“WhatsApp ” அப்டேட் – இனி பணம் அனுப்பலாம்
facebook நிறுவனத்தின் WhatsApp தகவல் பரிமாற்றத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த நிலையில் இனி பயனாளர்கள் பணம் அனுப்பும் வசதியையும் பெற இருக்கிறார்கள் . தற்போது இந்தியாவில் முழுமையான செயல்பாட்டுக்கு வரவில்லை எனவும் பீட்டா (Beta) வெர்சனில் இருப்பதாக தெரிகின்றது .
UPI (Unified Payment Interface) :
National Payments Corporation of India (NPCI) மொபைல் மூலமாக பணம் அனுப்பவும் மற்றும் பெறவும் வழிவகை செய்யக்கூடிய வகையில் UPI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது . இதன் மூலமாக ஒருமுறை உங்களது பேங்க் அக்கவுண்டை மொபைல் எண் , மெயில் அல்லது ஆதார் மூலமாக verify செய்துகொண்டால் போதும் . நீங்கள் பயன்படுத்தும் ஆப் மூலமாக பண பரிமாற்றம் செய்யமுடியும் .
UPI வந்ததாலும் வந்தது கண்ட ஆப் மூலமாகவும் பண பரிமாற்றம் செய்யும் வசதி வந்துவிட்டது .
Tez , Paytm etc போன்றவைகளுக்கு போட்டியாக இருக்கும் What’s App:
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கூகுள் நிறுவனம் Tez என்கிற ஆப்பை வெளியிட்டு Paytm உள்ளிட்ட ஆப்களுக்கே சவால்விட்டது . எளிமையாகவும் விரைவாகவும் பணம் அனுப்புவது மட்டுமின்றி ஆபர்களை அதிரடியாக கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தது .
கூகுள்க்கு போட்டியாக facebook தனது whatsapp மூலமாக பணம் செலுத்தும் வசதியை கொண்டுவந்து பல ஆப்களுக்கு சவால்விட காத்திருக்கிறது .
இலவச சாட் ஆப் whatsapp அனைவரது மொபைலிலும் இருக்கும் . ஆகவே எளிமையாக மற்ற ஆப்களின் இடத்தை whatsapp நிரப்ப அதிக வாய்ப்பு உண்டு . ஆனாலும் மற்ற நிறுவனங்கள் கொடுக்கும் ஆபர்களை கொடுக்குமா என தெரியவில்லை. இருந்தாலும் சவால் காத்திருக்கிறது .
நன்றி
பாமரன் கருத்து
Pingback:WhatsApp files going to be deleted on Nov 12 Release, Save Immediately | WhatsApp பழைய தரவுகள் அழிவதற்கான வாய்ப்பு – பாமரன் கருத்து