யார் அந்த 7 பெண்கள்? மோடியின் சமூகவலைதள பக்கங்களை கையாண்ட பெண்கள் இவர்கள் தான்

சமூக மாற்றத்திற்கு மிகப்பெரும் பங்காற்றிய 7 பெண்களை கவுரப்படுத்தும் விதமாக தனது பிரதமர் மோடி தனது சமூகவலைதள கணக்குகளை ஒருநாள் பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவித்துக்கொள்ளுமாறு அனுமதித்திருந்தார்.
மோடியின் சமூகவலைதள பக்கங்களை கையாண்ட 7 பெண்கள்

மகளிர் தினத்தை [மார்ச் 08] முன்னிட்டு இந்தியப்பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சமூக வலைதளங்களை நிர்வகிக்கவும் அதன் மூலமாக தாங்கள் செய்துவரும் பணிகள் மற்றும் தங்களது எதிர்கால நோக்கம் குறித்தும் தகவல்களை பரிமாற 7 சாதனைப்பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி பிரதமரின் யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் அந்தபெண்களிடம் கொடுக்கப்பட்டது. அதனை பயன்படுத்தி 7 பெண்களும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் மார்ச் 8 ஆம் தேதி முழுவதும் பகிர்ந்துகொண்டார். அந்த 7 சாதனைப்பெண்கள் குறித்த சிறு அறிமுகத்தைத்தான் இந்தப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

சினேகா மோகன்தாஸ் [Sneha Mohandoss]

#HappyWomensDay2020 ❤️ pic.twitter.com/NCCFIHUA0P

— Sneha Mohandoss (@snehamohandoss) March 7, 2020

பிரதமர் மோடியின் கணக்கை முதலில் பயன்படுத்த துவங்கியவர் சென்னையை சேர்ந்த சினேகா மோகன்தாஸ் தான். தன்னார்வலரான இவர் தனது Food Bank India என்ற தன்னார்வ அமைப்பின் மூலமாக உணவு கிடைக்காதவர்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்து வருகிறார். அவர் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில், 2015 ஆம் ஆண்டு முதல் இதனை செய்து வருகிறோம். சென்னையில் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பிருந்தே இதனை செய்துவரும் எங்களின் முதன்மையான நோக்கம் பசியை எதிர்த்து சண்டையிட வேண்டும் பசியில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதுதான். மேலும் அவர் கூறும்போது, சிறுவயதில் எனது தாத்தாவின் பிறந்தநாள் அன்று ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பதில்  தான் இது துவங்கியது. நாளடைவில் இதற்கென ஒரு பேஸ்புக் பக்கத்தை திறந்து சில இளைஞர்களை என்னோடு இணைத்துக்கொண்டேன். என்னைப்போலவே விருப்பம் உடைய அவர்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் உணவு கிடைத்தகாதவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள். மேலும் எங்களுக்கு உதவி செய்ய நினைப்பவர்களிடம் பணமாக பெறாமல் பொருளாக பெற்று வீட்டில் உணவு சமைத்து அதனையே கொடுத்து வருகிறோம்.

எந்த ஹோட்டலிலும் உணவு வாங்கப்படுவதில்லை. மாறாக தனது வீட்டில் அல்லது தன்னார்வலர்கள் மூலமாக சமைத்து அந்த உணவு தன்னார்வலர்கள் மூலமாக பசியோடு இருப்பவர்களை தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவளித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தன்னார்வலர்களால் தான் இந்த அமைப்பு இவ்வளவு பெரிதாகி உள்ளதாக கூறுகிறார் தமிழகத்தை சேர்ந்த சினேகா மோகன்தாஸ்.

மாளவிகா ஐயர் [Malvika Iyer]

Say hello to Dr. Malvika Iyer ♥️
PS: To everyone who’s been curious as to how I type, do you see that bone protruding from my right hand? That’s my one and only extraordinary finger. I even typed my Ph.D. thesis with it 🙂 pic.twitter.com/aEI1jIsNOr

— Dr. Malvika Iyer (@MalvikaIyer) December 13, 2017


ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுவரும் மாளவிகா ஐயர் வெடிகுண்டு விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர், மேலும் அவரது காலிலும் படுகாயம் ஏற்பட்டது. மாளவிகா ஐயர் 13 வயதாக இருக்கும் போது அவரது வீட்டுக்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பில் தான் இத்தகைய கொடிய நிகழ்வு அரங்கேறியது. ஆனால் அவர் எதற்கும் கவலைப்படாமல் துணிந்து முயற்சி செய்து தற்போது பலருக்கு நம்பிக்கை அளிக்கும் பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். வளர்ந்துவரும் உலகத்தலைவர்கள் எனும் விருதை நியூயார்க்கில் பெற்ற மாளவிகா தற்போது முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தனது வலது கையில் நீட்டிக்கொண்டு இருக்கும் ஒரு சிறு எலும்பின் உதவிகொண்டு தான் அவர் டைப் செய்ததாக தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்து இருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதான நாரி சக்தி புரஷ்கார் 2018 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

ஆரிபா [Arifa]

I always dreamt of reviving the traditional crafts of Kashmir because this is a means to empower local women.

I saw the condition of women artisans and so I began working to revise Namda craft.

I am Arifa from Kashmir and here is my life journey. #SheInspiresUs pic.twitter.com/hT7p7p5mhg

— Narendra Modi (@narendramodi) March 8, 2020

காஷ்மீரை சேர்ந்த ஆரிபா பாரம்பரிய கைவினைப்பொருள்களை உருவாக்கும் நிபுணர். அவர் தன்னை ட்விட்டரில் இப்படித்தான் அறிமுகப்படுத்திக்கொண்டார் “காஷ்மீரின் பாரம்பரிய கைவினைகளை புதுப்பிக்க நான் எப்போதும் கனவு கண்டேன், ஏனெனில் இது உள்ளூர் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வழியாகும்.பெண்கள் கைவினைஞர்களின் நிலையை நான் கண்டேன், எனவே நான் கைவினை பொருள்களை இக்காலத்துக்கு ஏற்றவாறு மாற்றம் செய்யத்துவங்கினேன்” என்றார். பாரம்பரியமான கைவினைப்பொருள்களை இந்தக்காலத்திற்கு ஏற்றவாறு மாறுதல் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தால் மக்களால் அது விரும்பப்படும். பாரம்பரியத்தை சிறு மாற்றங்களோடு அறிமுகப்படுத்தும்போது மக்களால் அது விரும்பப்படும் என்பது ஆரிபா அவர்களின் கருத்து

கல்பனா ரமேஷ் [Kalpana Ramesh]

Be a warrior but of a different kind!

Be a water warrior.

Have you ever thought about water scarcity? Each one of us can collectively act to create a water secure future for our children

Here is how I am doing my bit. @kalpana_designs pic.twitter.com/wgQLqmdEEC

— Narendra Modi (@narendramodi) March 8, 2020

ஹைதராபாத்தை சேர்ந்த கல்பனா ரமேஷ் நீர் மேலாண்மையில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை கொண்டுவர தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும் காரணத்தினால் அவரை பாராட்டும் விதமாக பிரதமரின் சமூகவலைதள கணக்குகளை கையாளும் 7 பெண்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது – நீங்கள் இதுவரைக்கும் வறட்சியை பற்றி சிந்தித்ததுண்டா? நாம் ஒவ்வொருவரும் நமது எதிர்கால தலைமுறைக்காக இணைந்து நீரை சேமித்து வைக்க வேண்டும். இதற்காக ஒவ்வொருவரும் ஒரு போர் வீரர் போலவே செயல்பட்டாகவேண்டும்.

 

தனது அம்மா தான் எனக்கு முன்மாதிரியானவர் எனக்கூறும் கல்பனா, தனக்கு பாரம்பரியம், சுற்றுசூழல் முக்கியத்துவம் போன்றவற்றை வளர்ந்தபோதே கற்றுக்கொண்டேன் என குறிப்பிடுகிறார். கட்டிடக்கலை பயின்ற அவர் திருமணத்திற்கு பிறகு அமெரிக்கா சென்றுவிட்டார். பிறகு ஹைதராபாத் திரும்பியபோது அங்கிருந்த பெரும்பான்மையான குடும்பங்கள் நீர் தேவைக்காக டேங்கர் மற்றும் வாட்டர் கேன்களையே நம்பிக்கொண்டு இருந்தனர். கல்பனா ரமேஷ் அவர்களின் குடும்பமும் அப்படிதான் இருந்தது.

 

ஆனால் அதில் மாற்றத்தை கொண்டுவர விரும்பிய கல்பனா ரமேஷ் மேற்கூரையில் இருந்து விழும் நீரை சேமிப்பது பற்றி சிந்திக்கத்துவங்கினர். மேற்கூரையில் விழும் நீரை சேமிப்பது என்பது மிகவும் எளிமையான காரியமே எனக் கூறும் கல்பனா ரமேஷ் அதற்காக சிறு மாற்றங்களை செய்தாலே போதும் என்கிறார். தரைக்கு அடியில் இருக்கும் டேங்க் போன்ற அமைப்புக்கு கூரையில் விழும் நீரை கொண்டு செல்லும் வண்ணம் ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். பின்னர் ஒரு வடிகட்டியின் வாயிலாக கொண்டுசெல்லப்படும் நீர் சேமிக்கப்பட்டு பின்னர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டது. இதன்மூலமாக டேங்கர் மூலமாக தண்ணீர் பெறுவது நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து Society for Advancement of Human Endeavour (SAHE) என்ற அமைப்பில் தன்னார்வலராக இணைந்துகொண்ட இவர் வெறும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டு உறுய்மையாளர்கள் அத்தகைய மாறுதல்களை ஏற்படுத்திட உதவியும் செய்துவந்தார். Save 10K bores எனும் திட்டத்தினையும் வெற்றிகரமாக இவர்கள் பல குடும்பத்தினரிடம் கொண்டு சேர்த்துள்ளனர்.

விஜயா பவார் [Vijaya Pawar]

You have heard about handicrafts from different parts of India. My fellow Indians, I present to you handicrafts of the Banjara community in rural Maharashtra. I have been working on this for the last 2 decades and have been assisted by a thousand more women- Vijaya Pawar pic.twitter.com/A3X47245E3

— Narendra Modi (@narendramodi) March 8, 2020

மஹாராஷ்டிராவை சேர்ந்த விஜயா பவார் பஞ்சாரா இனத்தின் கைவினைப்பொருள்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இதை செய்துவரும் விஜயா பவார் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் இதற்காக உதவி செய்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கலவதி [Kalavati]

சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்பு கலவதி சேரியில் வசிக்கும் ஜெயராஜ் சிங்கை மணந்தார். ஜெயராஜ் தொழிலால் ஒரு கொத்தனார். கலாவதி ஒருபோதும் பள்ளிக்குச் செல்லவில்லை. அவர்கள் இருந்த பகுதியில்  சுமார் 700 மக்கள் வாழ்ந்துவந்தனர், முழு வட்டாரத்திலும் ஒரு கழிப்பறை கூட இல்லை. இதன் காரணமாக, மக்கள் அனைவரும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் பழக்கமாக வைத்திருந்தனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், கலாவதி கிராமத்தில் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து கழிப்பறைகளை கட்டும் முயற்சியைத் தொடங்கினார்.

 

அந்தப்பகுதியில் வசித்தவர்களை கழிப்பறை கட்டச்சொல்லி வலியுறுத்த துவங்கிய அவருக்கு பல சமயங்களில் தோல்வியே மிஞ்சியது. ஆனால் அயராமல் அவர்களிடம் பேசி கழிப்பறை கட்ட அவர்களை சம்மதிக்க செய்வார். தற்போது வரைக்கும் அவரது முயற்சியால் 4000 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டம் என்பது பிரதமர் மோடி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான திட்டம். ஆகவே அவருக்கு மிகவும் விருப்பமான நபராக கலவதி அமைந்துவிட்டார். அதுமட்டுமல்ல கலவதி அவர்களுக்கு மகளிர் தினத்தன்று மிகவும் உயரிய நாரி சக்தி புரஷ்கார் விருது குடியரசுத்தலைவரால் வழங்கப்பட்டது.

வீணா தேவி [Veena Devi]

கடந்த பல ஆண்டுகளாக தனித்துவமான முறையில் வீட்டிலேயே காளான் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார் வீணா தேவி. அதோடு பல பெண்களையும் அதில் இணைத்து அவர்களுக்கும் அதை பயிற்றுவித்து காளான் உற்பத்தியில் ஈடுபடுத்தியுள்ளார். விருப்பம் இருந்தால் எதையும் சாதிக்கமுடியும் எனகூறும் வீணா தேவி, முதல் முறையாக தனது கட்டிலுக்கு அடியில் ஒரு கிலோகிராம் அளவுள்ள காளானை உற்பத்தி செய்தபோது தனது பயணம் துவங்கியதாக தெரிவித்துள்ளார். காளான் உற்பத்தி செலவினங்களுக்கு பண தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் ஒரு நம்பிக்கையை தனக்குள்ளாக விதைத்ததாக கூறுகிறார் வீணா தேவி.

உண்மையிலேயே பிரதமர் மோடி அவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. எதையும் எதிர்பாராமல் செயல்பட்டுக்கொண்டு இருக்கும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் கொடுக்கும் அங்கீகாரம் என்பதும் பெரிய உந்துசக்தியாகவும் புத்துணர்ச்சி தரும் விசயமாகவும் இருக்கும்.


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *