பள்ளித் தேர்வில் தோல்வி ஆனால் முதல் முயற்சியிலேயே IAS தேர்வில் வெற்றி | அஞ்சு ஷர்மாவின் வெற்றிக்கதை
தோல்வி அடைந்தவர்கள் முயற்சிக்கும் போது மாபெரும் வெற்றியை பெற முடியும் என்பதற்கு அஞ்சு ஷர்மா மிகச்சரியான உதாரணம். இவர் பள்ளித் தேர்வில் சில பாடங்களில் தோல்வி அடைந்தவர். ஆனால் அதற்கு பிறகு தனது தீவிர முயற்சியினால் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி அடைந்து IAS அதிகாரியானார்.
யுபிஎஸ்சி தேர்வுகளை முறியடிப்பது என்பது சாதாரண விசயமல்ல. ஏனெனில் இது நாட்டின் கடினமான தேர்வுகளில் ஒன்றாகும். சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற கடின உழைப்பும் பொறுமையும் தேவை. 12ஆம் வகுப்பில் சில பாடங்களில் தோல்வியுற்ற ஐஏஎஸ் அதிகாரி அஞ்சு ஷர்மா, 22 வயதில் UPSC தேர்வில் வெற்றி பெற்று, தோல்வியை வெற்றியாக மாற்றியதைப் பற்றி இன்று பேசுவோம்.
அஞ்சு ஷர்மா 12 ஆம் வகுப்பில் பொருளாதார பாடத்தில் தோல்வியுற்றார், மேலும் 10 ஆம் வகுப்பில் வேதியியலில் முன் தேர்வுகளில் தோல்வியடைந்தார். இருப்பினும், மற்ற பாடங்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்றார். இருப்பினும், தனது வாழ்க்கையில் நடந்த இந்த இரண்டு சம்பவங்களும் தனது எதிர்காலத்தை வடிவமைத்ததாக அவர் கருதுகிறார். ஒருமுறை ஒரு முன்னணி நாளிதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, “எனது பள்ளித்தேர்வுகளின் போது தேர்வு வந்தால் மட்டுமே படிக்கும் வழக்கம் கொண்டிருந்தேன். இதனால் தேர்வு காலங்களில் நான் படிக்க வேண்டிய பாடங்கள் அதிகமாக இருந்தன. சாப்பிட்ட பிறகு நான் தேர்வை நினைத்து அஞ்ச ஆரம்பித்தேன். நான் சரியாக படிக்கவில்லை என்பதனால் எனக்கு பயம் அதிகமானது. மேலும், என்னை சுற்றி இருந்தவர்களும் 10 வகுப்பு போன்ற பெரிய தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகக்கடினம் என்ற கருத்தை விதைத்துக்கொண்டே இருந்ததும் இதற்கு காரணம்.
இந்த கடினமான நேரத்தில், அவளுடைய அம்மா அவருக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தார். கடைசி நிமிட படிப்பை நம்பி இருக்கக்கூடாது என்ற பாடத்தையும் கற்றுக்கொடுத்தார். எனவே அவர் ஆரம்பத்திலிருந்தே கல்லூரித் தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார், இது அவர் கல்லூரியில் தங்கப் பதக்கம் வெல்ல உதவியது. ஜெய்ப்பூரில் பிஎஸ்சி மற்றும் எம்பிஏ முடித்தார்.
இந்த யுக்தி முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் வெற்றி பெற உதவியது. அவர் தனது பாடத்திட்டத்தை முன்கூட்டியே முடித்து ஐஏஎஸ் டாப்பர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். அஞ்சு 1991 இல் ராஜ்கோட்டில் உதவி கலெக்டராக தனது பணியைத் தொடங்கினார். தற்போது பல்வேறு முக்கிய பணிகளில் அவர் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
தோல்வியில் துவண்டு விடாமல் கடின முயற்சியினால் மாபெரும் தேர்வில் தேர்ச்சி அடைந்த அஞ்சு எப்போதும் இளையவர்களுக்கு ஓர் முன்மாதிரி.
கடினமான சூழலில் IAS அதிகாரிகளாக ஆனவர்கள் வெற்றிக்கதையை இங்கே படிக்கலாம்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்