பாமரனின் புத்தாண்டு செய்தி – படியுங்கள் பகிருங்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நண்பர்களே இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் உங்களுக்கு நல்லாண்டுகளாய் அமைய வாழ்த்துகிறோம் .

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாடுகிறோம் . ஆனால் நாம் புதிய மனிதராக அந்த புத்தாண்டினை கொண்டாடுகிறோமா
ஏதேனும் முன்னேற்றத்தினை கொண்டவராக புத்தாண்டினை வரவேற்கிறோமா
குறைந்தபட்சம் அடுத்த ஆண்டில் இதை செய்வேன் என்ற உறுதி மொழியாவது எடுத்துக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம் .

கடந்த 2017 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் நடந்தது . ஆம் தமிழ் இளைஞர்களையும் தமிழக மக்களையும் பெருமைகொள்ளும்படியான “மெரினா போராட்டம் ” நடந்தது இந்த ஆண்டில்  தான் .

வரலாற்றில் போராட்டமே முன்னேற்றத்தின் படியாக இருந்திருக்கிறது . ஆகையால் இந்த புத்தாண்டில் போராடும் குணத்தை  இன்னும் வளர்த்துக்கொள்ளுங்கள் .
தமிழகம் அன்றும் இன்றும் மதவாதங்களுக்கு எதிரானதாக இருந்து வந்திருக்கின்றது . இனி மோதல்கள் , உங்களின் உணர்வுகளை தூண்டும் செயல்கள் நடைபெறலாம் . அப்போதும் நீங்கள் கட்டுப்பாட்டுடன் ஒற்றுமையொடு சகோதரத்துடன் வாழுங்கள் , வாழ பழகிக்கொள்ளுங்கள் .
ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் குறிப்பாக இன்றைய இளைஞர் சமூகமும் மாணவர் சமூகமும் மதுவிற்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள் . மது அருந்துவதை பெருமையென கருதிக்கொண்டு அந்த பழக்கத்திற்கு அடிமையாகி கொண்டிருக்கிறார்கள் தங்களை அறியாமலே . வரும் ஆண்டில் தங்களது பழக்கவழக்கங்களை  மாற்றிக்கொண்டு தங்களது கனவுகளில் அக்கறை கொண்டு செயல்படுங்கள்.
அண்மைக்காலமாக பணம் வாங்கிக்கொண்டு தேர்தலில் வாக்களிக்கும் கலாச்சாரம் நடந்துவருகிறது . இக்கால இளைய சமூகமும் நாளைய  பெற்றோர்களாக மாறப்போகும் நீங்கள் தான் ஜனநாயகத்தின் வலிமையை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குக்கு பணம் வாங்குவதை தடுக்க வேண்டும் .தினம் ஒரு புத்தகம் படியுங்கள் என்று நானும் கூற விரும்பவில்லை . உங்களை சந்திக்கும் மனிதர்களை உங்களுடன் இருக்கும் மனிதர்களை படியுங்கள் . அவர்களுடன் அன்பு பாராட்டுங்கள் அவர்களிடம் இருந்து நல்ல விசயங்களை கற்றுக்கொள்ளுங்கள் அதுவே வாழ்வினை நல்ல முறையில் அமைத்துக்கொள்ள போதுமானது .

பெண்களுக்காக  , இப்போது பெண்கள் அதிகம் படிக்கிறார்கள்  .பல துறைகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என செய்திகளும் புள்ளிவிவரங்களும் கிடைக்கின்றன . ஆனால் இன்றும் பல பெண்கள் படித்ததோடு நின்று விடுகின்றனர் . ஒன்றினை நீங்கள் உணரந்துகொள்ளவேண்டும் ” பொருளதார சுதந்திரம் ” தான் உண்மையான சுதந்திரத்தை உங்களுக்கு பெற்றுதரும் . ஆகையால் படிக்கும் காலத்தில் நீங்கள் கண்ட கனவுகளை நோக்கி பயணிப்பதை நிறுத்திவிடாதீர்கள் .

இந்த ஆண்டு இதனை செய்யலாம் அதனை செய்யலாம் என பலவற்றை எண்ணிக்கொண்டு அதற்கு அடுத்த நாளில் மறந்துபோகும் நிலையில் இருந்து மாறுபடுவோம் . நினைத்ததை செயல்படுத்துவோம் . இன்பம் அடைந்திடுவோம் .

இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம் .

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *