மலாலா -அவள்தான் பெண்

அவள்தான் பெண்…

மகளிர் தினம் உலகம் முழுவது மார்ச் மாதம் 8 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் மகளிருக்கு பெருமை சேர்த்த ஒரு பெண்ணை பற்றி நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியம்.

எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கலாம். தூங்குபவன் அடுத்த நாளை காண எந்த உத்திரவாதமும் இல்லாத நாடு. ஆம் பாகிஸ்தான்.எந்த நேரமும் தீவிரவாத தாக்குதல் நடக்கலாம் என்ற பயத்துடனயே வாழ வேண்டிய நிலைமை. தலிபான் அசுர வளர்ச்சி அடைந்து இருந்த நேரம்.பெண்கள் கல்வி கற்க கூடாது. அவர்களுக்கு வெளியில் செல்லும் உரிமை இல்லாத காலம்.

அந்த நாட்டின் மிங்கோரா என்னும் நகரத்தில் July 12 1997 இல் ஒரு திருமகள் பிறந்தால். அவள் பெண்களின் கல்விக்காகவும் குழந்தைகளின் கல்விக்காகவும் புறட்சி செய்ய போகிறாள் என்பது தலிபான்களுக்கு தெரிந்து இருந்தால் அன்றே கொன்று இருப்பார்கள்.

 Swat என்னும் நகரில் தன் தந்தையின் பெண்கள் பள்ளியில் படிப்பை தொடங்கினாள். அதுவரை சுற்றுலா நகரமாக இருந்த swat தலிபான்களின் கண்ணில் பட்டது.

அங்கு குறிப்பிட்ட ஒரு நாளுக்கு பிறகு பெண்கள் பள்ளிக்கு செல்ல கூடாது என்று தலிபான் தீவிரவாதிகள் அறிவிக்கின்றார்கள். அதையும் மீறி பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதன் பெற்றோர்கள் தண்டிக்க படுவார்கள் என்றும்  பள்ளிகள்  அனைத்தும் தாக்கப்படும் என்றும் அறிவிக்கின்றார்கள் .

அவளின் தந்தை ஒரு முற்போக்குவாதி. அவர் பெண் கல்வியின் முக்கியத்துவத்தை அவளுக்கு ஊட்டியிருந்தார. அவளின் கனவு மருத்துவர் ஆகவேண்டும் என்பது ஆனால் அவரது தந்தை அவளுக்கு இருக்கும் திறமை கண்டு அவள் மிக சிறந்த அரசியல்வாதியாக வர தகுதியானவள் என்று பெருமையுடன் கூறுகின்றார்.

இறுதி நாள் பள்ளிக்கு செல்லும் அவள் தன் தோழிகளுடன் தன்  வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறாள். மேலும் அவள் கண்டிப்பாக இந்த நிலைமை மாறும் என்றும் நாம் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு செல்லும் நாள் வரும் என்றும் அவள் உறுதியோடு சொல்கிறாள்.

அவள் அனைத்து புத்தகங்களையும் தன்னுடைய அறைக்கே மாற்றி விடுகிறாள். மேலும் இத்தனை கொடுமை நிறைந்த தலிபான்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவள் விரும்புகிறாள். அடுத்தநாள் பெண்கள் பள்ளிகள் தாக்கப்படுகின்றன. ஸ்வாட் என்ற அழகிய நகரம் தன் அழகை இழந்து விடுகின்றது.

அப்போது தான் அந்த புயல் புறப்பட தயரானது. ஆம் ” என்னுடைய கல்வி உரிமையை நிறுத்த தலிபான்கள் யார்?”என்னும் தலைப்பில் அவள் உரை நிகழ்த்தி்னாள். அந்த உரை கேட்டு தலிபான் இயக்கமே அதிர்ந்து போனது. காரணம் பேசியது ஒரு பெண் அதுவும் ஒரு சிறுமி. விடப்பட்டது எச்சரிக்கை. ஆனாலும் அவள் பயப்படாமல் தலிபான்களுக்கு எதிராக தன் கருத்தை பதிவு செய்து கொண்டே இருந்தாள்.

கொடுமையான நாள், துப்பாக்கியுடன் ஒரு தலிபான் மிருகம் அவள் பள்ளி செல்லும் போது அவளை கொல்ல நெருங்கி வந்து அவளை நோக்கி சுட்டது.
தலையிலும் உடலிலும் குண்டுகள் பாய்ந்தது. இறந்து விட்டாள் என்று எண்ணி விட்டு சென்ற அவள் உடலில் உயிர் இருந்தது. உலகமே அவளுக்காக கடவுளிடம் வேண்டின. இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்ட அவள் பல அறுவை சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தாள். உலகமே அவளை வரவேற்றன. புகழ் பெற்ற ஐ நா  சபையில் உரை நிகழ்த்தியது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

2013 ம் ஆண்டு நோபல்பரிசு க்கு பரிந்துரை செய்யப்பட்டது. மீண்டும் 2014 ம் ஆண்டு நோபல்பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வென்றவர். உலகில் மிகச்சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர்.

நிகழ்காலத்தின் தவிர்க்க முடியாத அந்த பெண்தான் மலாலா.

மலாலாவை போலவே பெண்கள் அனைவரும் தங்கள் உரிமைக்காக போராட வேண்டும். பெண்கள் அவர்களின் முயற்சியில் வெற்றி பெற ஆண்கள் உறுதுணையாக இருந்து உதவ வேண்டும்.

தோழிகளுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *