இன்னொரு புதிய கட்சியா ? தாங்காதுடா தமிழ்நாடு ….
அதிமுக பொதுச்செயலாளராகவும் தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா இறந்ததும் இறந்தார் அதுவரை காலில் விழுந்து கிடந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தவர்கள் வீட்டுக்குள் அழைக்கப்படாத சொந்தங்கள் இன்னும் யார் யாரோ அதிமுக தங்களுக்குத்தான் சொந்தம் என்று சூளுரைத்தனர் .
பன்னிர்செல்வம் சசிகலா இருவரும் அதிமுகவை கைப்பற்ற போராடிக்கொண்டிருக்கும் வேளையில் ஜெயலலிதாவின் அண்ணண் மகளான தீபாவோ ஒருபடி மேலே போய் எம்ஜியார் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பினை உருவாக்கினார் .
தற்போது எல்லாவற்றிற்கும் ஒருபடி மேலே போய் தீபாவின் கணவரான மாதவன் தனி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக இன்று கூறுகின்றார் …
ஜெயலலிதாவின் சமாதிக்கு இவர்கள் போனாலே புதிதாக ஏதோ நடக்கப்போகிறது என்றே அர்த்தமாகிவிட்டது .தமிழக மக்களை நினைத்தால் தான் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை .
ஆனால் மாதவன் தன் பின்னால்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று கூறியதில் இருந்து ஒன்று மட்டும் தெளிவாக படுகின்றது இந்தியாவில் இரோம் ஷர்மிலாவின் பின்னால் மக்கள் இருக்கிறார்களோ இல்லையோ மாதவனை போன்றவர்களின் பின்னால் 90 கும் மேற்பட்டவர்களாவது தயங்காமல் நிற்பது சாபமே ….
பாமரன் கருத்து