வேரில் பழுத்த பலா – படிக்க வேண்டிய புத்தகம்

சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா நாவல், சமூக நியாயம், ஊழல் மற்றும் தனிமனிதனின் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, நம்மை சிந்திக்க வைக்கும் ஒரு சிறந்த படைப்பு.

Read more

ரசவாதி புத்தகம் யார் வாசிக்கலாம்? | The Alchemist Tamil Book Review

ரசவாதி என்கிற புத்தகத்தின் பெயரைப் பார்த்தவுடன் இது ஏதோ மந்திரம் சார்ந்த நூல் என்றோ வேதியியல் சார்ந்த நூல் என்றோ நினைத்துவிட வேண்டாம். வாழ்க்கையின் விளிம்பு நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாது இருந்தாலும் குறிக்கோளில் ஆழமான காதலும் அடைய முடியும் என்கிற நம்பிக்கையும் இருந்தால் உங்களுக்கு உதவிட இந்த பிரபஞ்சமே வரிந்து கட்டிக்கொண்டு வரும் என்பதை நிரூபிக்கும் ஒரு நாவல் தான் இந்தப்புத்தகம். நிச்சயமாக உங்களது அலமாரியை அலங்கரிக்க வேண்டிய ஒரு புத்தகம் தான்.

Read more

பங்குச்சந்தை பற்றிய அறிய சூப்பர் புத்தகம் : அள்ள அள்ளப் பணம் – சோம.வள்ளியப்பன்

ஸ்மார்ட் போன், ஆன்லைன் பண பரிவர்த்தனை போன்ற வசதிகள் காரணமாக யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் முதலீடு செய்திட முடியும். ஆனால், அனைவராலும் வெற்றி பெற முடிவதில்லை என்பதே எதார்த்தம். நீங்கள் வெற்றிபெற வேண்டும் என நினைத்தால் பங்கு சந்தையின் ஒவ்வொரு அம்சத்தையும் அறிய வேண்டியது அவசியம். அதற்கு சரியான புத்தகம் சோம.வள்ளியப்பன் எழுதிய அள்ள அள்ளப் பணம் என்ற புத்தகம்.

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் | மருதன் | Sherlock Holmesaal Theerka Mudiyatha Puthir

வித்தியாசமான தலைப்புகளில் பல கட்டுரைகளை தாங்கி வந்துள்ளது இந்தப்புத்தகம். சிறிய விசயங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு எப்படி நெடுங் கட்டுரைகளை படைக்க முடியும் என்பதற்கோர் உதாரணம் இது. எழுத்து குறித்து ஆர்வம் உள்ளவர்கள் , எழுத நினைப்பவர்கள்,அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

புத்தகம் : ஷெர்லாக் ஹோம்ஸ்ஸால் தீர்க்க முடியாத புதிர்

எழுத்தாளர் : மருதன்

விலை : ரூ 178

Read more

என் இனிய இயந்திரா | சுஜாதாவின் சூப்பரான புத்தகம் | Sujatha Book

என் இனிய இயந்திரா : தமிழ் எழுத்துலகில் சுஜாதா அவர்களுக்கு என்றுமே ஓர் நிரந்தர இடம் உண்டு. அவர் சிந்திக்கும் விதமும் தொழில்நுட்பங்களை தனது கதைகளுக்கு உள்ளாக புகுத்திடும் விதமும் பலரையும் ஈர்த்தது.

Read more

மரப்பாச்சி சொன்ன ரகசியம் | குழந்தைகள் பெற்றோர்கள் படிக்க வேண்டிய புத்தகம்

ஒரு குழந்தை தனக்கு நடந்ததை தனது பெற்றோர், ஆசிரியர் ஆகியோரிடத்தில் எந்தவித அச்சமும் தயக்கமும் இன்றி தைரியமாக சொல்லும் மன பக்குவத்தோடு வளர்க்கப்பட்டால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க முடியும் என்ற கருத்தை விதைக்கிறது மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகம்

Read more

ஒரு புளியமரத்தின் கதை நாவல் | சுந்தரராமசாமியின் வாசிக்க வேண்டிய நாவல்

ஒரு புளியமரத்தின் கதை”, நவீன இலக்கிய வாசகர்கள் மத்தியில் மாளா புகழ் பெற்ற நாவல். ஒரு புதினம் பல்லாண்டுகளாக விரும்பி வாசிக்கப்படுபவையாக இலக்கியசூழலில் இருப்பதே சிறப்பான ஒன்றுதான். “தானுண்டு தன் வேலையுண்டு என நின்றுகொண்டிருக்கும் ஒரு புளியமரத்தின் வீழ்ச்சியை சொல்வது தான் இந்த நாவலின் மையம்.” கிளை பரப்பி, பூ பூத்து, காய் காய்த்து, பழம் பழுத்து, நிழலுக்கு ஒதுங்கும் பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் பண்டமாக மாறி மீண்டும் தனது விதையினால், சந்ததியினரை தோற்றுவிக்கும் சிறந்த வேலையை செம்மையாக செய்துவந்த ஒரு அப்பாவி புளியமரத்தின் வாழ்வினையும், வீழ்ச்சியையும் பேசிச்செல்கிறது இந்த நாவல். தொன்றுதொட்டு ஒன்றுமறியா அப்பாவி ஜீவராசிகளின் உயிர்கள் காவுவாங்கப்படுவது புராண இதிசாகங்கள் தொடங்கி, உலக யுத்தகாலகட்டங்கள் வரை, ஏன் இன்றும் நடத்தப்படுகிறது. அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கான நீதியானது, அடிவானம் மாதிரி எங்கோ தொடமுடியாத தூரத்திலேயே இருக்கிறது. அப்படி, நீதி மறுக்கப்பட்ட ஜீவராசியான புளியமரத்தின் கதையினைத் தான் தூலமானதாக ஆக்குகிறது இந்நாவல்.

Read more

வால்காவிலிருந்து கங்கை வரை | மனித சமுதாய வரலாற்றை அறிய உதவும் புத்தகம்

ராகுல்ஜி என்றழைக்கப்படும் ராகுல சாங்கிருத்யாயன் 1943 ஆம் ஆண்டில் “வால்காவிலிருந்து கங்கை வரை” என்ற நூலை எழுதினார். இவர் புத்த பிக்குவாக இருந்து பிறகு அதிலிருந்து விலகி மார்க்சியத்தை ஏற்று மார்க்சியவாதியாக தன்னை அறிவித்துக் கொண்டவர். இந்நூல், மனிதர்கள் ஆதிவாசிகளாக(புராதன ஆதிப் பொதுவுடமைச் சமூகம்) வாழ்ந்து கொண்டிருந்த கி.மு. 6000-ல் ஆரம்பித்து கி.பி. 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வரையில் நீள்கிறது. மொத்தம் 20 கதைகளில் இந்த வரலாற்றை இந்நூல் கூறுகிறது.

Read more

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! நேர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் புத்தகம்

விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்கள் அனைவருக்கும் பரிட்சயமானவர் கோபிநாத். ஆனால், அதற்கு முன்னரே பல்வேறு முன்னனி செய்தி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். விஜய் டிவியின் நீயா? நானா? நிகழ்ச்சி மட்டுமல்லாது பல்வேறு சேனல்களுக்காக எண்ணற்ற சாதனையாளர்களை சந்தித்து உள்ளார். அப்படி அவர் சந்தித்த சாமானியர்கள், சாதனையாளர்கள் ஆகியோரிடமிருந்து பெற்ற அனுபவங்களை எளிமையாக சாமானியர்களும் புரிந்துகொள்ளும் விதத்தில் இந்தப் புத்தகத்தில் தந்துள்ளார். ஆர்ப்பாட்டம் இல்லாத எழுத்துக்கள் நேர்மறை சிந்தனைகளை சுமந்துள்ளன.

Read more

வீடில்லாப் புத்தகங்கள் | ஒரே புத்தகத்தில் நூறு புத்தக அறிமுகங்கள் | எஸ்.ராமகிருஷ்ணன்

சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எந்த ஊருக்கு சென்றாலும் பழைய புத்தகக் கடைகளை தேடிச்சென்று புத்தகங்கள் வாங்குவது என்பது அலாதி பிரியம். அவர் அப்படி பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களை பற்றிய பல விசயங்களை நேர்த்தியாக வாசகர்களுக்கு தந்திருக்கும் புத்தகம் தான் “வீடில்லாப் புத்தகங்கள்”

Read more