CobraPost : Dinanalar “Hindutuva” Support Exposed | கோப்ராபோஸ்ட் தினமலர் “இந்துத்துவா” முகத்திரை கிழிப்பு
தமிழகத்தின் முன்னனி பத்திரிகைகளில் ஒன்றான “தினமலர்” பத்திரிக்கை தற்போது “இந்துதுவா” கொள்கைகளை பரப்புவதற்கும் மத்திய அரசிற்கு ஆதரவாக செய்திகளை பரப்புவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளது என்பது கோப்ராபோஸ்ட் நடத்தியுள்ள ஸ்டிங் ஆப்ரேசனில் தெரியவந்துள்ளது .
கோப்ராபோஸ்ட் நிறுவனத்தை சேர்ந்த புஸ்ப் சர்மா என்பவர் தினமலர் அலுவலகத்தின் சென்னை பிரிவிற்கு வருகை தருகின்றார் . அவர் சென்னையில் இருக்கும் நிர்வாகி மார்ட்டின் அவருடன் சில ஊழியர்கள் சந்திக்கின்றனர் .
வந்திருப்பவர் மார்டின் அவர்களிடம் மூன்று விசயங்களை முக்கியத்துவம் கொடுத்து செய்ய வேண்டும் என்கிறார் .
முதலாவது ஹிந்துத்துவா கொள்கைகளை பரப்புவது , அதிலும் பகவத் கீதா மற்றும் கிருஷ்ணாவின் போதனைகள் மூலமாக பரப்புவது .
இரண்டாவது ராகுல் காந்தியை பப்பு என பரப்பி அதன் மூலமாக கேரக்டர் அசாசினேஷன் செய்வது .
லட்சுமிபதி ஆதிமூலம் : மார்ட்டின் ஏற்கனவே உங்களுடைய வருகைக்கான நோக்கத்தினை கூறினார் . உங்களுக்கு அதிக இடம் ஒதுக்க வேண்டும் . அது ஒன்றும் பிரச்சனையில்லை . நிறையவே இருக்கின்றது . நாங்களும் பாஜகவின் பாதையிலேயே பயணிக்கின்றோம் .
ஆகையால் நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதனை எழுதுவோம் . ஆட்சியாளர்களை பற்றி கவலைப்படுவதில்லை .
அதனால் தான் மத்திய அரசுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் அதிக நெருக்கம் . எனது அப்பாதான் செய்தித்தாளுக்கு “பதிப்பாளர் ” . அவர் PTI இன் சேர்மன் ஆக இருந்துள்ளார் . தற்போது அவர் ட்ரஸ்டி ஆக இருக்கிறார் .
நானும் INS என்னும் அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றேன் , அப்பா இரண்டுமுறை INS அமைப்பிற்கு இரண்டுமுரை சேர்மன் ஆக இருந்துள்ளார் . மத்திய அரசுக்காக பலவற்றை செய்திருக்கிறோம் .
அனைவருக்குமே தெரிந்ததுதான் , தேர்தலுக்கு முன்பே நமது பிரதமர் இரண்டுமுறை அழைத்து பேசியிருக்கிறார் . அவர் அழைத்த சில நாளிதல்களில் தினமலரும் ஒன்று .அதேபோல தென்னிந்தியாவில் பிரசாரம் செய்ய வரும்போது இரவில் தங்கிவிட்டு காலையில் செய்தி நிறுவனங்களை ஒருமணி நேரம் சந்தித்தார் அதில் 45 நிமிடங்கள் தினமலருக்காக .
எனது குடும்ப உறுப்பினர்கள் , குழந்தைகள், வரும்காலத்தில் தினமலரை நிர்வகிக்க போகின்ற இவர்களோடு பிரதமரை டெல்லியில் ஒருமுறை சந்தித்து இருக்கின்றோம் .
பாமரன் கருத்து
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருக்கக்கூடிய செய்தி நிறுவனங்கள் அதிகாரத்தை வலைப்போருக்கு எதிராக களம்கண்டு மக்களை காப்பற்றிட வேண்டும் . ஆனால் அற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களது கடமையை உணராமல் இவ்வாறு செயல்படுவது என்பது மிகபெரிய நம்பிக்கை துரோகம் . தவறு .