Leaf Wearables | Women Safety Device won 1 million dollars | பெண்கள் பாதுகாப்பு கருவி , $1 மில்லியன் வென்ற இந்தியர்கள்
Safety is a fundamental human right and should not be considered a luxury for women.– Anu Jain, philanthropist and entrepreneur
- அனு (Anu) மற்றும் நவீன் ஜெயின் (Navin Jain) ஆகிய இரு அமெரிக்க இந்திய பாரம்பரியம் கொண்டவர்களினால் அமைக்கப்பட்ட Women’s Safety XPRIZE அமைப்பிடம் தான் 1 மில்லியன் பரிசுத்தொகையினை வென்றுள்ளது இந்திய அணி .
மாணிக் மேத்தா, நிகாரிகா ராஜிவ் , அவினாஷ் பன்சால் ஆகிய மூன்று பேரை கொண்ட இந்திய அணி தான் பரிசினை வென்றது .
நிர்பயா டெல்லியில் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டபிறகு பெண்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்யும்பொருட்டும் ஆபத்தில் இருக்ககூடிய பெண்களை காப்பாற்ற , அவர்கள் கைகளில் அணிந்திருக்கும் கருவியின் மூலமாக சம்பந்தப்பட்டவர்க்ளுக்கு தகவல்களை தெரிவிக்கும் விதமாகவும் இந்த கருவி (Leaf wearables device) வடிவமைக்கப்பட்டது .
இந்த leaf கருவியை மோதிரமாகவோ அல்லது வேறு விதமாகவோ அணிய முடியும் . ஆகையால் பிறரால் இந்த கருவியினை அடையாளம் கண்டுகொள்ள முடியாது .
மொபைல் போன் உதவியின்றி செயல்படக்கூடியது இந்த கருவி , மேலும் குறைந்த நெட்ஒர்க் (Low Network Coverage) உள்ள இடத்திலும் இந்த கருவி செயல்படும் .
XPRIZE அமைப்பினுடைய நபர்கள் இந்த புதிய கண்டுபிடிப்பினை கருவியாக சந்தைப்படுத்த பல நிறுவனங்களிடம் அணுகியுள்ளனர் .
இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அரசாங்கமே அங்கீகரித்து கருவிகளை உற்பத்தி செய்யவும் , அதனை பெண்களிடம் கொண்டு சேர்க்கவும் முன்வர வேண்டும் .