ஹாலிவுட் படத்திற்கு ஆகும் செலவை விட குறைவு – சந்திரயான் – 2 – நம் பெருமை

இந்தியாவின் மற்றுமொரு பெருமை – சந்திரயான் – 2
வருகின்ற 2018 ஏப்ரல் மாதத்தில் சந்திரயான் – 2 வை நிலவை நோக்கி விண்ணிலே அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ . ஏற்கனவே சந்திரயான் -1 அனுப்பப்பட்டது நினைவிருக்கலாம் .

ஹாலிவுட் திரைப்படத்தை விட குறைந்த செலவில் சந்திரயான் – 2

உங்களுக்கு நினைவிருக்கலாம் , மிக குறைந்த செலவில் செவ்வாய்க்கு மங்கள்யானை 2013 இல்  அனுப்பியபோது உலகமே வாய்பிளந்து நின்றது . காரணம் அதே காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட கிராவிட்டி திரைப்படத்திற்கு ஆன செலவு 644 கோடி ஆனால் மங்கல்யானுக்கோ 470 கோடி மட்டுமே செலவு ஆனது .
2014ஆம் ஆண்டு வெளியான விண்வெளிப் பயணம் குறித்த  ஹாலிவுட் திரைப்படம் ‘இன்டர்ஸ்டெல்லார்’ (Interstellar). மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வெற்றி பெற்ற இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.1062 கோடி. ஆனால், சந்திராயன் 2 செயற்கைக் கோள் தயாரிப்புக்கு ஆகியுள்ள மொத்த செலவு ரூ.800 கோடி. இன்டர்ஸ்டெல்லார் படத்தின் பட்ஜெட்டை விட ரூ.200 கோடிக்கு மேல் குறைவான செலவில் இந்த செயற்கைக் கோள் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறையும் குறைந்த செலவில் சாதனைகளை செய்ய முயல்கிறது நம் இஸ்ரோ .

உலகநாடுகள்  வியக்கும்வண்ணம் குறைந்த செலவில் இதனை சாதிப்பது எப்படி என கேட்டபொழுது இஸ்ரோவின் தலைவர் சிவன் அவர்கள் அளித்த பதில் …

ஒட்டுமொத்த நடைமுறையையும் முதலில் எளிமையாக்குவது, சிக்கலான பெரும் அம்சங்கள் இருந்தால், அதையே சிறு வடிவில் முயற்சி செய்வது, தரக்கட்டுப்பாட்டில் இம்மியும் பிசகாதிருப்பது, நமது முயற்சியின் பலன்களை எந்த அளவு அதிகபட்ச பயன்பாட்டுக்கு உட்படுத்த முடியுமோ அவ்வளவு முயல்வது போன்றவைதான் சிக்கன செலவில், நமது வெற்றிக்குக் காரணம்
இன்னும் பல சாதனைகளை படைக்க இஸ்ரோவிற்கு  வாழ்த்துக்கள் …

இந்தியாவின் புகழ் ஓங்கட்டும் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *