அனு குமாரி IAS வெற்றிக்கதை | Anu Kumari IAS Success Story

ஐஏஎஸ் அதிகாரியான அனு குமாரி, ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாக்பூரில் உள்ள ஐஎம்டியில் எம்பிஏ (நிதி மற்றும் சந்தைப்படுத்தல்) முடித்துள்ளார்.படித்து முடித்த பின்பு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். அவர் பார்த்த வேலைக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் கூட அவரால் அந்த வேலையை செய்திட முடியவில்லை. அதில் அவருக்கு ஒரு திருப்தி கிடைக்கவே இல்லை. அவருக்கு UPSC தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது.

Read more

வாழ்க்கையை பிடித்ததாக மாற்றுவது எப்படி? உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போடும் ஒரு கட்டுரை இது

உங்கள் மனதுக்கு விருப்பமான வேலையை செய்திடும் போது தான் வாழ்க்கை உங்களுக்கு பிடித்தமானதாக மாறுகிறது. தனக்கு பிடித்தமானது இதுதான் என்று தெரிந்தும் பல்வேறு சூழல்களால் வெவ்வேறு வேலைகளில் தங்களை மூழ்கடித்துக்கொண்டவர்கள் இங்கே பலர் உண்டு. ஆனால், தனக்கு எது பிடித்தமானது என்பதை கண்டறிய முடியாமலேயே பலர் பல வேலைகளை செய்வார்கள். அவர்கள் தான் உண்மையிலேயே மிகவும் பரிதாபமானவர்கள். நீங்களும் அத்தகைய சிக்கலில் இருந்தால், உங்களுக்கு எது பிடித்தமானது என்பதை அறிவதிலேயே சிக்கல் இருந்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பலன் தரும்.

Read more

வெயிட்டர் டு ஐஏஎஸ் ஆபிசர் | ஜெய்கணேஷ் ஐஏஎஸ் வெற்றிக்கதை

வறுமையால் வாடும் பலருக்கு கல்வி என்பது பெரிய அளவிலான மாற்றத்தை நிகழ்த்தி இருக்கிறது. அது கல்வியால் மட்டுமே செய்திட முடிந்த ஒரு விசயம். ஏழ்மையான நிலையில் உள்ள பலருக்கு மிகப்பெரிய படிப்புகளை படிக்கவும் மிகப்பெரிய வேலைகளில் சேர முயற்சிப்பதிலும் பெரிய தயக்கம் இருக்கிறது. “நம்மால் இதெல்லாம் முடியுமா?” என்ற அவர்களின் சந்தேகத்தை உடைத்தெறிய பல எளியவர்களின் வெற்றிக்கதைகள் இந்த சமூகத்தில் உண்டு. அதிலே ஒன்று தான் ஜெய்கணேஷ் ஐஏஎஸ் அவர்களின் வெற்றிக்கதை.

Read more

வெற்றி பெற்றவர்கள் புரிந்துகொண்ட 10 உண்மைகள், மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லை

இங்கே அனைவரும் வெற்றிக்காகத்தான் போராடுகிறோம். 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற்றவர்களை நீங்கள் பட்டியலிட்டு அவர்களது கடந்த காலத்தை கவனித்துப் பார்த்தால் அதிலே அவர்கள் பல தோல்விகளை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அதே தோல்வியை சந்தித்த பலர் காணாமல் போயிருக்கும் போது சிலர் மட்டும் எப்படி வெற்றியாளர்களாக மாறினார்கள் என யோசித்தால் ‘அவர்கள் உண்மைகளை புரிந்துகொண்டவர்கள்’ என்பது புலப்படும். நீங்களும் வெற்றிக்காக போராடுகிறவர் எனில் பின்வரும் உண்மைகளை புரிந்துகொள்ளுங்கள்.

Read more