பொன்னியின் செல்வன் | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

அமரர் கல்கி (1899-1954) எழுதிய புகழ் பெற்ற தமிழ் வரலாற்றூப் புதினமாகும் பொன்னியின் செல்வன் [Ponniyin Selvan PDF] . 1950 – 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப் புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது.

புத்தகம் : பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்
ஆசிரியர்: கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

Download/Buy Here : Link 1 : பொன்னியின் செல்வன்

Download/Buy Here : Link 2 : பொன்னியின் செல்வன்


பின்வரும் ஐந்து பாகங்களை கொண்டது பொன்னியின் செல்வன்

முதல் பாகம் – புது வெள்ளம்
இரண்டாம் பாகம் – சுழற்காற்று
மூன்றாம் பாகம் – கொலை வாள்
நான்காம் பாகம் – மணிமகுடம்
ஐந்தாம் பாகம் – தியாக சிகரம்

நீங்கள் இணையத்தளத்திலோ உங்கள் மொபைல் போனிலோ தரவிறக்கம் செய்து முழு புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் புத்தகத்தினை வாங்கி படித்தால் நிச்சயமாக அது புது அனுபவத்தை தரும்.

கற்பனை வளம் :

நீங்கள் உங்களது கற்பனை வளத்தை பெருக்க வேண்டுமானால் அதற்க்கு இந்நூலினை படிப்பது சரியானதாக இருக்கும். நூலின் நாயகன் வந்தியத்தேவன் ஒவ்வொரு பகுதியை கடக்கும்போதும் நூலின் ஆசிரியர் அதனை விவரித்து இருக்கும் அழகே தனி. ஏரியை அறிமுகபடுத்த…

“தொண்டை நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் இடையில் உள்ள திருமுனைப்பாடி நாட்டின் தென்பகுதியில், தில்லைச் சிற்றம்பலத்துக்கு மேற்கே இரண்டு காததூரத்தில், அலை கடல் போன்ற ஓர் ஏரி விரிந்து பரந்து கிடக்கிறது. அதற்கு வீரநாராயண ஏரி என்று பெயர். அது தெற்கு வடக்கில் ஒன்றரைக் காத நீளமும் கிழக்கு மேற்கில் அரைக் காத அகலமும் உள்ளது. காலப்போக்கில் அதன் பெயர் சிதைந்து இந்நாளில் ‘வீராணத்து ஏரி’ என்ற பெயரால் வழங்கி வருகிறது.புது வெள்ளம் வந்து பாய்ந்து ஏரியில் நீர் நிரம்பித் ததும்பி நிற்கும் ஆடி ஆவணி மாதங்களில் வீரநாராயண ஏரியைப் பார்ப்பவர் எவரும் நம்முடைய பழந்தமிழ் நாட்டு முன்னோர்கள் தங்கள் காலத்தில் சாதித்த அரும்பெரும் காரியங்களைக் குறித்துப் பெருமிதமும் பெரு வியப்பும் கொள்ளாமலிருக்க முடியாது. “

பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்ய :

நீங்கள் இணையதளத்தில் பொன்னியின் செல்வன் படிக்க :

மொபைல் போனில் தரவிறக்கம் செய்ய : https://play.google.com/store/apps/details?id=com.whiture.apps.tamil.kalki.ponniyin&hl=en

ஆன்லைனில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்க :

Download/Buy Here : Link 1 : பொன்னியின் செல்வன்


மிகப்பெரிய நாவலாக பொன்னியின் செல்வன் இருந்தாலும் படிக்க படிக்க உங்களது ஆவலை கூட்டிகொண்டே செல்லுமே தவிர சலிப்படைய செய்யாது. ஒருமுறையேனும் பொன்னியின் செல்வன் படித்துவிட்டால் உங்களது கற்பனை திறன் கண்டிப்பாக ஒருபடியேனும் கூடும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “பொன்னியின் செல்வன் | கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *