100 Leadership quotes in tamil | தலைமைத்துவம் பொன்மொழிகள்
நம்மை ஊக்கப்படுத்த பொன்மொழிகள் உதவும். அந்தவகையில் தலைமை பற்றிய இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொன்மொழிகள் உங்களை ஊக்கப்படுத்தும். Leadership quotes in tamil என்ற இந்தப்பதிவில் தலைமைத்துவம் பற்றிய 100 பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன. படித்து முன்னேறுங்கள்.
தந்திரங்களை மாற்றிக்கொண்டே இருப்பவனால் தான் எப்போதும் தலைவனாக இருக்க முடியும். – நெப்போலியன்
மற்றவர்கள் மனதில் நம்பிக்கை என்ற விதையை நீங்கள் விதைக்கும் போது தலைமைப் பொறுப்பு உங்களைத் தானாக தேடி வரும்.
ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்
இன்று கடினமாக உள்ளது
நாளை மோசமாக இருக்கும்
ஆனால் நாளை மறுநாள் சூரிய ஒளியாக இருக்கும்.
– ஜாக் மா
எவ்வளவு முடியுமோ அவ்வளவு மனிதர்களின்
மனதில் நம்பிக்கை எனும் விதையை விதையுங்கள்
அதுவே சிறந்த தலைமைக்கு அழகு!
நான் மெதுவாக நடப்பவன் தான்
ஆனால் ஒருபோதும் நடப்பதை நிறுத்தப்போவது இல்லை
– ஆப்ரஹாம் லிங்கன்
என்ன நடந்தாலும்
எதை இழந்தாலும்
சோர்ந்து போகமாட்டேன்
காரணம்
நான் “100” வெற்றிகளை
பார்த்தவன் அல்ல
நான் “1000” தோல்விகளை
பார்த்தவன்
தயங்குகிறவன்
கை தட்டுகிறான்
துணிந்தவன்
கை தட்டல் பெறுகிறான்
- ஜான் கென்னடி
தலைவன் ஒருவனுக்காக
காத்திராதீர்கள்
உங்களுக்குரிய பாதையை
அமைத்து உங்களை
நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்
– அன்னை தெரசா
அதிகம் பயணிக்காத
பாதைகளில் செல்லும்
துணிவை வளர்த்தெடுங்கள்
அதுதான் உண்மையான
தலைமைப்பண்பு
தலைமைத்துவம் என்பது
ஒரு இரவில் பெறுவது அல்ல
பல ஆண்டுகள் மெருகூட்டப்பட்டு
முழுமை பெறுவதாகும்
என்னைவிட யாரும்
உயர்ந்தவரில்லை
என்பது தலைக்கனம்
என்போல் எல்லோரும்
உயர்ந்தவர்கள் என்பதே
தலைமைக்குணம்
தன்னம்பிக்கையும்
தாக்குப்பிடித்தலுமே
தலைமைக்கான
தகுதிகள்
“தலைவர் என்பது வழியை அறிந்தவர், அவ்வழியிலேயே செல்பவர், அந்த வழியையே காட்டுபவர்” – ஜான் சி. மேக்ஸ்வெல்
“சிறந்த தலைவர்கள், அவர்களை விட புத்திசாலித்தனமான உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் தங்களைச் சுற்றி இருப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள், பொறாமைப்பட மாட்டார்கள்” – ஜான் சி. மேக்ஸ்வெல்
“உங்களை கையாள, உங்கள் மூளையை பயன்படுத்தவும்; மற்றவர்களைக் கையாள, உங்கள் இதயத்தைப் பயன்படுத்தவும்.” – எலினோர் ரூஸ்வெல்ட்
“ஒரு தலைவர் மக்களை அவர்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்கிறார். ஒரு சிறந்த தலைவர் மக்கள் விரும்பாவிட்டாலும் அவர்களுக்கு சிறந்த இடமாக இருக்கும் ஓர் இடத்திற்கு அழைத்து செல்வார்” – ரோசலின் கார்ட்டர்
“ஒரு நெருக்கடியில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதே தலைமையின் உண்மையான சோதனை.” – பிரையன் ட்ரேசி
“தீர்மானித்ததை அடைவதில் இருக்கும் உறுதியே தலைமைக்கு அழகு” – வாரன் பென்னிஸ்
“ஒரு நல்ல தலைவர் தோல்விக்கு அதிகமாக பொறுப்பேற்றுக்கொள்கிறார், வெற்றிபெறும் போது அதற்கு குறைவாகவே பொறுப்பேற்கிறார்” – அர்னால்ட் எச். கிளாசோவ்
“திறமையான தலைமைத்துவம் என்பது வெறுமனே பேசுவது மட்டும் அல்ல; தலைமை என்பது முடிவுகளால் வரையறுக்கப்படுகிறது, பேச்சுக்களால் அல்ல.” – பீட்டர் ட்ரக்கர்
“மிகப்பெரிய காரியங்களைச் செய்பவர்தான் மிகப் பெரிய தலைவர். – ரொனால்ட் ரீகன்
“தலைவர் மற்றவர்களை அடக்கி ஆள விரும்புபவராக இருக்க கூடாது. மாறாக, வேலை செய்வோரை ஊக்கப்படுத்த தண்ணீர் எடுத்துச்செல்ல விரும்பும் ஓர் நண்பராக இருக்க வேண்டும்” – ராபர்ட் டவுன்சென்ட்
“ஒரு நல்ல தலைவர் பல நல்ல தலைவர்களை உருவாக்க வேண்டும். அதிக பின்தொடர்பவர்களை மட்டுமே கொண்டிருக்க கூடாது” – ரால்ப் நாடர்
“ஒரு உண்மையான தலைவருக்கு தனித்து நிற்கும் நம்பிக்கையும், கடினமான முடிவுகளை எடுக்கும் தைரியமும், மற்றவர்களின் தேவைகளைக் கேட்கும் இரக்கமும் இருக்கும்.” – டக்ளஸ் மேக்ஆர்தர்
“தலைமை என்பது பொறுப்பில் இருப்பது அல்ல. உங்கள் பொறுப்பில் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்வதுதான்.” – சைமன் சினெக்
“ஆம் என்று ஆமோதிக்க அனைவராலும் முடியும். அப்படி இல்லாமால் தைரியமாக இல்லை என நிராகரிக்கும் திறமையும் நல்ல தலைமைக்கு அவசியம்” – டோனி பிளேர்
“தலைமை என்பது சிறந்தவராக இருப்பது மட்டுமில்லை. மற்ற அனைவரையும் சிறந்தவர்களாக மாற்றுவதாகும்.”
“ஒரு தலைவர் என்பது சாத்தியமாகாததை சாத்தியமாக்குபவர்.” – மார்க் யார்னெல்
“மற்றவர்களுக்கு அதிகாரத்தை பெற்றுத் தருகிறவர்களே மிகப் பெரிய தலைவர்கள்” – பில் கேட்ஸ்
“தலைமை என்பது நீங்கள் விரும்பும் ஒன்றை வேறு ஒருவரைச் செய்ய வைக்கும் கலை” – டுவைட் டி. ஐசனோவர்
“தலைமை என்பது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அல்ல. தனது கட்டுப்பாட்டில் உள்ளவர்களை கவனித்துக்கொள்வது.”
“தலைமையின் சவால் வலிமையாக இருப்பது, கனிவாக இருப்பது. பலவீனம் அல்லாமல் இருப்பது, தைரியமாக இருப்பது, சிந்தித்துக்கொண்டே இருப்பது, நகைச்சுவை உணர்வோடு இருப்பது” – ஜிம் ரோன்
“ஒரு தலைவர் நம்பிக்கையை விதைப்பவர்.” – நெப்போலியன் போனபார்டே
“பெரிய தலைவர்கள் தான் சார்ந்தவர்களின் நலனுக்காக தங்கள் சொந்த நலன்களை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.” – ஜான் வூடன்
“தலைவர் என்பது கூட்டத்தை கூட்டுபவர் அல்ல. அவரது செயலால் அவர் பின்னால் கூட்டம் கூட வேண்டும்”
“இப்போது வெற்றிகரமான தலைமைக்கு முக்கியமானது செல்வாக்கு, அதிகாரம் அல்ல.” – கென் பிளான்சார்ட்
“தலைமை என்பது முதலாளியாக இருப்பது அல்ல. உங்களுக்காக வேலை செய்பவர்களைக் கவனித்துக்கொள்வதுதான்.”
“தலைமை என்பது நேர்மையாக இருப்பது பற்றியது.”
“தலைமை மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறை தாக்கத்தை உண்டாக்கும் வல்லமை கொண்டவராக இருக்க வேண்டும்” – ஜான் சி. மேக்ஸ்வெல்
“ஒரு உண்மையான தலைவருக்கு தனித்து நிற்கும் நம்பிக்கையும், கடினமான முடிவுகளை எடுக்கும் தைரியமும், கேட்கும் இரக்க குணமும் இருக்கும்.”
“தலைவரின் அளவுகோல் அவர்களுக்கு சேவை செய்யும் நபர்களின் எண்ணிக்கையை பொறுத்தது அல்ல. அவர் எத்தனை பேருக்கு சேவை செய்கிறார் என்பதை பொறுத்தது” – ஜான் சி. மேக்ஸ்வெல்
“தலைமை என்பது சக்தி வாய்ந்த நபராக இருப்பது மட்டுமே அல்ல. தான் சார்ந்தவர்கள் சக்தி பெறுவதற்கு போராடுபவரே தலைவர்”
“உங்களிடம் உள்ள மிகவும் சக்திவாய்ந்த தலைமைக் கருவி உங்கள் சொந்த அனுபவம்.” – ஜான் வூடன்
“தலைமை என்பது ஒரு பதவி. அது ஒரு செயல் மற்றும் ஒரு எடுத்துக்காட்டு.”
“சிறந்த தலைவர்கள் தங்களை நம்புவதற்கும் அவர்களின் முழு திறனை அடையவும் மற்றவர்களை ஊக்குவிக்கிறார்கள்.”
“தலைவர் என்பது அவரது சொந்த வெற்றிக்கும், அவர் சார்ந்தவரின் வெற்றிக்கும் பொறுப்பேற்பவர்.”
“ஒரு சிறந்த தலைவர் வெற்றி என்ன என்பதை அறிந்தவராகவும், அதை யதார்த்தமாக்க உதவுவதற்கு அவர் சார்ந்தவர்களை ஊக்குவிக்கவும் முடியும்.”
“தலைமை என்பது உங்கள் இருப்பின் விளைவாக மற்றவர்களை சிறந்ததாக்குவதும், நீங்கள் இல்லாத நேரத்தில் தாக்கம் நீடிக்கும் என்பதை உறுதிப்படுத்துவதும் ஆகும்.” – ஷெரில் சாண்ட்பெர்க்
“ஒரு தலைவரின் பங்கு அணியை வலிமையாக்குவது அல்ல. ஒரு தலைவரின் பங்கு அணியை சிறப்பாக உருவாக்குவது.” – சைமன் சினெக்
“தலைமை என்பது விரும்பப்படுவதைப் பற்றியது அல்ல. அது மதிக்கப்படுவதையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதையும் பற்றியது.”
“பெரிய தலைவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குச் சொல்வதில்லை, அது எப்படி செய்யப்படுகிறது என்பதை அவர்கள் உங்களுக்குக் செய்து காட்டுகிறார்கள்.”
“ஒரு தலைவர் அவர் செய்திடும் வேலையால் வரையறுக்கப்படுவதில்லை, அவர்களின் செயல்கள் மற்றும் அவர்கள் மற்றவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தால் வரையறுக்கப்படுகிறது.”
“தலைமை என்பது ஹீரோவாக இருப்பதல்ல. மற்றவர்கள் ஹீரோவாக மாற உதவும் வழிகாட்டியாக இருப்பதே.”
“தலைமை என்பது பொறுப்பில் இருப்பது அல்ல. உங்கள் பொறுப்பில் இருப்பவர்களைக் கவனித்துக்கொள்வதுதான்.”
“தலைமை என்பது ஒரு பொதுவான இலக்கை நோக்கி மற்றவர்களை ஊக்குவிக்கும் மற்றும் வழிகாட்டும் திறன் ஆகும்.”