வீட்டிலிருந்தே மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி ?

மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்க சொல்லியிருக்கிறது மத்திய அரசு . இதனை செய்ய அந்தந்த நிறுவங்களின் சேவை மையங்களுக்கு சென்று கைரேகையை வைத்து இணைக்க வேண்டிய நிலைமை இருந்துவந்தது . ஆகையால் வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்தனர் . பலர் ஆதாரை இணைக்க விருப்பமில்லாமல் இருந்துவந்தனர் .

எனவே மத்திய அரசு எளிமையாக வீட்டிலிருந்தபடியே ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்க எளிமையான வழிமுறையை கொண்டுவந்தது .இதன்படி பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் ஆதாரை மொபைல் எண்ணுடன் இணைக்க முடியும் .

இதற்கு தேவையானவை உங்களின் ஆதார் அட்டை மற்றும் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் (OTP அந்த எண்ணிற்குத்தான் வரும் )

மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைப்பது எப்படி (IVR):

Step 1 : எந்த எண்ணுடன் இணைக்க வேண்டுமோ அந்த மொபைலில் இருந்து 14546 என்ற எண்ணிற்கு கால் செய்யவும்

Step 2 : நீங்கள்நீந்தியரா , வெளிநாடுவாழ் இந்தியரா என கேள்வி கேட்கும் . நீங்கள் இந்தியராகா இருப்பின் 1 ஐ அழுத்தவும் .

Step 3 : பிறகு உங்கள் ஆதார் எண்ணை கேட்கும் . 12 இலக்க ஆதார் எண்ணை பதிவிடவும் .

Step 4 :  ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கத்தை பதிவிட சொல்லும் . தவறு செய்யாமல் பதிவிடுங்கள் . பிறகு 1 ஐ அழுத்தவும் .
Step 5 : உங்களுடைய டெலிகாம்  கம்பெனி UDAIக்கு ஆதார் தகவல்களை காண அனுமதி கேட்கும் . அந்த நேரத்தில் உங்களுக்கு UDAI இல் இருந்து OTP  வரும் .

Step 6 : அந்த OTP எண்ணை IVRஇல்  பதிவிடவும் .
Step 7 : பதிவிட்டவுடன்பஉங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் . அதில் உங்கள் ஆதார் எண்ணுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டுவிட்டது என இருக்கும்

இதனை பயன்படுத்தி உங்கள் மொபைல் எண்ணை வீட்டிலிருந்தே ஆதாருடன் இணையுங்கள் .

கேள்விகள் இருப்பின் கமெண்டில் பதிவிடுங்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *