தட்டம்மை நோய்க்கு தடுப்பூசி – உண்மையை மக்களிடம் சொல்லவேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு , அச்சத்தை போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு …*

*தட்டம்மை நோய்க்கு தடுப்பூசி – உண்மையை மக்களிடம் சொல்லவேண்டிய பொறுப்பு மருத்துவர்களுக்கு , அச்சத்தை போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு …*

பிப்ரவரி 6 முதல் 28 வரை குழந்தைகள் மாணவர்கள் என அனைவருக்கும் தட்டம்மை (Measles Rubella) நோய்க்கான தடுப்பூசி(MR Vaccine) போடப்பட இருகின்றது ..இந்த தடுப்பூசியை கண்டிப்பாக அனைவரும் போடவேண்டும் என்று அரசு கூறுகின்ற அதேநேரத்தில் இந்த தடுப்பூசி போட்டால் பின்விளைவுகள் வரும் என்கிற செய்தியும் பொதுமக்களிடம் பரவி வருகின்றது .

*நான் மருத்துவராக இல்லை அதனால் இந்த மருந்தில் என்னென்ன குறைபாடுகள் உள்ளன , பின்விளைவுகள் ஏற்படுமா என்பதை ஆராய முடியவில்லை .*(சமூக அக்கறைக்கொண்ட மருத்துவர்கள் ஆராய்ந்து உண்மையை மக்களிடம் கூறலாம் ) அதேநேரத்தில் இந்த மருந்துகுறித்து இணையத்தில் படிக்க முயன்றபோது சில விசயங்கள் கிடைத்தன …

முதல் செய்தியாக , இந்த MMR vaccine ஜப்பானில் பின்விளைவுகளை ஏற்படுத்தியதால் இந்த தடுப்பூசி தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது .

சில செய்திகளில் , இந்த தடுப்பூசி மிகவும் நல்லதென்றும் சில நேரங்களில் ஒரு சிலருக்கு காய்ச்சல் வந்துபோகலாமென்றும் அதற்கு பாராசிட்டமால் போன்ற சாதாரண மாத்திரைகளை பயன்படுத்திகொள்ளலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது .

*அரசின் கடமை என்ன :*

மிகபெரிய அளவில் அடுத்த தலைமுறைகளான குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் போடப்படக்கூடிய இந்த மருந்தினை நீங்கள் சோதனை செய்யாமல் அனுமதிவழங்கியிருக்க வாய்ப்பில்லை …

இருந்தாலும் இப்போது பொதுமக்களிடம் சந்தேகம் வந்துவிட்டது .அதனை போக்கவேண்டியது அரசின் கட்டாய கடமை . ஆதலால் இந்த மருந்திணை இன்னும் பல மருத்துவ குழுக்களையும் ஆராய சொல்லி மக்கள் சந்தேகத்தை போக்க வேண்டும் .

குறிப்பாக ஜப்பானில் இந்த மருந்து தடைசெய்யப்பட்டுள்ளதாக உள்ள செய்தியில் கவனம் செலுத்தி இப்போது போடப்பட இருக்கும் தடுப்பூசி மேம்படுத்தப்பட்டதா இல்லை அதே மருந்தா என்பதனை மக்களிடம் கூறவேண்டும் …(https://vactruth.com/2016/06/23/japanese-government-bans-mmr-vaccine/)

*பொதுமக்கள் செய்யவெண்டியது :*

நமது அரசாங்கம் போலியோ தடுப்பூசியின் மூலமாக போலியோவை வெற்றிகரமாக ஒழித்துவிட்டது . இப்போது தட்டை அம்மைக்காக இறங்கியுள்ளது ..உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அரசிடமோ அருகில் இருக்ககூடிய மருத்துவர்களிடமோ தகவல்களை கேட்டுப்பெருங்கள் ..

உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் .

நோயில்லா தலைமுறையை உருவாக்குவோம் .

ஸ்ரீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *