பழைய காரை விற்றால் 18% GST வரி, உண்மையா?

அண்மையில் நடந்த GST கூட்டத்திற்கு பிறகு, பழைய காரை விற்பனை செய்திடும் போது 18% GST வரியாக செலுத்த வேண்டும் என முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின. இது சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்தது. நாமும் கூட துவக்கத்தில் இது பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளாமல் விமர்சித்தோம். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய விசயங்களை இங்கே கேள்வி பதில் வடிவில் விரிவாக பார்க்கலாம்.

ஒரு தனிநபர் இன்னொரு தனி நபரிடம் தனது பழைய வாகனத்தை விற்கும் போது 18% GST வரி செலுத்த வேண்டுமா?

நிச்சயமாக தேவை இல்லை. ஒரு தனி நபர் இன்னொரு தனி நபரிடம் விற்கும் போது அரசுக்கு 18% GST வரி செலுத்த தேவை இல்லை.

யார் பழைய காரை விற்கும் போது 18% GST வரி செலுத்த வேண்டும்?

பழைய வாகனங்களை வாங்கி விற்கும் டீலர்கள் தான் இந்த வரியை செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, CarDekho, OLX போன்ற நிறுவனங்கள் கட்ட வேண்டும். உதாரணத்திற்கு, CarDekho ஒரு வாகனத்தை 5 லட்சத்திற்கு ஒருவரிடம் இருந்து வாங்கி இன்னொருவரிடம் 6 லட்சத்திற்கு விற்கிறது எனில் லாப தொகையான 1 லட்சத்திற்கு CarDekho நிறுவனம் 18% GST செலுத்த வேண்டும். இதற்கு முன்னால் இந்த வரி அளவு 12% ஆக இருந்தது.

இந்த வரி விதிப்பில் பொது மக்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்பதாக தோன்றலாம். ஆனால், பெரும்பான்மையான பழைய வாகன விற்பனை அனைத்தும் டீலர்கள் மூலமாகவே நடக்கின்றன. ஆகவே, இந்த வரிவிதிப்பு காரணமாக குறைவான விலைக்கு கார்களை விற்கும் நிலையும், அதிக விலைக்கு கார்களை வாங்கும் நிலையும் உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *