[embedyt] https://www.youtube.com/watch?v=mfITXsx9oO8[/embedyt]
சமூக வலைதளங்களில் வைரலாக Snickers சாக்லேட் பற்றிய வீடியோ பரவி வருகின்றது. அதனை பார்க்கும் அனைவருக்கும் Snickers சாக்லேட் சாப்பிடலாமா , குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கலாமா என்கிற குழப்பம் ஏற்படலாம் . அந்த வீடியோவில், தோண்டப்பட்டு இருக்கும் பெரிய பள்ளம் ஒன்றினில் Snickers சாக்லேட் பாக்கெட்டுகளை பணியாட்கள் கொட்டுகிறார்கள் . அதனை சில நபர்கள் புகைப்படம் , வீடியோ எடுக்கிறார்கள் .
வீடியோ உண்மையானதா ?
வீடியோ உண்மையானதுதான் . ஆனால் அது எடுக்கப்பட்ட காலம் தான் 2018 அல்ல . ஆம் நண்பர்களே இந்த வீடியோ 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது .தற்போது சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீடியோ 2016 இல் காஸா என்கிற இடத்தில் Snickers ஊழியர்களே அதனை புதைக்கும் வீடியோ தான் இதனை அந்நாட்டு அமைச்சரவை ட்விட்டரில் தெரிவித்துள்ளது .
2016 இல் நடந்தது என்ன ?
2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜாம்பவான்களில் ஒன்றாக கருதப்பட்ட மார்ஸ் என்கிற நிறுவனம் , நெதர்லாந்தில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட Snickers சாக்லேட் அனைத்தையும் உலகம் முழுவதிலும் இருந்து திரும்ப பெற ஆணையிட்டது . இதற்கு முக்கிய காரணம் நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டில் பிளாஸ்டிக் துணுக்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுதான் .
அதன் பிறகு நெதர்லாந்தில் இருக்கும் தொழிற்சாலை மூடப்பட்டது . கட்டார் நாடு தனது நாட்டு சந்தையில் மார்ஸ் நிறுவன பொருள்களை விற்க தடை செய்தது .
ஏற்கனவே இறக்குமதி ஆகியிருந்த அந்த snickers சாக்லேட் பாக்கெட்டுகளை அந்த நிறுவன அதிகாரிகளே அழிக்கும்போது எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ .
சரி சாப்பிடலாமா கூடாதா ?
இதனை நீங்கள் முடிவு செய்வதற்கு முன்பாக சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன் .
கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழங்களை ஒருவர் ரசாயன நீரில் அமிழ்த்தி எடுப்பது போன்ற வீடியோ சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பரவியது . உடனடியாக சோதனை செய்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ராசாயனம் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட பழங்களை டன் கணக்கில் பறிமுதல் செய்தனர் .
கொஞ்சம் யோசியுங்கள் ,
தெரியாதல்லவா ? அதே நிலைமை தான் snickers சாக்லேட் வீடியோவிற்கும்.
2016 இல் தயாரிக்கப்பட்ட சாக்லேட் இல் மட்டுமே பிளாஸ்டிக் இருந்தது , இப்போது 100 சதவிகிதம் இல்லை என உறுதியாக சொல்ல முடியாது .
இது Snickers க்கு மட்டுமல்ல மற்ற சாக்லேட் பொருள்களுக்கும்தான் .
என்னதான் முடிவு :
ஏதோ சில வீடியோக்கள் , புகார்கள் வரும்போது மட்டும் சோதனை செய்து பறிமுதல் செய்வது போதாது . குறிபிட்ட இடைவெளியில் சந்தையில் விற்கப்படும் பொருள்களை சோதனை செய்துகொண்டே இருக்கவேண்டும் .
ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான பாதுகாப்பான உணவினை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு முற்றிலுமாக அரசையே சார்ந்தது .
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அதனை ஒவ்வொரு முறையும் உறுதிபடுத்திட வேண்டும் . இரண்டு மூன்று அதிகாரிகளை மட்டுமே வைத்துகொண்டு ஒட்டுமொத்த நகரையும் கண்காணிப்பது இயலாத ஒன்று . ஆகையால் அதிகபடியான அதிகாரிகளை நியமித்து மக்களுக்கு நல்ல உணவினை தர அரசு உறுதிகொள்ள வேண்டும் .
உலகம் இயங்குவது ஒரு சான் வயிறுக்காகத்தான் . அதற்காக நாம் சாப்பிடுவது தரமில்லாத உணவாக இருக்கலாமா ? கூடவே கூடாது .
நடவடிக்கை எடுக்குமா அரசு ?
நன்றி
பாமரன் கருத்து
Snickers சாப்பிட்டா நீ நீயா இருக்க மாட்ட!!! இதுக்கு ஏதாவது உள் அர்த்தம் இருக்குமோ?????
பிளாஸ்டிக் துணுக்குகள் இருந்தால் கண்டிப்பாக நாம் நாமாக இருக்க மாட்டோம்