FOSS – Open Source (ஓபன் சோர்ஸ்) மூலமாக தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சி ?

Open Source (ஓபன் சோர்ஸ்) ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன, Open Source (ஓபன் சோர்ஸ்) மூலமாக தொழில்நுட்பம் அடைந்த வளர்ச்சியை பற்றி இந்த பதிவில் காண்போம்.

FOSS – Open Source (ஓபன் சோர்ஸ்) என்றால் என்ன ?

 

Open Source (ஓபன் சோர்ஸ்)
Open Source (ஓபன் சோர்ஸ்)

சாப்ட்வேர் (Software) அல்லது இயங்குதளம் (Operational Platform) அனைத்துமே தொடக்க காலங்களில் குறிப்பிட்ட தொகைகளுக்கு விற்கப்பட்டன. அவை உருவாக்கம் செய்யப்பட்டதன் நோக்கமே விற்பனை செய்வதற்காகத்தான். பிறகு சில நிறுவனங்கள் அல்லது சில வல்லுநர்கள் தங்களின் சாப்ட்வேரை மக்கள் பயன்பாட்டிற்கு இலவசமாக கொடுக்க தொடங்கினர். பல பெரிய நிறுவனங்கள் இயங்குதளத்தை (Operational Platform) கூட இலவசமாக வழங்க முன்வந்தன.

Open Source (ஓபன் சோர்ஸ்) என்கிற வார்த்தை முதன் முதலாக பிப்ரவரி 3, 1998 இல் Christine Peterson என்கிற ஆய்வாளரால் பயன்படுத்தப்பட்டது.

Open Source (ஓபன் சோர்ஸ்) சாப்ட்வேர்களின் சிறப்பே அதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம், அதன் code இல் என்ன மாற்றம் வேண்டுமானாலும் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலமாக பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளக்கூட முடியும்.

FOSS – Open Source (ஓபன் சோர்ஸ்) சாப்ட்வேர்ஸ் தொடக்கம் :

1994 – ஆம் ஆண்டு இலவச டேட்டா பேஸ் (DataBase) MySQL க்கான தொடக்கம் நடைபெற்றது.

1996 – Apache HTTP சர்வர் செயல்பாட்டுக்கு வந்தது

2004 – Canonical தனது உபுண்டு இயங்கு தளத்தை கொண்டுவந்தது, இதுவே பிறகு லினக்ஸ் இயங்குதளம் கிடைக்க வழிசெய்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு மக்களில் எவருமே சாப்ட்வேர் இண்டஸ்ட்ரி இவ்வளவு வளர்ச்சியை அடையும் என்பதையும் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அளவிற்கு உயரும் என்பதையும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.

சில ஓபன் சோர்ஸ் (Open Source ) மென்பொருள்கள் :

Linux (லினக்ஸ் )
Android (ஆண்ட்ராய்டு )
GNU
MySQL
Apache HTTP Server
Ubuntu
WordPress

இன்னும் பல ….

FOSS – Open Source (ஓபன் சோர்ஸ்) நன்மை :

சாப்ட்வேர் துறை இவ்வளவு வளர்ச்சியை அடைய மிக முக்கிய காரணம் Open Source தான். வல்லுனர்களும் திறமையாளர்களை கொண்ட நிறுவனங்களும் இந்த இலவச மென்பொருள்களை பயன்படுத்தி பல்வேறு அப்ப்ளிகேஷன்களை உருவாக்கின. அவற்றில் பல மக்களின் பயன்பாட்டுக்காக இலவசமாக தரவிறக்கம் செய்ய அனுமதித்தன .இணையம் இந்த அளவிற்கு வளர்ச்சியை எட்ட The LAMP (Linux, Apache, MySQL, PHP) இவைகளின் இலவச பயன்பாட்டு அனுமதி தான் முக்கிய பங்காற்றியது.

The power of the crowd : சிறப்பான அப்ளிகேஷன்கள் உருவாக்கம் : FOSS – Open Source (ஓபன் சோர்ஸ்) காரணமாக மிக சிறப்பான அப்ளிகேஷன்கள் உருவாக்கப்படுகின்றன. சாதாரண தனிமனிதனால் கூட ஆப்களை உருவாக்கிட முடிந்தது.

Transparency : Open Source (ஓபன் சோர்ஸ்) இல் அனைத்து code அனைத்தையும் யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். அதன் மூலமாக தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல்களை எளிமையாக செய்துகொள்ள முடியும்.

Cost effective : இலவச மென்பொருள்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் மிக குறைவான விலைக்கு மக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு.

எதற்க்காக இலவசமாக கொடுக்கிறார்கள் :

நிறுவனங்கள் என்றாலே பணம் ஈட்டுவதற்காக தான். அப்படி இருக்கையில் எதற்க்காக இவை இலவசமாக மென்பொருள்களை வழங்குகின்றன. இந்த சமூகத்திற்கு எதையாவது கொடுக்க வேண்டும் என்கிற அந்த நிறுவனங்களின் எண்ணமும் நம்முடைய மென்பொருள்களை பயன்படுத்தி புதிதாக சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட்டால் நல்லதே என நினைத்ததால் தான் அவ்வாறு இலவசமாக வெளியிட்டன.

சில சமயங்களில் தங்களின் மென்பொருள்களை பயன்படுத்துபவர்கள் தங்களுக்கு நன்கொடை அளிக்கவும் வேண்டுகின்றன. பயனாளர்கள் விரும்பினால் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் கூட பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் தகவல்களை பாதுகாப்பானதாக ஆக்கிவிட்டீர்களா ?

நன்றி
பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *