வருமான வரி குறைப்பிற்காக நீங்கள் கொஞ்சம் போலியான ஆவணங்களை தாக்கல் செய்பவரா  ? உங்களுக்கான பதிவு

.  
யாரையும் குற்றம் சொல்வதற்கான பதிவு இது அல்ல . மாறாக பொய்யான ஆவணங்களை கொடுத்து வரியை குறைக்க நீங்கள் முற்பட்டால்
ஒரு நிமிடம் நாம் செய்யும் செயலினை மறு ஆய்வு செய்வதற்கான பதிவாக இது இருக்கும் .இந்த பதிவை படித்த பின்பு உங்களது மனம் மாறினால் அது நமக்கு கிடைத்த வெற்றியே !
 

ஒரு நாடு இயங்க அடிப்படை ‘வரி’ . வரியின் மூலமாக மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் நிதியை கொண்டே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசு இயங்குகிறது . அதற்கென பலவிதமான வரிகள் நடைமுறையில் உள்ளன .அதில் பிரதானமாக இருப்பது ‘வருமான வரி
 

கடந்த நிதி ஆண்டுக்கான வரி செலுத்தும் நிகழ்வில் வேலைபார்க்கும் அனைவரும் மும்முரமாக ஈடுபட்டு பல ஆவணங்களை தயார் செய்து கொண்டிருப்பீர்கள் .

 

அதற்காக போலியான ஆவணங்களை தாக்கல் செய்து வரியை குறைப்பது படித்தவர்களின் மத்தியில் தற்போது அதிகரித்து வருகின்றது .  

அதற்கான காரணமாக அரசின் செயல்பாட்டையோ , அதிகபடியான வரி வசூலையோ , மற்றவர்கள் கட்டாமல் தானே ஏமாற்றுகிறார்கள் நான் ஏன் கட்டவேண்டும் என கூறியோ நியாயம் கற்பிக்க முயன்றால் செய்வது சரியானதாகிவிடாது.
 
போலியான ஆவணங்கள் :  

இணையத்தில் வருமான வரி என தேடினால் முதலில் கிடைக்கும் தகவல்களை பார்த்தால் ‘வருமான வரி யை குறைப்பது எப்படி ? ‘ என்கிற கேள்விக்கான பதிலாகத்தான் இருக்கும் . மார்ச் மாதம் வந்துவிட்டாலே பலரது தேடுதலும் இதுவாகத்தான் இருக்கும் .
 

வருமான வரியை குறைக்க பிரதானமாக பயன்படுத்தும் போலி ஆவணங்களில் இரண்டை காண்போம்..

 

வீட்டு வாடகை  
மருத்துவ பில்

 

 

வீட்டு வாடகை :

 

ஒரு லட்சத்திற்கும் குறைவாக வீட்டு வாடகையை எந்த ஆவண  சான்றும் இல்லாமல் (பான் கார்டு ) காட்டலாம் என்பதால் அனைவரும் 8300 என வாடகை போடுவது வழக்கமான ஒன்றாக இருக்கின்றது .

 

இன்னும் பலரோ 12000-15000 அளவிற்கு வீட்டு வாடகையை கொடுப்பதாக குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் போலியான பான் கார்டு விவரங்களையும் கொடுக்கின்றனர் .

 

ஒரே வீட்டிற்கு பலர் வாடகை  கொடுப்பதாக கூறுவதும் நடக்கிறது.

 

வாடகைக்கு குடியிருக்காத பலரும் கூட இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரி குறைப்பில் ஈடுபடுகின்றனர் .

 

போலி மருத்துவ பில் :

 

ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 15 ஆயிரம் அளவிற்கு மருத்துவ பில் கொடுக்கலாம் . அவ்வாறு கொடுத்தால் பத்து சதவிகிதம் அளவிற்கு அதாவது  1500 ரூபாய் வரி குறையும் .  

சாதரணமாக நாம் மருந்துகளை வாங்கும் போது பில் வாங்கினால் கூட உண்மையான பில்களை கொடுக்க முடியும் . அவ்வாறு பில்களை சேகரித்து வைக்காதவர்களுக்கும் மருத்துவ செலவே செய்யாதவர்களுக்கும் போலி பில்களை கொடுக்க பலர் தயாராக இருக்கின்றனர் .  

15 ஆயிரத்துக்கான பில் வெறும் 200 மட்டுமே . இதன் மூலமாக 1300 ரூபாயை சேமிப்பதாக கூறுகின்றனர் .  

 

இவை வருமான வரியை குறைக்க மேற்கொள்ளும் பல முறைகளில் இரண்டு மட்டுமே .இன்னும் என்னென்ன முறைகளில் வரி குறைப்பில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை.

 

அரசு என்ன செய்ய வேண்டும் : 

 

வரி கட்டுவதன் முக்கியதுவத்தை மக்களுக்கு எடுத்துகூறிட வேண்டும் .

 

கட்டும் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறது என்கிற நம்பிக்கையை மக்களுக்கு எற்படுத்த வேண்டும்.

 

பலர் ஒரே வீட்டுக்கு போலியான வாடகையை குறிப்பிட்டு வரியை குறைப்பதை தடுக்க ‘மாடுகளுக்கு ஆதார் எண் வழங்குவதை நிறுத்திவிட்டு வீடுகளுக்கு ஆதார் போன்ற தனித்துவ எண்ணினை வழங்கிட வேண்டும் ‘ அந்த எண்ணோடு வீட்டு முதலாளிகளின் பான் எண்ணை இணைக்க வேண்டும் .  

இதன் மூலமாக வீட்டு ஓனர்கள் வாடகையை வாங்கி கொண்டு வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவதையும் ஒரே வீட்டிற்கு பலர் வாடகை தருவதாக குறிப்பிடுவதையும் தடுக்க முடியும் .  

 

போலி மருத்துவ பில் :

 

தற்போது ஒவ்வொரு கடைக்கும் GST எண் வந்துவிட்டது . அப்படி இருக்கும்போது அந்தந்த பில்களில் கண்டிப்பாக அந்த கடையின் GST எண் இருக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்திட வேண்டும் .

 

அலுவலகங்களில் வருமான வரி ஆவணங்களை வாங்கும் நபர் இதனை உறுதிப்படுத்திட வேண்டும் எனவும் , வரும் காலங்களில் GST எண்ணை குறிப்பிட்டு இணையத்தில் பதிவு செய்ய சொல்வதன் மூலமாக எளிமையாக உண்மைத்தன்மையை சோதித்து பார்க்க முடியும் .

 

நாம் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் என சொல்லிக்கொண்டு வருமான வரியை போலியான ஆவணங்களை கொடுத்து குறைத்து கட்டுகிறோம் . இதுவும் மிகப்பெரிய ஊழலே !  

நானாக இருந்தாலும் நீங்களாக இருந்தாலும் ஊழலே !  

இந்த பதிவு அதை நியாபக படுத்துவதற்கான சிறு முயற்சி .  

வரி கட்டும் நண்பருக்கு பகிருங்கள் !  

நன்றி

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *