பாமரனின் புத்தாண்டு செய்தி – படியுங்கள் பகிருங்கள்
நண்பர்களே இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் உங்களுக்கு நல்லாண்டுகளாய் அமைய வாழ்த்துகிறோம் .
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாடுகிறோம் . ஆனால் நாம் புதிய மனிதராக அந்த புத்தாண்டினை கொண்டாடுகிறோமா
ஏதேனும் முன்னேற்றத்தினை கொண்டவராக புத்தாண்டினை வரவேற்கிறோமா
குறைந்தபட்சம் அடுத்த ஆண்டில் இதை செய்வேன் என்ற உறுதி மொழியாவது எடுத்துக்கொள்கிறோமா என்பதுதான் முக்கியம் .
கடந்த 2017 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல் நடந்தது . ஆம் தமிழ் இளைஞர்களையும் தமிழக மக்களையும் பெருமைகொள்ளும்படியான “மெரினா போராட்டம் ” நடந்தது இந்த ஆண்டில் தான் .
பெண்களுக்காக , இப்போது பெண்கள் அதிகம் படிக்கிறார்கள் .பல துறைகளில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என செய்திகளும் புள்ளிவிவரங்களும் கிடைக்கின்றன . ஆனால் இன்றும் பல பெண்கள் படித்ததோடு நின்று விடுகின்றனர் . ஒன்றினை நீங்கள் உணரந்துகொள்ளவேண்டும் ” பொருளதார சுதந்திரம் ” தான் உண்மையான சுதந்திரத்தை உங்களுக்கு பெற்றுதரும் . ஆகையால் படிக்கும் காலத்தில் நீங்கள் கண்ட கனவுகளை நோக்கி பயணிப்பதை நிறுத்திவிடாதீர்கள் .
இந்த ஆண்டு இதனை செய்யலாம் அதனை செய்யலாம் என பலவற்றை எண்ணிக்கொண்டு அதற்கு அடுத்த நாளில் மறந்துபோகும் நிலையில் இருந்து மாறுபடுவோம் . நினைத்ததை செயல்படுத்துவோம் . இன்பம் அடைந்திடுவோம் .
இந்த ஆண்டு இனிமையான ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம் .
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
நன்றி