அமெரிக்காவிடம் இருந்து இதைமட்டும் கற்றுகொள்ள கூடாது …

உலகின் பெரும்பாலான நாடுகளும் மக்களும் அமெரிக்காவின் நாகரித்தையும் பண்பாட்டையும் நோக்கியே நகர்கின்றன .தெரிந்தோ தெரியாமலோ அதுதான் முன்னேற்றம் என்றும் அவை எண்ணுகின்றன …

அமெரிக்காவும் அதன் மக்களும் உலக நாடுகளின் எண்ணத்தை மெய்ப்பிப்பது போலவே நாகரிகத்திலும் கண்டுபிடிப்புக்களிலும் மற்ற நாடுகளுக்கு முன்பாகவே சென்றுவருகிறது .

ஆனால் இதுவரை எந்த அதிபரும் செய்ய துணியாத பெரும்பாலான அமெரிக்க  மக்கள் விரும்பாத மனிதத்தன்மையற்றa திட்டங்களை வெகுவேகமாக நிறைவேற்றி வருகின்றார் ..

ஒன்று சுவர் எழுப்பும் திட்டம் மற்றொன்று ஏழு நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய விதித்துள்ள தடை . அவை அனைத்தும் முசுலீம் நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது …அமெரிக்காவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பிறநாடுகளை  சேர்ந்தவர்களால் கட்டமைக்கப்பட்டது ..திறமை எங்கிருந்தாலும் அதை இனம் சாதி பராமல் விரும்பும் நாடாகவே அமெரிக்கா இருந்து வந்துள்ளது .

இப்போது அமெரிக்க அதிபர் எடுத்துள்ள இந்த முடிவினை முன்மாதிரியாக கொண்டு வெறெந்த நாடுகளும் இதுபோன்று செய்ய துணிந்துவிட கூடாது …

பாதுகாப்பு விசயங்களில் சமரசம் கூடாது என்றாலும் கூட ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அந்த இனத்தையும் சமூகத்தையும் ஒதுக்குவது மேலும் பிரச்சனையை அதிகரிக்குமே தவிர நன்மை பயக்காது …

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *