நீட் தேர்வு (NEET) : ஓர் அறிமுகம், எதிர்ப்பு ஏன்?

நீட் தேர்வு (NEET) : ஓர் அறிமுகம்

இந்தியாவில் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவ படிப்பு MBBS , BDS படிப்பதற்கும் முதுநிலை பட்டபடிப்பான MD மற்றும் MS படிப்பதற்கும் இந்த தேர்வு நடத்தப்படுகின்றது.
இதில் MBBS , BDS படிப்பதற்கான NEET-UG தேர்வினை CBSE நடத்துகின்றது.

நீட் தேர்வு
நீட் தேர்வு

2013 ஆம் ஆண்டு வரையில் நடத்தப்பட்டு வந்த (AIPMT) All India Pre Medica Test உள்ளிட்ட பல தனித்தனியான நுழைவுத்தேர்வுகளுக்கு மாற்றாக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. தமிழகம் போன்ற சில மாநிலங்கள் சில ஆண்டுகள் விளக்கும் பெற்று இருந்தன. ஆனால் தற்போது ஒட்டுமொத்த இந்திய கல்லூரிகளுக்கும் NEET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விலக்கு :

இந்த நீட் தேர்வில் இருந்து All India Institute of Medical Sciences in New Delhi, Postgraduate Institute for Medical Education and Research in Chandigarh, Jawarharlal Institute of Postgraduate Medical Education & Research JIPMER போன்ற கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்க்கு அவை வேறு சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளதால் நீட் தேர்வை திணிக்க முடியவில்லை.

தமிழ்நாடு எதிர்க்க காரணம் :

தமிழகத்தில் உள்ள 2006 ஆம் ஆண்டுக்கு முன்புவரை பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்காக Tamil Nadu Professional Courses Entrance Examination (TNPCEE) என்கிற நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால் இந்த தேர்வில் பெரும்பாலான நகரத்தை சேர்ந்த மாணவர்களே தேர்ச்சி ஆகினர். 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற கிராமத்து மாணவர்கள் கூட நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் சேர முடியாமல் தவித்து வந்தனர். இதற்க்கு காரணமாக நகர்ப்புறங்களில் அதிக நுழைவு தேர்வு பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு இருந்ததும் கிராமங்களில் அது இல்லாமல் போனதும் காரணமாக கூறப்பட்டது.

இதனை அடுத்து இந்த தேர்வு முறையை 18th and 19 மே  2006 முதல் நிறுத்திவைத்து, 12 ஆம் வகுப்பில் பெரும் மதிப்பெண்களை வைத்து கல்லூரியில் சேரும் முறைக்கு மாறியது தமிழகம்.

தற்போது இந்தியா முழுமைக்கும் கொண்டுவந்துள்ள இந்த NEET  தேர்வினை நடத்துபவர்கள் CBSE அமைப்பு. இவர்களுடைய பாடத்திட்டத்திற்கும் தமிழக அரசின் பாட திட்டத்திற்குமே பல வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக CBSE பாடத்திட்டம் முன்னோக்கியதாகவும் தமிழக அரசின் பாட திட்டம் பின்னோக்கியதாகவும் உள்ளது. இதனால் இந்த தேர்வில் தமிழக பாட திட்டத்தில் படித்த மாணவர்களால் CBSE பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுடன் போட்டி போட முடியாது என்பதே முக்கிய காரணம் .

சாதகம் என்ன :

மாற்றமே இல்லாத தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இனிமேல் CBSE பாடத்திட்டத்திற்கு இணையான பாடத்திட்டத்தினை மாநில அரசு கொண்டுவர வலியுறுத்துவார்கள்.

அரசே இனிமேல் பாடத்திட்டத்தினை மாற்றிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகும்.

மாணவர்கள் இனிமேல் CBSE மாணவர்களுடன் போட்டி போட தங்கள் அறிவினை மேம்படுத்திக்கொள்ள வெளியில் சென்று படிக்க ஆரம்பிப்பார்க்ள

அரசின் கடமை என்ன ?

இலவசமாக மேம்பட்ட கல்வியறிவினை தனது குடிமக்களுக்கு அளித்திடுவது என்பது அரசினுடைய கடமை.

ஒரே நாட்டில் தனியார் பள்ளிகளில் ஒருவிதமான பாட திட்டத்தின்படி கல்வியும் அரசின் பள்ளியில் வேறு விதமான பாட திட்டத்தின்படி கல்வியும் அளித்துவிட்டு இருவரையும் ஒரே தேர்வுத்தாளுக்கு விடையளிக்க சொல்லி தேர்ந்தெடுப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

அனைவருக்கும் ஒரே நுழைவுத்தேர்வினை அறிவிக்க அதிகாரமுள்ள மத்திய அரசு ஏன் அனைவருக்கும் பொதுவான ஒரு பாடத்திட்டம் தான் இந்தியாவில் பின்பற்றபட வேண்டும் என உத்தரவிட முடியவில்லை. இது சூழ்ச்சி தானே?

பொதுவான பாடத்திட்டத்திற்கு பிறகு பொது நுழைவு தேர்வு என்பதே சரியான ஒன்று..

நன்றி
பாமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *