பெங்களூரு சாலைகளில் மஞ்சள் நிற கட்டங்கள்(Yellow Grids) ஏன் தெரியுமா ?

பெங்களூரு சாலைகளில் மஞ்சள் நிற கட்டங்கள்(Yellow Grids)

பெங்களூரு நகர சாலைகளில் பயணம் செய்தால் நிச்சியமாக மஞ்சள் நிற கட்டம் வாகன சிக்கனல்களில்  போடப்பட்டிருப்பதை காணாமல் கடந்துவிட முடியாது . அதற்கான அர்த்தம் தெரியாமல் நீங்கள் கடந்து சென்றால் கண்டிப்பாக அபராதம் கட்ட வேண்டியதுதான் .

பெங்களூரு காவல்துறை அதிக வாகன நெரிசல் இருக்க கூடிய சாலை நிறுத்தங்களில் மஞ்சள் நிறத்திலான கட்டங்களை சிறுது தூரத்திற்கு போட்டுள்ளது ..இதன்மூலமாக சுமூகமான வாகன பயணத்தையும் சாலையை நடந்து கடப்பவர்கள் எளிதாகவும் கடக்க வழிவகை ஏற்பட்டுள்ளது .

இது எப்படியென்றால் , மஞ்சள் விளக்கோ அல்லது சிகப்பு விளக்கோ எரியும் போது அந்த கட்டத்தின் வாயிலாக நடப்பவர்கள் மட்டுமே சாலையை கடந்திட வேண்டும் . அந்த நேரத்தில் எந்த வாகனமாவது மஞ்சள் கட்டம் வரை முன்னேறி கட்டத்தின் மீது நின்றால் அபராதம் கட்டாமல் செல்ல முடியாது .

அதேபோல பச்சை விளக்கு எரியும்போது வாகனத்தை மஞ்சள் கட்டத்தின் மீது நிறுத்தினால் அதுவும் அபராதம் கட்டக்கூடிய குற்றமே .

இப்போது போட்டிருக்கும் இந்த மஞ்சள் கட்டங்கள் முன்பு போடப்பட்டிருந்த ஒற்றை வெள்ளை கோடுகளுக்கு பதிலாகவே . முன்பு போடப்பட்டிருக்கும் வெள்ளை கோடுகளை வாகன ஓட்டிகள் எளிதில் தாண்டி நிறுத்தும் முறை அளவில்லாமல் நடந்து வந்தது .

இந்த மஞ்சள் கட்டங்கள் சாலையின் நிறுத்தங்களில்  போடப்பட்டிருக்கும் நோக்கமே நடந்து சாலையை கடப்பவர்கள் எந்தவித ஆபத்துமின்றி கடக்க வேண்டும் . வாகனங்கள் நெரிசல் இல்லாமல் மெதுவாக கடந்திட வேண்டும் என்பதே …

இதனை கண்காணிக்க கேமரா ஒவ்வொரு சிக்கனலிலும் போடப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகிறது .

வித்தியாசமான இந்த முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் …

நன்றி
பாமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *