மழை நேரங்களில் தூங்கும் உணர்வு ஏற்படுவது ஏன் தெரியுமா?
மழை என்பது பெரும்பாலானவர்களுக்கு பெரிதும் பிடித்தமான ஒன்று. மழை நேரங்களில் பேருந்தில் ஜன்னல் ஓரங்களில் வழிந்தோடும் நீரை பார்த்துக்கொண்டே பயணிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான விசயம். மழை நேரங்களில் வீட்டின் முற்றத்தில் குடும்பத்தோடு அமர்ந்து சூடான பண்டங்களை உண்டு மழையை ரசிப்பது சிலருக்கு பிடிப்பது உண்டு. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மழையை ரசித்துக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் மழைக்காலங்களில் அனைவருக்கும் பொதுவாக தோன்றக்கூடிய ஒரு உணர்வு ‘போர்த்திக்கொண்டு தூங்க வேண்டும்’ என்பது தான். ஏன் மழை நேரங்களில் தூங்கும் உணர்வு ஏற்படுகிறது என்பதைத்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
நீங்கள் எப்படி மழையை ரசிப்பீர்கள்? மழை பெய்திடும் போது நீங்கள் என்ன செய்ய விரும்புவீர்கள்? மழை நேரங்களில் தூங்க வேண்டும் என நீங்கள் நினைத்தது உண்டா? கமெண்டில் பதிவிடுங்கள்
மழை நேரங்களில் பொதுவாக அனைவருக்கும் தூங்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற சில காரணங்கள் இருக்கின்றன. அதில் முதல் காரணம், குறைவான சூரிய ஒளி. நம் உடலில் சூரிய ஒளி படும் போது மெலடோனின் குறைவாகவும் செரோடோனின் அதிகமாகவும் சுரக்கிறது. இது நம்மை விழிப்புடன் இருக்க தூண்டுகிறது. இதுவே சூரிய ஒளி குறைவான நேரங்களில் எதிர்மறையாக நடைபெறும். நமக்கு தூக்க உணர்வை ஏற்படுத்தும்.
மழை நேரங்களில் வெளிப்புறத்தில் ஏற்படும் ஈரத்தன்மையும் நமக்கு தூங்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட காரணமாக இருக்கிறது. மழை நேரங்களில் வெளிப்புறத்தில் இருக்கும் காற்று அழுத்தம் அழுத்தம் அதிகமாக இருக்கும். நம் உடலானது நிலைத்தன்மையை கொண்டுவர அந்த சமயத்தில் வேலை செய்ய வேண்டி இருக்கும். அதனால் நம் உடல் சற்று அயர்ந்துபோகும். இதனால் இன்னும் சற்று நேரம் தூங்கலாம் என்ற உணர்வு ஏற்படும்.
மழை ஏற்படுத்தக்கூடிய சத்தமும் நமக்கு தூங்க வேண்டும் என்கிற எண்ணத்தை விதைக்கிறது. மழை ஏற்படுத்தும் சத்தத்தை ஆங்கிலத்தில் pink noise என அழைக்கிறார்கள். இலைகள் அசைவது, காற்றின் சத்தம், நம்முடைய இதயத்துடிப்பு இவை அனைத்தும் இதற்குள் தான் அடங்குகிறது.
மழை நேரம் நமக்கு தூங்க வேண்டும் என்ற எண்ணத்தை மட்டும் விதைப்பது கிடையாது. மாறாக, எதிர்மறையான பல விசயங்களையும் அது ஏற்படுத்தவே செய்கிறது. சிலருக்கு Seasonal Affective Disorder என்ற பாதிப்பு இந்த சமயத்தில் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்தில் மன அழுத்தத்தில் அவர்கள் இருப்பார்கள். அதேபோல காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் எளிதாக மழை நேரங்களில் ஏற்படுவது உண்டு.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!