USE UPI in App?

 

UPI வசதி கொண்ட போன்ற ஆப்களில் ஏதேனும் ஒன்றினை டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்

App ஐ இன்ஸ்டால் செய்திடுங்கள்

உங்களுக்கான Login ஐ உருவாக்கிடுங்கள்

உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கொடுத்து Virtual address ஐ பெற்றிடுங்கள்

உங்களுக்கான M Pin ஐ கொடுத்திடுங்கள்

இனி நீங்கள் பணம் அனுப்பிடலாம் .

 

நீங்கள் இணைந்துவிட்டபிறகு பண பரிமாற்றத்தை மேற்க்கொள்ள இரண்டு முகவரிகளை பயன்படுத்தலாம்.

 

Global Address
Local Address

 

Global Address என்பது உங்களது மொபைல் எண் , ஆதார் எண் , வங்கி கணக்கு எண் .

 

Local Address என்பது உங்களது வங்கி உங்களுக்கு கொடுத்துள்ள விர்ச்சுவல் ஐடி.  மெயில் ஐடியை போலவே இருக்கும் (name@icccibank) இதனை வைத்துகொண்டு பல வங்கிகளில் இருந்தும் பணம் பெற, அனுப்ப முடியும் .

 

ஒரே மொபைல் ஆப்பை பயன்படுத்திட வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை .

 

உதாரணத்திற்கு நீங்கள் கூகிளின் Tez மூலமாக பணம் அனுப்புகிறீர்கள் என்றால் , உங்களது வங்கிக்கு அந்த தகவல் போகும் . நீங்கள் ஏற்கனவே pin எண்ணை கொடுத்தவுடன் உங்களால் பண பரிமாற்றத்தினை மேற்கொள்ள முடியும் . வங்கி பணம் எடுத்ததற்கான தகவல்களை உங்களது மொபைல் எண்ணிற்கு வழக்கம்போல அனுப்பிவைக்கும் .

 

உங்களுக்கு tez ஆப் மூலமாக அணுப்பிட வேண்டாம் என முடிவெடுத்து வேறொரு ஆப்பை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொண்டால் கவலைப்பட தேவையில்லை . tez ஆப் setting க்குள் சென்று உங்களது கணக்கினை மூடி விடலாம் . வேறொரு ஆப்பில் பதிந்து அங்கே நீங்கள் பண பரிமாற்றத்தில் ஈடுபடலாம் .

 

What I can do with UPI?

 

UPI வந்ததே உங்களது இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்காகத்தான் . நாம் தற்போது NEFT மற்றும் IMPS , மொபைல் வாலட் களாக இருக்கக்கூடிய paytm , mobikwik போன்றவற்றின் மூலமாகவே பண பரிமாற்றம் செய்துவருகிறோம் . UPI மூலமாக இவைகளைவிட இன்னும் எளிமையாக பண பரிமாற்றம் செய்திட முடியும் .

பிரபல வர்த்தக கம்பெனிகளாக அறியக்கூடிய ஓலா , உபர் , புட் பாண்டா போன்ற பலரும் கூட UPI வசதியினை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர் .

 

பழைய முறைப்படி எவ்வாறு பாதுகாப்பாக பண பரிமாற்றம் செய்திர்களோ அதற்கு சற்றும் குறையாத பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கின்றது UPI .

NPCI இன் இந்த IMPS நெட்ஒர்க் மூலமாக நாள் ஒன்றுக்கு கிட்டதட்ட 8 ஆயிரம் கோடி பரிமாற்றம் செய்யப்படுகின்றது . தற்போது அதிக அளவில் அதிகரித்துக்கொண்டும் வருகின்றது .

இயல்பாக செய்யும் பண பரிமாற்றத்திற்கு எப்படி OTP தேவைப்படுகிறதோ , இந்த முறையில் MPIN பயன்படுத்தபடுகிறது .

 

உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் இல் பதிவிடவும் .

இதுபோன்ற செய்திகளை தொடர்ச்சியாக படிக்க Subscribe செய்திடுங்கள்

 

PAMARAN KARUTHU

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *