“UPSC Jihad” நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை | சேனல்களை கண்டித்த நீதிமன்றம்

ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை நோக்கி அவர்களை தவறானவர்கள் போல சித்தரிக்க முடியாது என கண்டித்து இருக்கிறது உச்சநீதிமன்றம்.

திட்டமிட்டு அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் பெருமளவில் இடம்பிடித்து உள்ளனர். மேலும் அவர்கள் ஊடுருவிக்கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு ஜிகாத் என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது சுதர்சன் எனும் இந்தி சேனல். உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்து இருக்கிறது.

விவாத நிகழ்ச்சிகளுக்கு தாறுமாறாக தலைப்பிடுவதும் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் தரக்குறைவாகவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாகவும் பேசிக்கொள்வது நாம் அன்றாடம் கண்டுவருகிற நிகழ்வாக மாறிப்போய் இருக்கிறது. அதிகம் பேர் தங்களது தொலைக்காட்சியை பார்க்க வேண்டும் என்ற நோக்கில் தான் பெரும்பாலும் வெறுப்புவாத விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றன சேனல்கள். அப்படியொரு நிகழ்ச்சியை நடத்திய சுதர்சன் எனும் இந்தி சேனலை கடுமையாக விமர்சித்து நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதித்து இருக்கிறது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றம் இந்த விசயத்தில் தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சுதர்சன் டிவி – உச்சநீதிமன்றம்

UPSC உள்ளிட்ட அரசுப்பணிகளில் முஸ்லிம்கள் திட்டமிட்டு பணிகளை பெற்றிருப்பதாகவும் பெற முயற்சிகள் செய்வதாகவும் கூறி “”Bindas Bol” எனும் நிகழ்ச்சியை நடத்தியது சுதர்சன் எனும் இந்தி டிவி. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கடுமையான கண்டிப்புக்கு பிறகு நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது “தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தற்போது அபத்தமாக நடைபெறுகின்றன. பாருங்கள், ஒரு சமூகத்தவர் சிவில் சர்வீஸ் பணிக்குள் நுழைவதை பற்றிய இந்த நிகழ்ச்சி எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ் பணிக்குள் நுழைகிறார்கள். அவர்களை கண்காணிக்க வேண்டும் என நிகழ்ச்சி நடத்துகின்றனர் என நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்.

“You cannot target one community and brand them in a particular manner”

இந்த தொலைக்காட்சிக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் “இந்த நிகழ்ச்சி இந்திய தேசிய பாதுகாப்பு தொடர்பான புலனாய்வு நிகழ்ச்சி” என கூறினார். அதற்கு நீதிபதிகள் “நன்றாக உங்களது கட்சிக்காரரின் நிகழ்ச்சியை பாருங்கள். தேசத்திற்கு அவர் கேடுதான் விளைவிக்கிறார். இந்தியா பன்முக தன்மை கொண்ட நாடு என்பதனை அவர் மறுக்கிறார்” என நீதிபதிகள் காட்டமாக தெரிவித்தனர்.

எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட மக்களை தவறானவர்களாக சித்தரிக்கும் முயற்சியே இது என கண்டித்த நீதிபதிகள் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப தடைவிதித்து உத்தரவிட்டனர்.

பத்திரிக்கை சுதந்திரம் இதுவல்ல!

இதுபோன்ற கட்டுரைகளை படிக்க எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திடுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *