பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

Read more

நடிப்புச் சுதேசிகள் – போலியானவர்களை விளாசித்தள்ளும் பாரதியார் கவிதை

பாரதியார் ஏன் போற்றப்படுகிறார் என்பதற்கும் பாரதியார் கவிதைகள் இன்றளவும் ஏன் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்கும் ஒரே காரணம், தேசத்தின் சமூகத்தின் அவலங்களை குறைகளை தன் கவிதைகளில் கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமில்லாமல் எப்படி இந்த தேசமும் மக்களும் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு எழுதியதால் தான். அப்படிப்பட்ட கவிதைகளில் ஒன்று தான் பாரதியார் எழுதிய “நடிப்புச் சுதேசிகள்” என்ற கவிதை. பாரதி வாழ்ந்த காலத்தில் போலியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களை கடுமையாக விமர்சித்து எழுதியது தான் இக்கவிதை.

Read more

பாரதியார் கவிதைகள் : பாரத தேசம் – உரை விளக்கம்

பாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், அவருடைய தேசப்பற்று, தன் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற விசாலமான பார்வை நமக்கு எளிதில் புலப்படும். பாரதியார் கவிதைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு வை.ஏ. மூர்த்தி அவர்கள் சிறப்பான உரை விளக்கம் எழுதி இருக்கிறார். பாரதி பாடல்கள் உரை விளக்கம் என்ற அந்த புத்தகம் மிகவும் பழமையான புத்தகம். அதை நான் படித்து மகிழ்ந்தது போல நீங்களும் படித்து மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு அதை இங்கே தருகிறேன்.

Read more