ஆசிரியராக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் – சிறப்பு பகிர்வு

தற்போது ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே நடக்கும் மோதல்களை கசப்பான நிகழ்வுகளை களைந்து புரிந்துணர்வு ஏற்பட இந்த பதிவு உதவலாம்  

மாதா , பிதா , குரு , தெய்வம் என்கிற வரிசையில் தெய்வத்திற்கு முன்பாகவே முன்னுரிமை கொடுத்திருப்பது “ஆசிரியர்” என்னும் குருவிற்குத்தான் .
ஒரு சிறு நிகழ்விலிருந்து ஆசிரியரின் உயர்வை சொல்லலாம் என நினைக்கின்றேன் . 

முன்னால் இந்திய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அரசு முறை பயணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட் நாட்டிற்கு செல்கின்றார் . ஒரு நாட்டின் தலைவர் தங்கள் நாட்டிற்கு வரும்போது விமானத்திற்கு கீழே நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பது வழக்கம் . 

 

ஆனால் மஸ்கட் மன்னர் சுல்தான் காபூஸ் இந்திய விமானம் வந்தவுடன் படிக்கட்டுகளில் மேலே ஏறி சென்று இந்திய குடியரசு தலைவரை வரவேற்றார் . தங்களது காரில் ஏறி பயணம் செய்ய கீழே இந்திய குடியரசு தலைவரை அழைத்துவந்தார் . 

 

காரின் பின் இருக்கையில் இந்திய குடியரசுத்தலைவரை அமர வைத்துவிட்டு , காரின் முன்பக்கமாக சென்றார் மஸ்கட் மன்னர் . முன்பக்கமாக சென்று அமறுவார் என எதிர்பாத்தபோது , நேரே ஓட்டுனரிடம் சென்று நகருமாறு பணித்து காரை ஓட்ட ஆரம்பித்தார் . 

உலக வரலாற்றில் ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டின் தலைவருக்கு கார் ஓட்டுவது என்பது ஆச்சரியத்தை அளித்தது . இதற்கு முன்பாக மஸ்கட் க்கு வந்த அமெரிக்க அதிபருக்கு கூட இந்த அளவிற்கு மரியாதை கொடுக்கப்படவில்லை . 

விடுவார்களா செய்தியாளர்கள் ” அமெரிக்க அதிபருக்கு கூட அளிக்காத மரியாதையை இந்திய தலைவருக்கு ஏன் கொடுத்தீர்கள் என காரணம் கேட்டார்கள் ” அதற்கு சுல்தான் அளித்த பதில் ” நான் புனேவில் படித்த போது எனக்கு ஆசிரியராக இருந்தவர் இந்த சங்கர் தயாள் சர்மா . அவர் இந்திய தலைவராக மட்டும் இருந்திருந்தால் எப்போதும் போல சாதரண வரவேற்ப்பை கொடுத்திருப்பேன் . மஸ்கட்டின் மன்னராக இருந்தாலும் சங்கர் தயாள் சர்மா எனக்கு ஆசிரியர் நான் அவரின் மாணவன் ஆகையால் தான் வாகனத்தை ஓட்டி மரியாதை செய்தேன்” என்றார் . 

ஒருவர் எத்தனை பெரிய பொறுப்புகளை பெற்று வெற்றியின் உச்சத்துக்கே போனாலும் அவரது ஆசிரியருக்கு என்றுமே மாணவனாராகத்தான் தெரிவார் . ஆதலால் தான் இறைவனுக்கு முன்பாகவே குருவை வைத்தார்கள் சான்றோர்கள் . 

பெரிய பணக்காரராகவோ தொழில் அதிபராகவோ சாதனையாளராகவோ இருப்பதைவிட பல வெற்றியாளர்களை உண்டாக்கிடும் ஆசிரியராக இருப்பதே சிறந்தது . 

அப்படிப்பட்ட ஆசிரியராக இருப்பதில் பெருமை கொள்ளுங்கள் . 

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *