வாசிப்பு : சிந்தனையை செழுமையாக்கும் மந்திரம் – மாற்றம் தரும் பதிவு
உடல் உயிரோடு இருக்க மூச்சு அவசியம்.சிந்தனை உயிரோடு இருக்க வாசிப்பு அவசியம்.
வாசித்தலை பொதுவாக இரண்டு வகைகளாக பிரிக்கலாம் . அதன்படி உடனடி தேவைகளுக்காக வாசித்தல் ,உதாரணமாக மேடை பேச்சு , கட்டுரை எழுதுவது போன்ற காரணங்களுக்காக வாசிப்பது . இரண்டாவது உடனடி தேவைக்காக அல்லாமல் வாழ்வினை வளப்படுத்த , சிந்தனையை மேம்படுத்த படிப்பது .
“உடனடி தேவைகளுக்காக வாசிப்பு என்பதைவிட நிரந்தரமான , தேடுதல் அடங்கிய, சிந்தனையில் மாற்றம் தருகிற வாசித்தலே சிறந்தது .”
இணையத்தின் உதவியால் சமூக வலைதளங்களின் அதீத வளர்ச்சியால் தற்போது தகவல்கள் நொடிப்பொழுதில் பரப்பப்படுகின்றன . அதனை இன்றைய இளைஞர்களும் , மாணவர்களும் அதிகமாகவே படிக்கிறார்கள் .
உண்மையாக சொல்லப்போனால் நாம் செய்துகொண்டிருப்பது வாசித்தலே அல்ல , தகவல் சேகரிப்பு மட்டுமே .
குட்டி உண்மை :வாசிப்பின் நாயகன் பகத்சிங்
இளைஞர்களால்போற்றப்படுகின்ற பகத்சிங் தூக்கிலிட நேரம் நெருங்கி கொண்டிருக்கின்றது . ஜெயில் அதிகாரி பகத்சிங்கை பார்த்து இன்னும் சிறிது நேரத்தில் உனக்கு தூக்கு தண்டணை என சொல்கிறார் . அதற்கு புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கின்ற பகத்சிங் கூறுகிறார் “காத்திருங்கள் , தூக்கில்தானே இட போகிறீர்கள் . நான் லெனினுடைய வாழ்க்கை சரித்திரத்தை படித்துக்கொண்டிருக்கிறேன் , முடித்துவிடுகிறேன் ” என்றார் .
அந்த ஜெயில் அதிகாரியும் காத்திருந்தார் என்பது வரலாறு . அந்த அதிகாரி பகத்சிங் இருக்கும் அறைக்குள் நுழைகிறார் . புத்தகங்கள் அடுக்கடுக்காய் இருக்கின்றன . வியந்துபோன அதிகாரி ” இத்தனையையும் நீ உண்மையாலுமே படித்துவிட்டாயா ? ” என்றார் . அதற்கு பகத்சிங் “எந்த புத்தகத்தை வேண்டுமானாலும் எடுத்து எந்த பக்கத்திலிருந்தும் கேள்வியை கேட்டால் விடையளிக்க நான் தயார் ” என்றார் .(ஒருவேளை அந்த அதிகாரிக்கு விடுதலை செய்யும் அதிகாரம் இருந்திருந்தால் பகத்சிங்கை விடுதலை செய்து படி என சொல்லியிருப்பார் )
நண்பர்களே சாகப்போகிறோம் என தெரிந்த பின்னரும் அறிவினை தேடி பகத்சிங் வாசித்து இருக்கிறார் என்றால் வாசித்தலின் முக்கியதுவத்தை நம்மால் உணர முடியும் . இறக்கும் தருவாயிலிலும் அவரின் படிக்கின்ற ஆர்வத்திற்கு காரணம், வாசித்தல் மட்டுமே அறிவின் தேடுதலுக்கு விடையளிக்கும் என்பதனை அறிந்ததாலேயே.
அவரைப்போல நாமும் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதில்லை , காலையில் டீ அருந்தும் நிமிடங்களில், ஓய்வெடுக்கும் சில மணி நேரங்களில் , தூங்கப்போகும் முன் சில அரை மணி நேரங்களில் வாசிக்கலாம் நண்பர்களே !
சிந்தனையை செழுமை படுத்துகின்ற தேடலுடன் நாமும் வாசிப்போம் !
நன்றி
பாமரன் கருத்து