வருமான வரி குறைப்பிற்காக நீங்கள் கொஞ்சம் போலியான ஆவணங்களை தாக்கல் செய்பவரா ? உங்களுக்கான பதிவு
யாரையும் குற்றம் சொல்வதற்கான பதிவு இது அல்ல . மாறாக பொய்யான ஆவணங்களை கொடுத்து வரியை குறைக்க நீங்கள் முற்பட்டால்
ஒரு நிமிடம் நாம் செய்யும் செயலினை மறு ஆய்வு செய்வதற்கான பதிவாக இது இருக்கும் .இந்த பதிவை படித்த பின்பு உங்களது மனம் மாறினால் அது நமக்கு கிடைத்த வெற்றியே !
ஒரு நாடு இயங்க அடிப்படை ‘வரி’ . வரியின் மூலமாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நிதியை கொண்டே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இயங்குகிறது . அதற்கென பலவிதமான வரிகள் நடைமுறையில் உள்ளன .அதில் பிரதானமாக இருப்பது ‘வருமான வரி ‘
போலியான ஆவணங்கள் :
இணையத்தில் வருமான வரி என தேடினால் முதலில் கிடைக்கும் தகவல்களை பார்த்தால் ‘வருமான வரி யை குறைப்பது எப்படி ? ‘ என்கிற கேள்விக்கான பதிலாகத்தான் இருக்கும் . மார்ச் மாதம் வந்துவிட்டாலே பலரது தேடுதலும் இதுவாகத்தான் இருக்கும் .
மருத்துவ பில்
வீட்டு வாடகை :
ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீட்டு வாடகையை எந்த ஆவண சான்றும் இல்லாமல் (பான் கார்டு ) காட்டலாம் என்பதால் அனைவரும் 8300 என வாடகை போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது .
போலி மருத்துவ பில் :
ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 15 ஆயிரம் அளவிற்கு மருத்துவ பில் கொடுக்கலாம் . அவ்வாறு கொடுத்தால் பத்து சதவிகிதம் அளவிற்கு அதாவது 1500 ரூபாய் வரி குறையும் .
சாதரணமாக நாம் மருந்துகளை வாங்கும் போது பில் வாங்கினால் கூட உண்மையான பில்களை கொடுக்க முடியும் . அவ்வாறு பில்களை சேகரித்து வைக்காதவர்களுக்கும் மருத்துவ செலவே செய்யாதவர்களுக்கும் போலி பில்களை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர் .
15 ஆயிரத்துக்கான பில் வெறும் 200 மட்டுமே . இதன் மூலமாக 1300 ரூபாயை சேமிப்பதாக கூறுகின்றனர் .
அரசு என்ன செய்ய வேண்டும் :
இதன் மூலமாக வீட்டு ஓனர்கள் வாடகையை வாங்கி கொண்டு வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவதையும் ஒரே வீட்டிற்கு பலர் வாடகை தருவதாக குறிப்பிடுவதையும் தடுக்க முடியும் .
போலி மருத்துவ பில் :
நானாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும் ஊழலே !
இந்த பதிவு அதை நியாபக படுத்துவதற்கான சிறு முயற்சி .
வரி கட்டும் நண்பருக்கு பகிருங்கள் !
நன்றி