The Psychology of Money Tamil Book | பணம் சார் உளவியல் புத்தகம்

பணத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்கு ஆயிரமாயிரம் புத்தகங்கள் இங்கே உள்ளன. ஆனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி கையாளுவது, எப்படி சேமிப்பது என்பதை தெரிந்துகொள்வதற்கு நீங்கள் ஓர் புத்தகத்தை வாசிக்க நினைத்தால் அந்த வரிசையில் முன்னால் இருக்கத் தகுந்த புத்தகம் இந்த பணம் சார் உளவியல் புத்தகம். ஆங்கிலத்தில் “The Psychology Of Money” என்ற புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு தான் இது.

திரைப்பட நடிகர் அரவிந்த் சாமி ஒரு நேர்காணலில் இந்தப் புத்தகத்தை இளைஞர்கள் படிக்க வேண்டும் என சொன்னபிறகு பலரும் இந்த புத்தகத்தை தேடி படிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நீங்களும் படிக்க விரும்பினால் இங்கே டவுன்லோட் செய்வதற்கான லிங்க் உள்ளது.

இன்பமான வாழ்க்கைக்கு பணம் முக்கியமல்ல என பலர் பேசுவார்கள். ஆனால், அப்படி சொல்கிறவர்களை கவனித்து பார்த்தால் அவர்களிடம் போதிய அளவில் பணம் இருக்கும். அதற்கு பின்பு தான் ஞானம் வந்தது போல பேசுவார்கள். இந்த உலகில் வாழ்வதற்கே குறிப்பிட்ட அளவு பணம் இருக்க வேண்டும். தேவைக்கு ஏற்ப எவ்வளவு பணம் தேவை என்பதில் மாற்றம் இருக்கலாம். ஆனால், முற்றிலும் பணம் இல்லாமல் எவராலும் இருக்க முடியாது.

The Psychology Of Money Tamil Book PDF Download

Amazon இல் மிகவும் குறைந்த விலைக்கே இந்தப் புத்தகத்தை வாங்க முடியும். உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் இந்த புத்தகத்தை வாங்கிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்திடுங்கள்.

Buy At Amazon – Check Price

இந்த உலகில் பலதரப்பட்ட மக்களை நாம் பார்க்கலாம். பின்தங்கிய நிலையில் இருந்து வந்து கடினமாக உழைத்து சிறுக சிறுக சேமித்து மேலே வந்தவரும் இங்கு இருப்பார். பணம் கொட்டிக் கிடக்கும் நிலையில் இருந்து அதள பாதாளத்திற்கு வந்தவரும் இங்கு இருப்பார். இந்த இருவருக்கும் இடையே இருக்கும் ஒரே வித்தியாசம் அவர்கள் பணத்தை எப்படி கையாண்டார்கள் என்பது தான்.

இந்தப் புத்தகம் பணம் சம்பாதிக்கும் வித்தையை உங்களுக்கு விளக்குவதை விடவும், பணம் உங்களிடம் வந்தபிறகு உங்களுக்குள் என்ன மாற்றம் நிகழும், நீங்கள் அதை எப்படி புரிந்து வைத்திருக்க வேண்டும், அதை மேம்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை என்ன, செய்யக்கூடாதவை என்ன, அளவிற்கு அதிகமாக பணம் சேரும் போது உங்களுக்கு வரக்கூடிய தடுமாற்றம் என்ன என்பதை எல்லாம் பற்றி தெளிவாக விளக்குகிறது.

இன்றைய இளையோருக்கு தேவையான முக்கியமான விசயம் பற்றியும் ஆசிரியர் விளக்கி இருக்கிறார். நம்முடைய வருமானம் அதிகரிக்கும் போது நம்முடைய வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொள்ளக் கூடாது. அப்படி மாற்றும் போது செலவினம் அதிகரிக்கும். நம்முடைய வருமானம் அதிகரித்தும் அதனால் பலன் ஏதும் இருக்காது. தற்போது மக்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கிக்கொள்ள மிக முக்கியக்காரணம் தற்பெருமை தான்.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக நாம் செய்யக்கூடிய ஆடம்பர செலவு மாதிரியான முட்டாள்தனம் வேறு இருக்கவே முடியாது. உங்களுக்கு வரக்கூடிய வருமானம் குறைய ஆரம்பிக்கும் போது நீங்கள் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படுவீர்கள். அப்போது உங்களுக்காக யாரும் கை கொடுக்க தயாராக இருக்க மாட்டார்கள். உங்களுக்கு உங்கள் சேமிப்பு மட்டுமே ஒரே துணை. இதை இந்தப் புத்தகம் ஆணித்தரமாக எடுத்து உரைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *