நெடுவாசல் ஒரு வெற்றி போராட்டமா ?கற்றது என்ன ?

மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளின்படி நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்க பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . உண்மையாலுமே மத்திய மாநில அரசுகளின் வேண்டுகோளுக்காகவா இந்த போராட்டம் , அப்படியென்றால் ஏன் இத்தனை நாட்களாக யார் சொல்லியும் போராட்டத்தை கைவிடவில்லை ?

இந்த போராட்டம் போதிய எழுச்சியை உண்டாக்கி மத்திய மாநில அரசுகளுக்கு உண்மையான அழுத்தத்தை தர முடியாத காரணத்தினால் தான் கைவிடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர் நெடுவாசல் மக்கள் .

ஆம் , எப்படி சாதாரண கூலிவேலை செய்து குடும்பத்தை காப்பாற்றிடும் ஏழைகளால் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தை தொடர்ந்து நடத்திட முடியும் . அதுதான் அவர்கள் போராட்டத்தை கைவிட முக்கிய காரணமாக அமைத்திருக்கும் .இதுதான் எதார்த்தம் . இதனை நன்றாக உணர்ந்திட்ட மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தன .

ஜல்லிகட்டுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் எழுந்ததனால் மட்டுமே மத்திய மாநில அரசுகள் வேகமாக நடவெடிக்கை எடுத்தன .ஆனால் அந்த எழுச்சி நெடுவாசல் விசயத்தில் நடக்கவில்லை .

இதுதான் நமது ஒவ்வொரு தோல்விக்கும் காரணம் .நாம் அனைவரும் ஒற்றுமையாக போராடினால்தான் வெற்றி கிட்டும் .

நெடுவாசலில் மீண்டும் ஹைடிரோகார்பன் திட்டம் கொண்டுவந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் .

மேலும் மாநிலத்தின் எந்தவொரு பிரச்சனைக்கும் ஒற்றுமையோடு போராடிட வேண்டும் .

பாடம் கற்போம் …

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *